Saturday, September 27, 2014

ச்சே! குழந்தையாகவே இருந்திருக்கலாமே!

இளையோரே! இளமைப் பருவம் மகிழ்ச்சியோடிருப்பதற்கே.
இளமையின் நாள்களில் உள்ளக் களிப்புடனிருங்கள்.
மனம் விரும்புவதைச் செய்யுங்கள்.
கண்களின் நாட்டத்தை நிறைவேற்றுங்கள்.
ஆனால், நீங்கள் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் உரிய தீர்ப்பைக் கடவுள் வழங்குவார் என்பதை மறவாதீர்கள்.
மனக்கவலையை ஒழியுங்கள்.
உடலுக்கு ஊறு வராதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
உன்னைப் படைத்தவரை இளமைப்பருவத்தில் மறவாதே.
(சபை உரையாளர் 11:9-12:1)

மனித வாழ்வின் இளமையில் அவர்கள் செய்ய வேண்டியதையும், செய்யக் கூடாததையும் சபை உரையாளர் இந்தப் பகுதியில் எழுதுகின்றார்.

11:9 முதல் 12:7 வரை மனித வாழ்வின் ஒவ்வொரு நிலையையும் பல்வேறு உருவகங்களோடு விளக்கிச் சொல்கின்றார் சபை உரையாளர்.

மகிழ்ச்சியோடிருந்தாலும் நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதற்கேற்ற தீர்ப்பை அடைவீர்கள் எனவும் எச்சரிக்கை செய்கின்றார்.
நேரம் இருக்கும் போது 12:1-7ஐ கண்டிப்பாக வாசித்துப் பாருங்கள். வாசிக்கும் போது ஒவ்வொரு உருவகத்திற்கும் கீழே விவிலியத்தில் கொடுக்கப்பட்டுள்ள அர்த்தத்தையும் பாருங்கள். முதுமையில் நாம் அனுபவிக்கும் அனைத்துத் துன்பங்களையும் அழகிய உருவகங்களாகத் தந்துள்ளார் ஆசிரியர்.

அந்தந்த வாழ்க்கை நிலையை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பெற வேண்டும் என்பதே ஆசிரியரின் நோக்கம்.

புத்தர் அழகாகச் சொல்வார்:

மனிதர்களில் நான் காணும் விந்தை இதுதான்.
வேகமாக வளர வேண்டும் என நினைக்கிறார்கள்.
வளர்ந்த பின், 'ச்சே! குழந்தையாகவே இருந்திருக்கலாமே'
என வருந்துகின்றனர்.
அந்தந்த வயதுப் பருவத்தை முழுமையாய் ஏற்று வாழ அழைப்பு விடுக்கிறது நாளைய முதல் வாசகம்.

1 comment:

  1. என் இளமையாக நான் கடந்துவிட்ட போதிலும் ஏதோ ஒரு ஆவலில் சபை உரையாடல் நூலின் வரிகளைப் படித்துப்பார்த்தேன்.காலம் கடந்துவிட்ட நிலையிலும் ஒவ்வொரு வரியின் சாரமும் என்னில் மிகப்பெரியதாக்கத்தை,அதிர்வை ஏற்படுத்தியதென்னவோ உண்மை.."இளமையின் மகிழ்வாம் இறைவனுக்காக" உழைக்கும் அஅத்தனை இளைஞர்களையும்,அவர்கள் எந்நிலையிலிருப்பினும் இறைவன் ஆசார்வதிப்பாராக! தந்தையே ! தங்களுக்கு ஒரு வேண்டுகோள்...எத்துணை 'திரிகள்' எரிந்து ஒளிபரப்ப தாங்கள் ஒரு ' தீக்குச்சி' யாக் உள்ளீர்கள் என்பதை மனத்தில் கொண்டு தங்களின் இந்த அரிய சேவை என்றென்றும் தொடரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்..இறைவன் தங்களை என்றென்றும் ஆசார்வதிப்பாராக!

    ReplyDelete