Saturday, September 13, 2014

நாம் ஆண்டவருக்கு எரிச்சலூட்டலாமா?

நீங்கள் ஆண்டவருடைய கிண்ணத்திலும் பேய்களுடைய கிண்ணத்திலும் பருக முடியாது. நீங்கள் ஆண்டவரின் பந்தியிலும், பேய்களுடைய பந்தியிலும் பங்குகொள்ள முடியாது? நாம் ஆண்டவருக்கு எரிச்சலூட்டலாமா? நாம் அவரைவிட வலிமைமிக்கவர்களா?
(1 கொரிந்தியர் 1:22)

சிலைவழிபாட்டைக் குறித்து கொரிந்து நகரத் திருச்சபையைச் சாடுகின்ற தூய பவுலடியார் அவர்களின் சிலை வழிபாட்டை பேய்களின் வழிபாடு என கடிந்து கொள்கின்றார்.

மற்றவர்களை அவர் பேய் என எப்படிச் சொல்லலாம்? என்று அவரோடு இன்று நாம் சண்டை போட வேண்டாம்.

பவுலடியாரின் கோபம் எல்லாம் இதுதான்:

'100 சதவிகிதம் பிரமாணிக்கம்!'

நம் அன்றாட வாழ்க்கையிலும் பாருங்களேன். பிரமாணிக்கம் பகிரப்படும்போது பாதிக்கப்படுபவருக்கு எரிச்சல் வந்துவிடுகிறது. அதையே தூய பவுலடியார், 'ஆண்டவருக்கு நாம் எரிச்சல் ஊட்டலாமா?' என்கிறார்.

யாராவது ஒருவருக்கு? புதிய இயேசுவுக்கு அல்லது பழைய சிலைக்கு.

50-50 பிரமாணிக்கம் ஆன்மீகத்திலும் நல்லதல்ல, வாழ்விலும் நல்லதல்ல. 

2 comments:

  1. ஆம்50-50 பிரமாணிக்கம் நம்மால் இயலுமா என்பது ஒரு கேள்வி; அப்படி இயன்றாலும் அஅது சரியாகுமா என்பது அடுத்த கேள்வி.இயேசு 'ஓய்வுநாளும் மானிடமகனுக்குக் கட்டுப்பட்டதே' என்கிறாரே அதுபோலத்தான்.எந்த மானுடமும் காயப்படாதவரைதான் நமது பிரமாணிக்கம், வாழ்க்கையின் கோட்பாடுகள் இவற்றுக்கெல்லாம் அர்த்தம்.ஆகவே காக்கப்படவேண்டியது நமது பிரமாணிக்கம் மட்டுமல்ல..நம் அயலானுக்கு நாம் காட்ட வேண்டிய நேயமும்தான்.அதற்காக சிறிது வளைந்து கொடுப்பதில் ஒன்றும் தவறில்லையே!அனைவருக்கும் காலை வணக்கங்கள்....

    ReplyDelete
  2. தந்தையே உண்மையில் இந்த பதிவில் நீங்கள் கூறவரும் கருத்து எனக்கு விளங்கவில்லை. என்றாலும் உங்கள் பதிவுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete