நாளை தூய அந்தோணியார் திருநாள்.
எனக்கு மிகவும் பிடித்த புனிதர் இவர். இவருடைய சுரூபம் ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டே ஊர் சுற்றுவேன் சின்ன வயதில்.
இவரைத்தான் திருச்சபை 'அன்பின் கோடியற்புதர்' என்று பெயர்சூட்டி அழைக்கிறது. ஆனால் இன்று இந்த பெயரை பல புனிதர்களுக்குப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம்.
கடந்த ஆண்டு பதுவை நகருக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மிக அழகான இடம். சின்ன கிராமம். இன்று கொஞ்சம் நகரமாயிருக்கிறது. உள்ளே நுழைந்தவுடன் அந்தோணியார் இன்னும் அங்கே வாழ்ந்து கொண்டிருப்பது போல ஒரு உற்சாகம் நம்மைப் பற்றிக்கொள்ளும்.
இன்று பெரும்பாலும் புனிதர்களை வெறும் ரெகமண்டேஷன் லெட்டர் தரும் ஒரு எம்.எல்.ஏ-வாக மட்டுமே பார்க்கத் தொடங்கிவிட்டோம். அல்லது அவர்களை மேலே நிற்க வைத்து, நாம் கீழே நின்றுகொண்டு, 'உங்களைப் போல நாங்க ஆக முடியாது!' என்று அந்நியப்படுத்திவிடுகிறோம்.
அன்றாட வாழ்க்கையை திறம்பட வாழ்ந்தாலே, நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் நிறைவாக செய்தாலே நாமும் அன்பின் கோடியற்புதர்களே!
தூய அந்தோணியார்...இவரது இளமையும், வனப்பும் மிகு தோற்றத்திற்காகவே இவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.கோடி வரங்களை வாரி வழங்கும் அற்புதர். குழந்தை இயேசுவின் மீது இவருக்கிருந்த மாறா பிரியத்தின் காரணமாக குழந்தை இயேசுவே இவர் கைகளில் தவழ்ந்து விளையாடியாத சொல்லப்படுகிறது. 'பதுவை' நகரை தரிசித்துள்ளேன் என்ற பெருமை எனக்குமுண்டு. மறதியின் மொத்த உருவமான நான் பொருட்களைத் தொலைத்துவிட்டுத் தேடும்போது நான் கூப்பிட்ட குரலுக்கு செவிமடுப்பவர் இவர்தான்.பொருட்களைத் தொலைத்தால் மட்டும் தான் இவரைத்தேட வேண்டுமா என்ன...நாம் அன்றாட வாழ்க்கையில் தொலைத்து நிற்கும் 'இறையன்பு', 'பிறரன்பு' இவற்றைக் கூட மீட்டுத் தரும்படி இந்தப் புனிதரை இறைஞ்சலாமே! நாமும் அன்பின் கோடி அற்புதர்களக மாறலாமே!!!
ReplyDelete