Monday, January 4, 2016

பயிற்சி

'நாம் பேசுவதற்கு இரண்டு வயதுக்குக்குள் பழகி விடுகிறோம்.
ஆனால் பேசாமல் இருப்பதற்கு வாழ்நாள் முழுவதும் பயிற்சி தேவைப்படுகிறது!'

எங்கோ வாசித்த ஒன்று இது.

இரண்டு நாட்களுக்கு முன் அதிமுகவின் கொ.ப.செ. நாஞ்சில் சம்பத் ஏதேதோ பேசப்போய், இப்போது பதவியிழந்து நிற்கிறார்.

எல்லாமே ஒரு பழக்கம்தான் இல்லையா. அதாவது, என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதற்கு நமக்கு பயிற்சி தேவைப்படுகிறது.

நான் பணித்தளத்தில் இருந்தபோது, சில நேரங்களில் 'பேசியிருக்க வேண்டுமோ!' என்றும், பல நேரங்களில் 'பேசியிருக்க கூடாதோ!' என வருந்திய தருணங்கள் உண்டு.

சில நேரங்களில் ஞானம் காலம் பிந்தியே வருகின்றது.

நேற்றைய காலை செபத்தின் இரண்டாம் வாசகப் பகுதியில் அகுஸ்தினாரின் மறையுரை ஒன்று இடம்பெற்றிருந்தது. அதாவது, யோவானின் முதல் திருமடலில் வரும் 'அன்பு' என்ற சொல்லை வைத்து தன் உரையை எழுதுகின்றார் அகுஸ்தினார்.

என் மனதில் பதிந்தவற்றை மொழிபெயர்க்கிறேன்:

'கண்ணுக்குத் தெரியும் சகோதர, சகோதாரிகளை அன்பு செய்ய இயலாத ஒருவரால் கண்ணுக்கு தெரியாத கடவுளை அன்பு செய்ய முடியாது' என்கிறார் யோவான்.

ஏன் நேரடியாக நாம் கடவுளை அன்பு செய்ய முடியாதா? என சிலர் கேட்கலாம்.

முடியாது. ஏன்? ஏனென்றால் நம் அன்பிற்கு பயிற்சி தேவை. நம் கண்களுக்கு பயிற்சி தேவை.

கண்ணுக்கு தெரியும் சகோதர, சகோதரியை நாம் முழுமையாகப் பார்த்து அன்பு செய்து பழகினால்தான், காலப்போக்கில் நம் கண்கள் பயிற்சி பெற்று கண்ணுக்குத் தெரியாத கடவுளும் நமக்குத் தெரிவார்.

அன்பிற்கும் தேவை பயிற்சி.

நிற்க.

நாளைய நற்செய்தியிலும் இதைப் பார்க்கலாம்.

அதாவது, பெரிய கூட்டத்திற்கு உணவு கொடுக்க வேண்டும் என்று இயேசு தன் சீடர்களிடம் கேட்டபோது, 'ஐயயோ! இவ்ளோ பெரிய கூட்டத்துக்க எவ்ளோ காசுக்கு வாங்க முடியும்?' என கைகளை விரித்துவிட்டனர்.

இயேசு சிம்ப்பிளா பதில் சொல்றார்: 'உங்களிடம் எத்தனை இருக்கிறது? போய்ப் பாருங்கள்!'

'ஐந்து அப்பங்கள். இரண்டு மீன்கள்.'

இதை வைத்து அட்லீஸ்ட் ஒரு பத்து பேராவது பசியாறலாம்தானே.

எதையுமே பார்க்காமல் கைகளை விரித்துவிடுகின்றனர் சீடர்கள்.

ஒழுங்கா பார்க்கணும் பாஸ்!

ஆக, பார்க்கவும், பழகவும் பயிற்சி தேவை.


2 comments:

  1. சில நேரங்களில் மட்டுமல்ல....பல நேரங்களில் என் போன்றவர்களுக்கு 'ஞானம்' காலம் தாழ்த்தியே வருகிறது. பத்துக் கற்பனைகளை சுருக்கித் தந்தவர்கள் 'இறை நேசம்,மனிதநேசம்' என்றாக்கி இருப்பதன் நோக்கமே மனித நேசத்தின் மூலமாகவே இறைவனை நேசிக்க முடியும் என்று காட்டவே எனத்தோன்றுகிறது.நம்மிடம் என்ன இருக்கிறது என்பதை மட்டுமல்ல....இறைவனிடம் என்ன இருக்கிறது என்பதையும் சேர்த்தே பார்த்துப் பழக நமக்குப் பயிற்சி தேவை எனச் சொல்கிறது இன்றைய பதிவு.புனித அகுஸ்தினாரிடமிருந்து வரும் எல்லாமே 'சிப்பிக்குள் முத்து.' அதை எடுத்துத் தரும் தந்தையின் யுத்திக்கும்,புத்திக்கும் ஒரு சபாஷ்!!!

    ReplyDelete
  2. Dear Father,Very good explanation on Love.Love needs Training.Yes,that is true not only Training need for Love alone.In our life we need training for all the good actions.Because our good actions speak who we are?

    Thank you Father for saying that we need training to look and socialize with others.Congrats!!!

    ReplyDelete