Sunday, May 31, 2015

பச்சை குத்துதல்

எனக்கு ஏழாம் வகுப்பில் வகுப்பாசிரியராக இருந்த திரு. முருகேசன் ஆசிரியர் கையில்தான் முதன்முதலாக பச்சை குத்தியதைப் பார்த்த நினைவிருக்கிறது. கைகள், பெருவிரல், நெஞ்சு என பச்சை குத்தி நாம் பார்த்திருப்போம். நான் குத்தியிருக்கும் என் பெயர் ஒன்றுதான் என்னுடன் வரும், என்று தான் பச்சை குத்தியதைப் பற்றி அடிக்கடி சொல்வார் முருகேசன் சார்.

பச்சை குத்துவதால் எய்ட்ஸ் பரவும் என்று அறிவிப்பு வந்தவுடன் அப்படியே அந்தப் பழக்கம் குறைந்துவிட்டது.

இப்போ அந்த இடத்தைப் பிடித்துவிட்டது டாட்டு.

இரண்டு நாட்களுக்கு கையில் நிற்கும் 'பூமர்' பப்பிள்கம் டாட்டு. இரண்டு மாதங்களுக்கு நிற்கும் டாட்டு. என்றுமே அழியாத டாட்டு என நிறைய வந்துவிட்டன இன்று.

இன்று மெட்ரோவில் ஒருவர் தன் உடல் முழுவதும் டாட்டு குத்தியிருந்தார்.

தேள், வண்ணத்துப்பூச்சி, தலைவிரித்த பெண், எலும்புக்கூடு, மனித தலை, காளி போன்ற ஒரு உருவம், சில எழுத்துகள் என நிறைய இருந்தன.
வெள்ளையாக இருக்கும் தோலுக்கு மேல் கறுப்பாக அல்லது பச்சையாக குத்தும் டாட்டு தற்காலிகமாக அந்த இடத்தை வேறு நிறத்திற்கு மாற்றுகிறது.

ஆக, என்னதான் அடையாளங்களை அவர்கள் தங்கள் உடலில் சுமந்தாலும், மறைமுகமாக அவர்கள் சொல்ல வருவது என்னவென்றால் தங்களின் தோல் நிறத்தை விட வேறு நிறத்தை அவர்கள் பூசிக்கொள்ள விரும்புகிறார்கள் என்பதுதான்.


1 comment:

  1. சில காலங்களுக்கு முன்பு வரை படிக்காத மனைவிமார்கள் தங்களின் கணவர் பெயரை யாரேனும் கேட்டால் காட்டுவதற்கு வசதியாக கையில் பச்சை குத்திக் கொண்டதாக்க் கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் இக்கால யுவன்களும்,யுவதிகளும் தங்களை அழகு படுத்துவதாக எண்ணிக்கொண்டு அகோர உருவங்களால் தங்களை விகாரப்படுத்திக் கொள்கின்றனர்.ஒருவேளை தங்களுக்கு இயற்கை அளித்துள்ள தோல் நிறத்தை மாற்றுவதுதான் இவர்களின் நோக்கமாக இருப்பின் தந்தையின் வார்த்தைகளில் " சட்டியின் சூட்டிற்குப் பயந்து அடுப்பில் கையை விட்ட " கதையாகிவிடும். ஒரு சந்தேகம் எனக்கு....பச்சை குத்துவதற்கும் ஏய்ட்ஸுக்கும் என்ன சம்பந்தம்??விளங்கவில்லை.

    ReplyDelete