"இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?"
(லூக்கா 1:66)
இன்று திருப்பலியில் நற்செய்தி வாசகம் வாசித்தபோது, மேலே காணும் வாக்கியம் என்னைத் தொட்டது.
திருமுழுக்கு யோவானின் பெயர்சூட்டு விழாவிற்கு வந்திருந்த அக்கம், பக்கத்தார் நடந்தது அனைத்தையும் கண்டு, 'இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?' என்று வியக்கின்றனர்.
இந்தக் கேள்வியில் வியப்பும் இருக்கிறது. பயமும் இருக்கிறது.
அவர்கள் கேட்ட தொனியில் வியப்பு மட்டும்தான் இருக்கிறது.
இந்தக் கேள்வியை நாமும் பல தருணங்களில் கேட்கின்றோம்:
'நாளைய நாள் எப்படிப்பட்டதாக இருக்குமோ?'
'தேர்வு முடிவு எப்படிப்பட்டதாக இருக்குமோ?'
'தேர்வு வினாத்தாள் எப்படிப்பட்டதாக இருக்குமோ?'
'திருமண வாழ்வு எப்படிப்பட்டதாக இருக்குமோ?'
'புதிய பணித்தளம் எப்படிப்பட்டதாக இருக்குமோ?'
இந்தக் கேள்வியை நாம் கேட்கும்போதெல்லாம் நம்மில் அச்ச உணர்வே மேலோங்கியிருக்கிறது.
அச்சம் வியப்பாகலாமே!

அச்சமோ, வியப்போ நம் புதிய முயற்சிக்கு/ புதிய இடத்திற்கு யாரை நாம் உடனழைக்கிறோம் என்பதைப் பொறுத்தே அமையும்.நம் பலத்தையும், இம்மண்ணவரையும் நம்பினால் 'அச்சம்' இறுதிவரை நம் உடன்பயணியாக அமைந்தாலும் அமையலாம்.ஆனால் விண்ணவரைத் துணைக்கழைத்தால் அச்சம் வியப்பாகலாம்; வியப்பு விந்தையாகலாம்; விந்தை
ReplyDeleteசாதனையாகலாம்.....சரிதானே??!!