Sunday, January 31, 2016

சிமயி

நம்மிடம் மற்றவர்கள் கோபப்படும்போது,

நம்மை புரிந்து கொள்ளாதபோது,

நம்மிடம் பகைமை பாராட்டும்போது

நாம் எப்படி இருக்க வேண்டும்?

நாளைய முதல் வாசகத்தில் தாவீது இதற்கு விடையளிக்கின்றார்.

சிமயி என்பவன் தாவீதை, 'ரத்த வெறியனே! பரத்தையின் மகனே!' என சாடுகிறான்.

தாவீதுடன் இருந்தவர்கள் சிமயின் மேல் கோபப்படுகின்றனர்.

ஆனால் தாவீது ரொம்ப கூலாக இருக்கின்றார்:

சிமயி திட்டுவதை இரண்டு நிலைகளில் நேர்முகமாக பார்க்கின்றார் தாவீது:

ஒன்று, ஒருவேளை ஆண்டவரே இதைச் செய்யும்படி சிமியிடம் சொல்லியிருக்கலாம். இதுதான் தாவீதின் உச்சகட்ட நம்பிக்கை. நம் வாழ்வில் நடப்பது எல்லாவற்றுக்கும் காரணம் ஆண்டவர் என நினைப்பது.

இரண்டு, ஒருவர் செய்த தீங்கை ஆண்டவர் நமக்கு நன்மையாக மாற்றுவார்.


2 comments:

  1. சிமயி எனும் பெயருடைய யாரோ ஒருவன் தாவீது குறித்து வசை பாடுகிறான்.சுற்றியிருப்பவர்களுக்குக் கோபம் வரினும் தாவீது ஆண்டவரின் மீது கொண்டிருந்த நம்பிக்கையால் 'அது ஆண்டவரிடமிருந்து கூட வந்திருக்கலாம்; ஆகவே பொறுமை காக்க வேண்டும்'என எண்ணுகிறார்.இது அவ்வளவு எளிதான செயலா என்ன? கண்டிப்பாக இல்லைதான்.ஆனால் முடியும்.எப்பொழுது? " நம்மை வந்து சேரும் அனைத்துமே அவரிடமிருந்தே வருகிறது" எனும் உச்ச கட்ட நம்பிக்கை நம்மிடம் மேலோங்கி நிற்கும் போது.இந்த விஷயத்தில் நமக்கு மேல்வரிச்சட்டமாக 'யோபு'வை விட ஒருவர் இருக்க முடியுமா என்ன? "To forgive is divine"... மாத்த்தின் முதல்நாளாகிய இன்று இதையே நம் தாரகமந்திரமாக்க் கொள்வோம்.இந்த மாதம் ' ஆசீர்வாதங்களின் மாதமாக' அமைந்திட தந்தைக்கும்,அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. Dear Father,Thank you for your beautiful thoughts for this new month.Congrats.

    ReplyDelete