Monday, January 18, 2016

வியப்புக்களின் இறைவன்

சவுலைப் புறக்கணிக்கும் கடவுள், அடுத்த அரசராக தாவீதை திருப்பொழிவு செய்ய சாமுவேலை அனுப்புகிறார்.

நாளைய முதல் வாசகத்தில் இரண்டு இடங்களில் 'பயம்' இருக்கிறது:

அ. சாமுவேல் சவுல் இருக்கும் நாட்டிற்குள் செல்லப் பயப்படுகின்றார். ஓர் அரசன் ஏற்கனவே இருக்கும்போது, இன்னொரு அரசனை திருப்பொழிவு செய்வது எப்படி என்பதுதான் இவரது பயத்திற்கான காரணம். இந்த பயத்தை போக்க கடவுள் அவரை பலி செலுத்த செல்வதுபோல அனுப்புகிறார்.

ஆ. சாமுவேலைக் கண்டவுடன் மக்கள் பயப்படுகின்றனர். அதாவது, இறைவாக்கினரின் வருகை அவர்களுக்கு சமாதானத்தைக் கொண்டு வருகிறதா அல்லது போரைக் கொண்டுவருகிறதா என்ற பயம்.

தான் சமாதானத்திற்காக வந்ததாகச் சொல்கிறார் சாமுவேல்.

பலியிட எல்லாரும் வரும்போது, தாவீது மட்டும் தூர இருக்கின்றார்.

ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தவர் அருள்பொழிவு பெறுகின்றார்.

இறைவன் வியப்புக்களின் இறைவன் என்பது மீண்டும் இங்கே புலனாகிறது.


2 comments:

  1. 'பயம்'....இந்த உணர்வை உயிர்கொல்லி என்றால் அது மிகையாகாது.அடுத்த நிமிடம் என்ன நடக்குமோ எனும் பய உணர்வுக்கு நாம் எல்லோருமே என்றேனும் ஆளாயிருப்போம்.அச்சமயங்களில் நாம் எதிர்பார்க்காத 'சாமுவேல்களும்' நமக்கு ஆறுதலின் தூதர்களாய் வந்திருப்பார்கள். இப்படி ஒரு நிகழ்வை தந்தை இன்று பதிவாய்த் தருகிறார்.ஆடுகளின் மைந்தன் ஒருவர் அரசு பீடத்துக்கு அமர்த்தப்படுகிறார்.அதிசயங்கள் செய்யும் இறைவன் நம் அருகில் இருக்கையில் பயம் ஏன்!? பதட்டம் ஏன்!? யோசிப்போம்.நெஞ்சுக்கு நெருக்கமான ஒரு பதிவைத் தந்த தந்தைக்குப் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  2. இறைவனின் கருணை ஒருவர் மீது ஒளிர வேண்டும் என்றால் அந்த நபர் எந்த நிலையில் இருந்தாலும் கடவுளின் கருணை அவர்களைக் சென்றடையும்.அதற்க்கு தாவீது ஒரு எடுத்துக்காட்டு.உண்மையாகவே நம் இறைவன் வியப்புக்களின் இறைவனே.இந்த வியப்பை இறைவன் நேரே வந்தும் நடத்தலாம்,பிறர் மூலமாகவும் நடத்தலாம்.அதை சுவைக்க நாம் தயாரா?நாம் தகுதி உள்ளவர்களா?அழகான பதிவு தந்தைக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

    ReplyDelete