Wednesday, May 20, 2015

பஞ்சாபி பொண்ணு

எங்க ஏரியாவுல உள்ள ஒரு பாட்டி கீழ விழுந்துடுச்சுனு சொல்லி அதற்கு ஒரு உதவியாளர் பெண் தேடிக்கொண்டிருந்தார்கள். இறுதியாகக் கண்டுபிடித்தும் விட்டார்கள். இன்று அந்தப் பாட்டியும், உதவியாளர் பெண்ணும் மாலை திருப்பலிக்கு வந்தார்கள்.

என்ன ஒரு ஆச்சர்யம். அந்தப்பெண் ஒரு பஞ்சாபி. பெயர் ஏதோ ஒரு சிங். மறந்துடுச்சு.

அழகான ஆங்கிலம் பேசினார். இத்தாலி வந்து 3 வருடங்கள் ஆகிறதாம்.

அந்தப் பாட்டியிடம் எப்படி ஆள் கிடைத்தது என்று கேட்டேன்.

நிறையப் பேர் வந்தார்கள். ஆனால் யாரையும் பிடிக்கவில்லை. இவரும் வந்தார். எந்த நாடு என்று கேட்டேன்.

இந்தியா என்றார்.

உடனே எடுத்துக்கொண்டேன்.

'இந்தியா!' என்றால் பிடிக்குமா? என்று கேட்டேன்.

'அப்படியல்ல! ஆனால் நான் பார்த்துப் பேசிய முதல் இந்தியர் நீங்கள் தான்! நீங்க நல்லவரா இருக்கிறதுனால எல்லாம் நல்லவங்கதானே!' என்றார்.

'நம்மள நல்லவன்னு இன்னுமா உலகம் நம்புதுன்னு!' வடிவேலு காமெடி மைன்ட் வாய்ஸ்ல ஓடினாலும், உள்ளுக்குள் கொஞ்சம் மகிழ்ச்சி.

நம்ம ஊருல இருக்கும்போது தேவைப்படும் பொறுப்புணர்வைவிட நாம் வெளியில் இருக்கும் போதுதான் அதிகம் பொறுப்புணர்வு தேவைப்படுகிறது.


1 comment:

  1. ஒட்டுமொத்த இந்தியர்களின் பிரதிநிதியாக இத்துணைப் பொறுப்புணர்வுடன் வாழ்ந்து காட்டி,பிறந்த மண்ணுக்குப் பெருமை தேடித் தந்த தங்களுக்கு ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்தலாமே!!! இப்போதைக்கு என் பாரட்டுக்கள்!!!

    ReplyDelete