Tuesday, July 29, 2014

நூலின் பக்கங்களின் பக்கம்

யோபு நூலில் மொத்தம் 42 அதிகாரங்கள் உள்ளன. இந்த நூலை நாம் எப்படிப் பிரிக்கலாம்?

அ. இன்பம் துன்பமாகிறது. (1-3)
ஆ. துன்பம் ஏன்? கேள்வியும் பதிலும். (4-37)
இ. துன்பம் இன்பமாகிறது. (38-42)

அ. இன்பம் துன்பமாகிறது (1-3)
க. யோபுவின் செல்வம் (1:1-5)
ங. யோபுவுக்கு நேர்ந்த இழப்பு (1:6-2:13)
ச. யோபுவின் குழப்பம் (3)

ஆ. துன்பம் ஏன்? கேள்வியும் பதிலும் (4-37)
க. முதல் சுற்று உரையாடல் (4-14)

  • எலிப்பாசு (4-5), யோபுவின் பதில் (6-7)
  • பில்தாது (8), யோபுவின் பதில் (9-10)
  • சோப்பார் (11), யோபுவின் பதில் (12-14)

ங. இரண்டாம் சுற்று உரையாடல் (15-21)

  • எலிப்பாசு (15), யோபுவின் பதில் (16-17)
  • பில்தாது (18), யோபுவின் பதில் (19)
  • சோப்பார் (20), யோபுவின் பதில் (21)

ச. மூன்றாம் சுற்று உரையாடல் (22-31)

  • எலிப்பாசு (22), யோபுவின் பதில் (23-24)
  • பில்தாது (25), யோபுவின் பதில் (26-31)

ஞ. இளவல் எலிகுவின் உரை (32-37)

  • யோபுவின் நண்பர்களின் தவறு (32)
  • யோபுவின் தவறு (33)
  • கடவுளின் நீதியும், நன்மைத்தனமும், மேன்மையும் (34-37)


இ. துன்பம் இன்பமாகிறது (38-42)
க. கடவுள்-யோபு உரையாடல் (38-42:6)
ங. யோபு அனைத்தையும் திரும்பப் பெறல் (42:7-17)

யோபு நூலின் அமைப்பு ஒரு சான்ட்விச் போன்றது. மேலும் கீழும் பிரட், இடையில் காய்கறி என்பது போல, மேலும் கீழும் யோபுவின் மேன்மை, இடையில் துன்பம் குறித்த நீண்ட உரையாடல். இந்த நூல் அமைப்பே நம் வாழ்வின் எதார்த்தத்தை பிரதிபலிப்பதாக இருக்கின்றது. வாழ்க்கை ஒரு சக்கரம். இன்று கீழே இருப்பது மேலே வரும். இன்று மேலே இருப்பது நாளை கீழே போகும். அனைத்தையும் ஒன்றாகுப் பார்க்கும் மனப்பக்குவமே ஞானம்.

கவிஞர் கண்ணதாசன் அழகாகச் சொல்வார்:

'கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்.
அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்.
உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா.
இதை உணர்ந்து கொண்டால் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா.'


1 comment:

  1. யோபு நூலைப்பற்றிய முன்னோட்டத்தை விட இன்று என்னைக் கவர்ந்தது 'கண்ணதாசனின்' வரிகள்தான்.தாங்கள் உலக இச்சைகள் அத்தனையையும் துறந்து விட்டதாகச் சொல்லும் மனிதர்கள் மத்தியில் ஆசாபாசங்களின் மொத்த உருவமாகச் சித்தரிக்கப்பட்ட ஒரு மனிதனுக்குள்ளும் ஒரு' யோபு' வாழ்ந்திருக்கிறார் என்பதையே காட்டுகின்றன இவ்வரிகள்.என் கண்களைப் பனிக்கச்செய்த வரிகளை ஞாபகப்படுத்திய தங்களுக்கு நன்றிகள் தந்தையே!

    ReplyDelete