Saturday, June 27, 2015

வாழ்க நீ எம்மான்!

இன்று மாலை உணவு என் கல்லூரி பேராசிரியருடன்.

அவருடன் ஒரு கருத்தரங்கிற்கு வேலை செய்ததால், வேலை செய்த எல்லாருக்கும் ட்ரீட் கொடுத்தார். பேருந்து வேலைநிறுத்தம் காரணமாக நிறையப்பேர் வரமுடியவில்லை.

அவரே எல்லாவற்றையும் வாங்கி சுமந்து கொண்டு வந்தார்.

என்ன சுமை என்று இறக்கி வைக்கும்போது பார்த்தால், உணவுடன் சேர்ந்து, சாப்பிடுவதற்கான பீங்கான் தட்டுகளும், எவர்சில்வர் கரண்டிகளும், கண்ணாடி டம்ளர்களும். ஆச்சரியமாக இருந்தது.

சுமப்பதற்கு எளிதானது, கழுவத் தேவையில்லை என பிளாஸ்டிக் தட்டுகளையும், டம்ளர்களையும், கரண்டிகளையும் பயன்படுத்தி தூக்கி எறியும் கலாச்சாரத்திற்கு மாற்றாக அவர் செய்த இந்த செயல் எனக்கு மிகவும் பிடித்தது.

பிளாஸ்டிக் செயல்பாடு கூடாது என வாசித்த எவ்வளவோ கட்டுரைகளைவிட அவரின் இந்த ஒற்றைச்செயல் பெரிய மாற்றத்தை என்னில் விதைத்தது.

வாழ்க நீ எம்மான்!


1 comment:

  1. சும்மாவா சொன்னார்கள்..."1000 சொற்கள் பிறப்பிக்க முடியாத தாக்கத்தை ஒரு செயலால் இயலும்" என்று.தந்தையே! தங்களின் பேராசிரியர் தன் மாணாக்கர்களுக்கு நல்ல 'ரோல் மாடலும்' கூட. ஆமாம் ....'அம்மான்' என்றால் மாமன் என்று தெரியும்.அதென்ன 'எம்மான்?'...

    ReplyDelete