Monday, June 29, 2015

என்னைத் தொட்டால்

இன்று மீண்டும் யாயிர் மற்றும் அந்தப் பெண் பற்றி எழுதுகிறேன்.

நற்செய்தியாளர்கள் இயேசுவின் வாழ்வை ஒரு டைரி போல தேதி போட்டு எழுதவில்லை. இயேசு இறந்து, உயிர்த்த பல ஆண்டுகளுக்குப் பின்தான் எழுதுகின்றனர். அப்படி எழுதும்போது நிறைய நிகழ்வுகளை அவர்கள் மறந்திருக்கவோ, அல்லது மாற்றி எழுதுவோ வாய்ப்பிருக்கிறது.

அவர்கள் என்ன எழுதினாலும், எழுதாவிட்டாலும், அவர்கள் எழுதியவைகளின் நோக்கம் என்னவென்றால், 'இயேசுவில் மற்றவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்!'

இரத்தப்போக்குடைய பெண் இயேசுவைத் தொடுவதற்கும், தோமையார் இயேசுவின் கைகளில் விரலை இட்டுப் பார்ப்பதற்கும் ஒரு தொடர்பு இருக்கலாமோ எனத் தோன்றியது எனக்கு.

அதாவது, தோமையார் நிகழ்வு யோவான் நற்செய்தியில் மட்டுமே இருக்கிறது. மற்றவர்கள் இரத்தப்போக்குடைய பெண் பற்றி மட்டும் எழுதுகின்றனர்.

இயேசுவைத் தொடுவதால் நலம் பெறுகின்றார் பெண். இங்கே நலம் என்பதற்கு, 'சோசவோ' என்னும் கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் பொருள் 'மீட்பு'. இயேசு. 'உன் நம்பிக்கை உன்னை நலமாக்கிற்று' என்று சொல்லுமிடத்திலும், 'மீட்பு' என்னும் வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆக, என்னைத் தொட்டால் மட்டும் மீட்பு என நினைக்காதீர்கள். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் வரும் மக்களும், என்னைத் தொடாமல் அல்லது பார்க்காமல் போனாலும், என்னை நம்பினால் அவர்களுக்கு மீட்பு உண்டு என்று இயேசு சொல்லாமல் சொல்கிறார்.

ஆக, இன்று நாம் தொடுவதால் மீட்பு பெறுவதில்லை. மாறாக, நம்பிக்கையால் பெறுகிறோம்.

தன்னம்பிக்கை, பிறர்மேல் நம்பிக்கை, இறைநம்பிக்கை என இந்த வாரம் இனிய வாரமாகட்டும்.


1 comment:

  1. " நம்பிக்கை".... இது போதும் நாம் எதையும் சாதிப்பதற்கு.நாம் தொடுவதை விட அவர் தொடுதலே மேலானது....ஏனைனில் அவர் கரங்களின் தொடுதல் தேவையில்லை நமக்கு...அவர் கருணைப் பார்வை ஒன்றே போதும். நம்மீதும் அயலான் மீதும்்உள்ள நம்பிக்கை மட்டுமே போதும் நம்மை சாதனையாளர்களாக்க...!!! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete