Monday, June 1, 2015

செயல்பாடுகள் பலவகையுண்டு

அருள்கொடைகள் பலவகையுண்டு.
ஆனால், தூய ஆவியார் ஒருவரே.
திருத்தொண்டுகளும் பலவகையுண்டு.
ஆனால், ஆண்டவர் ஒருவரே.
செயல்பாடுகள் பலவகையுண்டு.
ஆனால், கடவுள் ஒருவரே.
அவரே எல்லாரிடமும் எல்லாவற்றையும் செயல்படுத்துகிறார்.
1 கொரி 12:4-6

இன்று தமதிருத்துவப் பெருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தோம்.

இன்றைய காலைவழிபாட்டில் கொடுக்கப்பட்டிருந்த இந்த வாசகத்தை நான் பலமுறை வாசித்திருந்தாலும். இதில் தந்தை, மகன், தூய ஆவியார் பற்றி மறைவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதை இன்றுதான் கண்டுகொண்டேன்.

தூய ஆவியார் தரும் அருள்கொடைகளைக் கொண்டு, ஆண்டவர் இயேசுவின் திருப்பணியாக, நம் செயல்பாடுகள் கடவுளின் செயல்பாடுகளாக இருக்க வேண்டும் என கொரிந்து நகரத் திருச்சபைக்கு எழுதுகின்றார் தூய பவுலடியார்.

இன்று மாதத்தின் இறுதிநாள். ஒவ்வொரு மாதமும் வரவு-செலவு கணக்கு போல, நன்மை-தீமை கணக்கும் பார்ப்பது அவசியம். இதற்காகவே ஒரு க்ராஃப் நோட்டும் போட்டுள்ளேன். ஒவ்வொரு நாளும் வைக்கின்ற புள்ளி மேல் நோக்கி சென்றால் வளர்ச்சி, இடையிடையே சரிந்தால் இன்னும் கொஞ்சம் முயற்சி. இந்த பயிற்சி ஒரு உந்துசக்தியாக இருக்கிறது.

எப்படி என்றால், தினமும் சைக்கிள் ஓட்டும்போது 60 நிமிடங்கள் செட் செய்து விட்டு, 30 நிமிடங்கள் முடிந்தவுடன் ஒரு சின்ன ஒரு நிமிட ப்ரேக். இன்னும் முப்பது நிமிடங்கள் ஓட்ட வேண்டுமா என்ற மலைப்பு, பரவாயில்லை முப்பது நிமிடங்கள் ஓடியாயிற்று என்று நேர்முகமான புத்துணர்ச்சி தருகின்றது.

புலர்கின்ற புதிய மாதம் கடவுளின் செயல்பாடுகளை நம் அனைவர் வாழ்விலும் கொண்டுவரட்டும்.

இறைவன் நம்மை ஆசீர்வதிப்பாராக.




1 comment:

  1. இன்று மாத்த்தின், வாரத்தின் முதல் நாள். நம்மில் பலருக்குக் கல்வியாண்டின் முதல்நாளும் கூட.மூவொரு இறைவனின் துணையோடு, நமக்கே நாம் விடுக்கும் சவால்களின் துணிவோடு வீறு நடை போடுவோம்; வெற்றிக்கனியை சுவைப்போம்.நம்மைச் முன்னோக்கி நகர்த்தும் பலதரப்பட்ட உந்துசக்திகளுக்கு நன்றி சொல்வோம்.தந்தையின் நன்மை- தீமை கணக்கு......தம்மை வளர்த்துக்கொள்ளத்துடிக்கும் யாரும் பின்பற்றக்கூடியது.....அனைவருக்கும் வணக்கங்களும்.....வாழ்த்துக்களும்...

    ReplyDelete