Thursday, September 25, 2014

எனக்கு எல்லாம் இருந்தால்

வஞ்சனையும் பொய்யும் என்னை விட்டு அகலச் செய்யும்.
எனக்குச் செல்வம் வேண்டாம், வறுமையும் வேண்டாம்.
எனக்குத் தேவையான உணவை மட்டும் தந்தருளும்.
எனக்கு எல்லாம் இருந்தால், நான்
'உம்மை எனக்குத் தெரியாது' என்று மறுதலித்து
'ஆண்டவரைக் கண்டது யார்?' என்று கேட்க நேரிடும்.
நான் வறுமையுற்றால், திருடனாகி,
என் கடவுளின் திருப்பெயருக்கு இழிவு வருவிக்க நேரிடும்.
(நீதிமொழிகள் 30:8-9)

4000 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் கடவுளை நோக்கி செபித்த செபத்தை நீதிமொழிகள் ஆசிரியர் மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.

மேற்காணும் செபம் மிகவும் எளிதாக உள்ளது. ஆசிரியர் தனக்காக இரண்டு விஷயங்களைக் கடவுளிடம் வேண்டுகிறார்:

அ. வஞ்சனையும், பொய்யும் என்னைவிட்டு அகலச் செய்யும்.
ஆ. வறுமையும் வேண்டாம், செல்வமும் வேண்டாம். அன்றைய உணவு அன்றைக்குப் போதும்.

இந்த ஒன்றை மட்டுமே என் இறைவேண்டலாக எடுத்துக் கொள்ளலாம் என நேற்று முடிவெடுத்தேன்.

இந்த செபத்தின் உட்பொருள் கடவுளிடமிருந்தே எல்லாம் வருகிறது என்ற தளராத நம்பிக்கையே.


1 comment:

  1. " Too much of anything is poison" நமக்குப் பரிட்சயமான பழமொழி. " போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து" இதுவும் நாம் கேள்விப்பட்ட பழமொழிதான்.எதுவுமே நமக்கு இறைவனிடமிருந்துதான் வருகிறது என்ற தளராத நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் அவர் கொடுக்கும் வளமையையும் சரி, வறுமையையும் சரி இரு கரம் நீட்டி வரவேற்போம். " " அன்றன்றுள்ள எங்கள் அப்பத்தை மட்டும் எங்களுக்குத் தாரும் ஆண்டவரே'" நம் வாழ்வின் வேண்டலாக இருக்கட்டும். அனைவருக்கும் காலை வணக்கங்கள்!

    ReplyDelete