Friday, January 22, 2016

மூவொரு உறவு

'நீ எங்கிருந்து வருகிறாய்?'

'போர்க்களத்திலிருந்து வருகிறேன்.'

'என்ன நடந்தது? சொல்!'

'வீரர்கள் பலர் ஓடினர். பலர் மடிந்தனர்.
சவுலும், யோனத்தானும் இறந்துவிட்டனர்!'

சவுலும், யோனத்தானும் இறந்த செய்தியை நேரிடையாக தாவீதுக்கு சொல்லத் தயங்கும் வீரன், 'எல்லாரும் இறந்துவிட்டார்கள்' என்று சுற்றி வளைத்து சொல்கிறான்.

ஆறாம் வகுப்பு அரையாண்டில் ஆங்கிலத்தில் நான் 16 மதிப்பெண்கள் வாங்கியிருந்தேன். வீட்டில் வந்து, 'நான் ஆங்கிலத்தில் பெயில்' என்று சொல்வதற்கு பயந்து கொண்டு, 'எங்க கிளாஸ்ல எல்லாரும் பெயிலு, நானும் பெயிலு!' என்று சொன்னது இன்னும் நினைவிருக்கிறது.

சவுல் மற்றும் யோனத்தான் இறந்த செய்தியை கேட்டு தாவீது புலம்பல் பாடல் ஒன்று இசைக்கின்றார். அதில் சில வார்த்தைகள் மிக அழகாக இருக்கின்றன:

'அன்புடையார், அருளுடையார்!'

'வாழ்விலும், சாவிலும் இணைபிரியார்!'

'சகோதரன் யோனத்தான்!'

'என் உள்ளம் உடைந்து போனது!'

'எனக்கு உவகை அளித்தவன் நீ!
என்மீது பொழிந்த பேரன்பை என்னென்பேன்!
அது மகளிரின் காதலையும் மிஞ்சியது அன்றோ!'

தாவீது யோனத்தானை மூன்று உறவு நிலைகளில் வைத்திருக்கிறார்: நண்பன், சகோதரன், காதலி

இரத்தம் மற்றும் திருமண உறவு வழியாக வராமல், மற்ற வழிகளில் நம் வாழ்விற்குள் வரும் உறவுகளுக்கு சில நேரங்களில் நாமும் பெயர் வைக்க முடிவதில்லை.

ஒரு சிலர் ஒரே நேரத்தில் இந்த மூன்றுமாகவும் இருப்பார்கள்.

இந்த மூவொரு உறவு நிலையை கம்பனும் பதிவு செய்துகின்றார்:

'பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து,
ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்,
வரிசிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்,
இருவரும் மாறிப்புக்கு, இதயம் எய்தினார்'

(கம்பராமாயணம், பால காண்டம், மிதிலை காட்சிப் படலம், 37)


4 comments:

  1. மிக அழகானதொரு பதிவு.நாமும் நம் வாழ்வில் உணர்ந்திருப்போம்....நாம் செய்த சில எதிர்மறை நிகழ்வுகளை ஒத்துக்கொள்ள முடியாமல் 'வந்து,போயி' என சுற்றி வளைத்து இறுதியில் வேறு வழியின்றி ஒத்துக்கொண்டிருப்போம்.வீரன் வழியாக சவுல் மற்றும் யோனத்தான் இறந்த செய்தி கேட்டுப் புலம்பும் தாவீதின் வரிகளைத் தந்தை மொழிபெயர்ப்பு செய்துள்ள விதம் ' அன்பின்' பரிமாணங்களை வெளிச்சமிட்டுக்காட்டுகிறது. மிகச்சரியாகச் சொன்னீர்கள்....சில சமயங்களில் இரத்தம் மற்றும் திருமணத்திற்கு வெளியே வரும் உறவுகளுக்கு நாம் பெயரிட முடியவில்லை தான்.உறவு உண்மையாய் இருக்கும் வரை அது எப்படி வந்தால் என்ன? இதை இன்னும் கம்பன் வாய் வழியாகவும் தந்தை உறுதிப்படுத்தியிருப்பது அழகு.மனதை நெருடும் ஒரு பதிவைத் தந்த தந்தைக்குப் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  2. உறவின் முப்பரிமாணத்தை அந்தக் கடலைக் காய்க்குள் உள்ள முத்துக்களை வைத்துத் தந்தை காட்டியிருக்கும் விதம் அருமை! பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  3. Dear Father,Congrats for your precious word on Trinity relationship.Yes,I have experienced this relationship.Thanks.

    ReplyDelete
  4. Fr Y. K.:

    This is an excellent piece of writing.
    It engages me to read you without being bored.

    Your knotting of David's sorrows with Poet Kamban's famous lines is, your special gift!

    a. In certain ancient cultures, the moment of death and departures, of losses and leavings trigger poetic musings. Who said one must sing only in joy?
    May be, David too is a Tamil in his heart to sing in sorrow and in joy...The bulk of his Psalms is a pretty proof.

    b. Saying things in discursive methods and found-about manner is typical of any genuine communication, as the prodding search for the intended truth is a call on both parties, the sender and the receiver. There are myriad and a million samples in human life...in engrossing prayers to the Lord, among siblings and children-and-parents and... lovers intent on intimacy...[more so in the kitchen and upon the pillows, than in formal setting of sitting rooms!]

    c. And your illustration in parable form - a pod, cradling three nuts! Sort of indivisible combo of "agape, philia and eros". Your single picture is worth 1000 words.

    GITANJALI A BERNARD, CHENNAI.

    ReplyDelete