Tuesday, June 16, 2015

கொஞ்சம் எக்ஸ்ட்ரா

'உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்?'

ஜெர்மானியப் படை தனது நாசிச வெறியின் உச்சத்தில் இருந்த காலம். ஒரு இருண்ட சிறைச்சாலை. தினந்தோறும் பல்வேறு வகையான கொடுமைகள். பல்வேறு வகையில் சாவு. வாழ்வா, சாவா என்பதே தினசரி கனவாகிப் போனது சிறைவாசிகளுக்கு. மறுபுறம் சண்டை சச்சரவுகள். கைதிகளுக்குள்ளே கலவரங்கள். புதிதாக வரும் கைதிகள் ஏற்கனவே இருக்கும் கைதிகளின் கையில் சிக்கியும் துன்புற்றனர். எந்த நேரமும் குழப்பம். ஒருவரையொருவர் காட்டிக் கொடுக்கும் கலாச்சாரம். நாட்கள் நகர்ந்தன. அன்றொரு நாள் மாலை வேளை. கைதிகள் வேலை முடித்த நேரம். படைத்தளபதி விரைந்து வருகிறான். ஒரு மண்வெட்டியைக் காணவில்லை. அதற்கான விசாரணைக்காக எல்லாக் கைதிகளும் அழைத்து வரப்படுகின்றனர். யாரும் உண்மையை ஒத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. படைத்தளபதிக்குப் பதற்றம். மண்வெட்டியைப் பயன்படுத்தி யாராவது தப்பி ஓடி விட்டால் தனது பணி பறிபோய்விடும். அனைத்துக் கைதிகளையும் வரிசையாக நிறுத்திச் சுடக் கட்டளையிடுகிறான். அனைவருக்கும் பயம். வரிசையாக நின்றவுடன் ஒரு கைதி மட்டும் முன்னே வந்து தான் திருடியதை ஒப்புக் கொள்கிறான். படைவீரர்கள் பாய்ந்தோடிப் பிடித்து அவனைச் சுட்டுக் கொள்கின்றனர். ஆழ்ந்த அமைதி. அனைவரும் தத்தம் அறைகளுக்குச் செல்கின்றனர். படைத்தலைவன் மீண்டும் சரிபார்க்க மண்வெட்டிகள் அனைத்தும் சரியாக இருக்கின்றன. அனைவருக்கும் ஆச்சர்யம். நிசப்தம். எதற்காக அந்த மனிதன் பிறருக்காகத் தனது உயிரை இழந்தான்? அன்றிலிருந்து ஒரு புதிய நிலை சிறைச்சாலையில்: கைதிகள் அனைவரும் ஒருவர் ஒருவருடன் அன்புடன் பழகினர். படைவீரர்கள் துன்புறுத்தினாலும் மகிழ்ச்சியாக இருந்தனர். புதிய கைதிகளை நன்முறையில் நடத்தினார்கள். எப்படி இவ்வளவு மாற்றம்? எல்லாம் அந்த ஒரு மனிதனின் தற்கையளிப்பு.

இன்றைய மற்றும் நாளைய நற்செய்தி வாசகங்களில் இயேசு தன் மலைப்பொழிவு போதனையாக சொல்வது இதுதான்: 'செய்யுங்க...கொஞ்சம் எக்ஸ்ட்ரா செய்யுங்க!'

1 comment:

  1. ஒரு தியேட்டரின் நிசப்தத்தில் விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டு மனத்தின் படபடப்புடன் காத்துக்கொண்டிருப்போமே...அடுத்த காட்சி என்னவென்று..அப்படி ஒரு உணர்வைக் கொடுத்தது இன்றையப்பதிவு. ஒரு படைத்தலைவனின் அஜாக்கிரதையினால் ஒரு நல்லவனின் உயிர் எடுக்கப்படுகிறது.அந்த நிகழ்வு கொண்டுவந்த மாற்றம்?? " End justifies the means"...எனும் கருத்தை நினைவு படுத்துகிறது.நம் வாழ்விலும் இப்படி தினம் தினம் எத்தனையோ பேர் தங்கள் வாழ்வை. சுகத்தை, மகிழ்ச்சியை, நேரத்தை நம் நலனுக்காகத் தியாகம் செய்கின்றனர். இந்த தியாகங்கள் நம் வாழ்வில் ஏதேனும் மாற்றத்தைக் கொணர்கிறதா? யோசிப்போம்.....எது செய்யினும் தாராளமனத்துடன் கணக்குப்பார்க்காமல் செய்வோம்.நல்ல பதிவுக்குத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete