Friday, June 5, 2015

விவேகத்தையும் முன்மதியையும்

'பிள்ளாய்! விவேகத்தையும் முன்மதியையும் பற்றிக்கொள்.
இவற்றை எப்போதும் உன் கண்முன் நிறுத்திவை.
இவை உனக்கு உயிராகவும்,
உன் கழுத்துக்கு அணிகலனாகவும் இருக்கும்.
நீ அச்சமின்றி உன் வழியில் நடப்பாய்.
உன் கால் ஒருபோதும் இடறாது.
நீ படுக்கப்போகும்போது உன் மனத்தில் அச்சமிராது.
உன் படுக்கையில் நீ அயர்ந்து தூங்குவாய்.'
(நீதிமொழிகள் 3:21-24)

கடந்த வாரம் இத்தாலியின் ஒரு அருட்பணியாளர் ஒருவர் ஒரு பெண்ணுடன் கடற்கரைக்குச் சென்றிருந்த ஃபோட்டோ நாளிதழ்களில் வெளியானது. சாப்பாட்டு அறையில் அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த எங்கள் பங்குத்தந்தை சொன்னார்: 'நட்பு வச்சுக்கலாம். அதுக்காக இப்படியா ஓப்பனா? அவரிடம் விவேகம் இல்லை!' என்றார். ஆக, தவறு செய்யலாம். மாட்டிக்கொள்ளாமல் தவறு செய்வதே விவேகம் என்ற புதிய சிந்தனை இந்த நாட்களில் உருவாகி வருவது தவிர்க்க முடியாத ஒன்று.

விவேகம் பற்றிச் சொல்லும்போது, இயேசு பாம்பைப் போல விவேகம் உள்ளவராக இருங்கள் என்று சொல்கின்றார். அதன் அர்த்தம் எனக்கு இன்னும் புரிந்தபாடில்லை. முன்மதிக்கு 'பத்து கன்னிப்பெண்கள்' உவமையைத் தருகின்றார். ஆக, விவேகம் மற்றும் முன்மதி இயேசுவின் போதனையிலும் காணக்கிடக்கிறது.

யோசேப்பைப் பற்றிச் சொல்லும்போது, அவரை திருக்குடும்பத்தின் விவேகமான கண்காணிப்பாளர் என்று நாம் சொல்கிறோம்.

'வேகம்' இருக்கக் கூடாது. 'விவேகம்' இருக்க வேண்டும். இப்படி டி.ஆர்.ஆர் பாணியிலும் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

இந்த இரண்டும் என்ன என்பதைப் பற்றி நீதிமொழிகள் நூல் சொல்லவில்லையென்றாலும், இவை இருந்தால் என்ன பயன் என்பதை அழகாகச் சொல்கிறது.

முதலில் அச்சம் போகும். 'குற்றம் செய்த மனம் குறுகுறுக்கும்!' என்றும், 'மடியில் கனம், வழியில் பயம்!' என்றும் சொல்வார்கள். விவேகமும், முன்மதியும் இருந்தால் நாம் எதைப்பற்றியும், நாளை என்ன நடக்கும் என்பதைப் பற்றியும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

அச்சம் விலகும் இடத்தில் தூக்கம் நம் கண்களை எளிதாகத் தழுவிக்கொள்ளும்.


1 comment:

  1. இன்றையப் பதிவில் தரப்பட்டுள்ள புனித.இஞ்ஞாசியாரின் வார்த்தைகளும்,நீதிமொழிகளின் வரிகளும் மனிதன் தன் மனத்திலிருந்து களைய வேண்டிய அச்சம் பற்றியும்,உடன்கொள்ளவேண்டிய முன்மதி பற்றியும் அழகாக விவரிக்கின்றன.நீதிமொழிகளின் வரிகள் சிறிது 121 ம் திருப்பாடலின் சாயலில் இருப்பதை உணர்கிறேன். உறக்கமின்றி அவதிப்படுபவர்களுக்கு இன்றையப் பதிவைப் பரிந்துரைக்கலாமே!!!..... தந்தையின் துணையோடு!

    ReplyDelete