Thursday, June 4, 2015

எவ்வளவோ நலம்!

'பிள்ளாய்!
அன்பும், வாய்மையும் உன்னிடம் குன்றாதிருப்பதாக!
அப்பொழுது, நீ கடவுளுக்கும், மனிதருக்கும் உகந்தவனாவாய்.
அவர்களது நல்லெண்ணத்தையும் பெறுவாய்.
முழுமனத்தோடு ஆண்டவரை நம்பு.
உன் சொந்த அறிவாற்றலைச் சார்ந்து நில்லாதே.
நீ எதைச் செய்தாலும் ஆண்டவரை மனத்தில் வைத்துச் செய்!'
(நீதிமொழிகள் 3:1-11)

நேற்றைய நண்பகல் செபத்தின் ஒரு பகுதி மிக அழகாக இருந்தது:

'உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க,
என் நடத்தை உறுதியுள்ளதாய் இருந்தால்
எவ்வளவோ நலம்!
உம் கட்டளைகளையெல்லாம்
கருத்தில் கொண்டிருந்தால். இகழ்ச்சியுறேன்!'
(திபா 119:1-8)

தனிமனித வாழ்க்கையில் ஒருவர் மற்றவரின் இகழ்ச்சிக்கும், இழிச்சொல்லுக்கும், நகைப்புக்கும் ஆளாகிறார் என்றால் அவர் கட்டளைகளைக் கருத்தில் கொள்ளவில்லை என்று மேல்நோக்கி இந்த இறைவாக்கை எடுத்துக்கொள்ளலாம்.

ஆண்டவரின் கட்டளைகள் என்று சொல்வது பத்துக்கட்டளைகள் மட்டுமல்ல. பத்துக்கட்டளைகள் பல நேரங்களில் நம் மனச்சான்றை வெகுவாகப் பாதிப்பதில்லை.

இன்றைய நீதிமொழிகள் பகுதியில் இடம்பெறும் அன்பு, வாய்மை என்ற இந்த இரண்டு வார்த்தைகளை வாழ்வின் மேல்வரிச்சட்டமாகக் கொண்டாலே வாழ்க்கை இனிமையாகும்.

1 comment:

  1. அதிகாலையில் வாசிக்க மிக அழகான பதிவு.சில சமயங்களில் என்னதான் நாம் சரியாக இருப்பதாக நினைத்தாலும் எல்லாமே தப்புத் தப்பா போய்விடுகிறது.இன்றையப் பதிவு அதற்கான காரணத்தைச் சொல்கிறது.அன்பும் வாய்மையும் அபரிமிதமாக்க் குடிகொள்ளும் இடம் ஆண்டவனின் கோயில் தானே! அங்கே தப்புத் தண்டாக்களுக்கு என்ன வேலை?தந்தையே! இந்த நீதிமொழிகளையும்,திருப்பாடல்களையும்்குறித்த தங்கள் பதிவு சுருக்கமாக இருப்பினும் அது ஏற்படுத்தும் பாதிப்பு பெரிது.தொடருங்கள் ஆண்டவனின் அருளோடு!!!

    ReplyDelete