Thursday, May 28, 2015

நீங்கள் என்ன கேட்கிறீர்கள்?

இயேசுவோ அவர்களிடம், 'நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா?' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், 'இயலும்' என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, 'நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள்...' என்று கூறினார். (மாற்கு 10:38-39)

செபதேயுவின் மக்கள் யோவானும், யாக்கோபும் இயேசுவின் அரியணையின் வலப்புறமும், இடப்புறமும் இடம் கேட்கும் நிகழ்வை நேற்று திருப்பலியில் வாசித்தோம்.

இதே நிகழ்வு மத்தேயு 20:20-28லிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்தேயு நற்செய்தியில் சீடர்களின் தாய்தான் கேட்கிறார். சீடர்கள் கேட்கவில்லை. யோவானும், லூக்காவும் தங்கள் நற்செய்திகளில் இதைப் பதிவு செய்யவில்லை.

இந்த இரண்டு சீடர்கள் நினைத்தது ஒன்றும் தவறில்லையே!

நிறையப்பேர் சொல்வாங்க நம்ம வாழ்க்கையில 'ambition' இருக்கக் கூடாதுன்னு. ஆனால், இந்த 'ambition' என்று ஒன்று இருந்ததால்தான் மனித குலம் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றது.  இது இல்லையென்றால் நாம் இன்னும் குரங்காகத்தான் இருந்திருப்போம்.

பன்னிரண்டு சீடர்களும் இந்த இரண்டு பேர் நினைத்தது மாதிரிதான் நினைத்திருப்பார்கள். என்ன வித்தியாசம் என்றால், மற்ற பத்து பேர் இயேசுவிடம் இதைப்பற்றிக் கேட்கவில்லை. இவர்கள் கொஞ்சம் 'frank' டைப். கேட்டுவிட்டார்கள்.

இயேசுவின் பதில் உடனடியாக 'ஆம்' என்றோ, 'இல்லை' என்றோ இல்லை. அவர் இரண்டு கேள்விகள் கேட்கின்றார். 'கிண்ணத்தில் குடிக்க இயலுமா?' மற்றும் 'திருமுழுக்கு பெற இயலுமா?' இந்தக் கேள்விகளுக்கு இந்த இரண்டு சீடர்களும், 'இல்லை. முடியாது!' என்று சொல்லியிருந்தார்கள் என்றால் நிகழ்வு இத்தோடு முடிந்திருக்கும். ஆனால் அவர்கள், 'முடியும்! இயலும்!' என்று சொல்கிறார்கள். மேலோட்டமாக இதைப் பார்த்தால் இவர்களிடம் கொஞ்சம் 'pride' இருப்பதாகத் தெரியும். (Ambition இருப்பவர்கள் இயல்பாகவே கொஞ்சம் proud ஆகவும் இருப்பார்கள்!) ஆனால், ஆழமாகப் பார்த்தால் எந்த அளவுக்கு இவர்கள் இயேசுவைப்போல, அவரின் வாழ்வோடு தங்கள் வாழ்வையும் இணைத்துக்கொள்ள விழைகிறார்கள் என்றே தோன்றுகிறது. இது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

இயேசுவும் அவர்களின் பதில்மொழிக்கு எதிர்மறையாக எதுவும் கூறவில்லை. அப்படியே தட்டை மாற்றிப் போடுகிறார்: 'அந்த இடங்களை என் தந்தைதான் ஏற்பாடு செய்வார்!'

மறைமுகமாக இயேசு சொல்வது என்ன?

நீங்கள் என் கிண்ணத்தில் குடித்தும், நான் பெறும் திருமுழுக்கைப் பெற்றும் விட்டீர்கள் என்றால் அதுவே என் வலப்புறம். அதுவே என் இடப்புறம். இதற்கு மேல் ஒன்றும் இல்லை.

இயேசு தரும் வாழ்க்கைப் பாடங்கள் இரண்டு:

அ. வாழ்விற்குப் பின் கிடைக்கும் பரிசுக்காக வாழ்வதை விட, வாழ்வையே ஒரு பரிசாக நினைத்து வாழ். (Live as if journey is the destination)

ஆ. என் வெற்றி உன் வெற்றியாக மாறப்போவதில்லை. உன் வெற்றிதான் உன் வெற்றி. (Your success alone is your success!) (தோனி என்னதான் செஞ்சுரி அடிச்சாலும், நாம் கைதட்டி மகிழ்ந்தாலும், அவரின் வெற்றி நம் வெற்றி ஆவதில்லையே!) அடுத்தவரின் வெற்றியில் மகிழ்ந்து அந்த வெற்றியைப் பங்கு போட்டுக்கொள்வதை விட, நீயே வெற்றி அடைந்து அந்த மகிழ்வை முழுமையாக அனுபவிக்கலாமே!

இந்த இரண்டு சீடர்களுக்கும் இயேசுவின் வாழ்க்கைப் பாடம் புரிந்திருக்கும்!


1 comment:

  1. 'Ambition' னோடு இருப்பவர்கள் 'pride' உடன் இருப்பர் என்பதைவிட 'confident' ஆக இருப்பர் என்பது இன்னும் பொருந்தும் என்பது என் கருத்து.அதனால் தான் செபதேயுவின் மக்களால் 'கிண்ணத்தில் பருகவும், திருமுழுக்கு பெறவும் முடியும்' என இயேசுவிடம் துணிவோடு சொல்ல முடிந்தது.இந்தப் பதிவிலிருந்து இயேசு நமக்குத் தருவதாக சொல்லப்படும் வாழ்க்கைப்பாடங்கள் நாம் வாழும் இந்த காலகட்டத்துக்கு மிகத்தேவைதான்.நாம் எந்நிலையில் வாழ்ந்திடினும் அந்நிலையையே இறைவன் தரும் பரிசாக நினைத்து அதில் வெற்றி காண்பதென்பது ஒரு பெரிய சவால் தான்.ஆனால் அதையும் நம்மால் எதிர்கொள்ள இயலும்.....அவரின் துன்ப கிண்ணத்தில் நம்மால் பருகவும், அவரின் திருமுழுக்கை நம்மாலும் பெற இயலுமானால்!!!

    ReplyDelete