Monday, April 25, 2016

திருத்தூதர் பணிகள்

முதல் ஏற்பாட்டு பெண்களின்மேல் நாம் பதித்த பார்வை போதும்.

இன்று முதல் ஒரு புதிய முயற்சியைத் தொடங்குவோம்.

'முப்பது ஆண்டுகள்' என்று தற்போதைக்கு தலைப்பிட்டுக் கொள்வோம்.

கி.பி. 33 முதல் 64ஆம் ஆண்டுக்குள் என்ன நடந்தது என்பதுதான் நம் தேடல். நம் தேடல் 'கிறிஸ்தவத்தின் வேர்கள்.' நம் தேடலுக்குத் துணையாக இருப்பது 'திருத்தூதர் பணிகள்' நூல்.

இன்று உலகில் அதிகம் பேர் பின்பற்றும் நம்பிக்கையாக இருக்கிறது கிறிஸ்தவம். அது மட்டுமல்ல, உலகின் நாகரீகம், கலாச்சாரம், மருத்துவம், அரசியல் என எல்லாவற்றின்மேலும் இதன் தாக்கம் இருந்து வருகிறது.

'திருத்தூதர் பணிகள்' பற்றிய ஒரு விளக்கவுரை அல்ல இது.

இந்த நூலை சில கேள்விகளோடு பார்ப்போம்:

1. மிகக்குறுகிய காலத்தில் உலகத்தின் வரலாற்றைத் தலைகீழாக மாற்றிய இவர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
2. அவர்கள் செய்தது போல இன்று நம்மால் ஏன் செய்ய முடியவில்லை?
3. உலகின் முகத்தை மாற்றிய இந்த மக்கள் யார்?
4. அவர்கள் என்ன போதித்தார்கள்?
5. எதற்காக அவர்கள் எதிர்க்கப்பட்டார்கள்?
6. அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள்?
7. அவர்களின் சமூக அக்கறை, செபம், முதன்மையான தேடல்கள் எவை?
8. சீடத்துவம், தலைமைத்துவம், திருஅவை வாழ்க்கை, தூய ஆவி பற்றிய அவர்கள் புரிதல் என்ன?

அவர்களிடமும் பிரிவினைகள் இருந்தன. அவர்களும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டார்கள்.

இருந்தாலும் அவர்கள் நமக்கு நிறையவே கற்றுக்கொடுக்கிறார்கள்.

அவர்கள் யார்? அவர்களின் பின்புலம் என்ன? அவர்கள் சந்தித்த பிரச்சினைகள் எவை? என்ற நம் தேடலில், நாம் அவர்களைப் போல இருக்க முடியவில்லையென்றாலும், அவர்கள் விட்டுச் சென்ற தடங்களை வைத்து நம் காலத்து நிகழ்வுகளுக்கு தீர்வு காண முடியுமா? என்று யோசிப்போம்.

1 comment:

  1. முதல் ஏற்பாட்டுப் பெண்களைப்பற்றியத் தேடலைத் தொடர்ந்து ' முப்பது ஆண்டுகள்' எனும் தலைப்பின்கீழ் கி.பி 33 முதல் 64 வரை நடந்த நிகழ்வுகளின் தேடலுக்கு அழைப்பு விடுக்கிறார்தந்தை.நம் தேடல் 'கிறிஸ்தவத்தின் வேர்கள்.' நம் தேடலுக்குத் துணையாக இருப்பது 'திருத்தூதர் பணிகள்' நூல்.ஆரம்பமே அமர்க்களம்! இன்று உலகின் அநேகம் பேருக்கு ஏன் நமக்குமே நம்பிக்கையாகவும்,உலக நாகரீகம்,மருத்துவம்,கலாச்சாரம்,அரசியல் ..இவற்றின் தாக்கமாகவும் உள்ள கிறிஸ்தவத்தைப் பற்றிய ஒருவிழிப்புணர்வா, இல்லை திருத்தூதர் நமக்குக் கற்றுக்கொடுத்தவைகளின் விளக்கவுரையா... இல்லை என்கிறார் தந்தை.இது....பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம்.தந்தை கொடுத்திருக்கும் வினாக்கள் பட்டியலின் துணையோடு நாமும் தேடுவோம்; முடிந்தால் அவற்றின் பின்னனியில் நம் கால நிகழ்வுகளுக்குத் தீர்வு காண முயற்சிப்போம்.தந்தையே! தங்களின் புதிய முயற்சியை வரவேற்கிறோம் எனக் கூறும் அதே வேளையில் தங்களின் முயற்சி,தேடல் இப்படி எதுவாயினும் தங்களுக்குத் துணை நிற்போம் என உறுதி கூறுகிறேன்.இறைவன் தங்களின் அனைத்து முயற்சிகளையும் ஆசீர்வதிப்பாராக!

    ReplyDelete