Sunday, January 10, 2016

குழந்தைப்பேறின்மை

திருவழிபாட்டு ஆண்டின் கிறிஸ்து பிறப்புக் காலம் முடிந்து பொதுக்காலம் நாளை தொடங்குகிறது.

திருப்பலி திருவுடையின் நிறம் பச்சை.

நாளைய முதல் வாசகம், சாமுவேல் முதல் நூலின் தொடக்கம்.

நாம் கடந்த சில நாட்களுக்கு முன்னால் பார்த்த எல்கானா-அன்னா குடும்பத்தையே நாம் நாளையும் பார்க்கின்றோம்.

எட்டு வசனங்களே இருக்கும் நாளைய முதல் வாசகத்தில் அன்னா மலடியாயிருப்பது பற்றி நான்கு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'ஆண்டவர் அவரை மலடியாக்கியிருந்தார்.'

இதை வைத்து நாளை சிந்திப்போம்.

முதல் ஏற்பாட்டு சிந்தனையின்படி மனித உயிர் தோன்றுவதற்கும், மறைவதற்கும் காரணம் ஆண்டவராகிய இறைவன்.

அவரே கொடுக்கிறார். அவரே எடுக்கிறார்.

இதைத்தான் 'மக்கட்பேறு ஆண்டவர் அருளும் கொடை' என்கிறார் திருப்பாடல் ஆசிரியர்.

இந்த சிந்தனையின் அடிப்படையில்தான் கத்தோலிக்க திருஅவை, கருத்தடை, கருக்கலைப்பு, செயற்கை கருத்தரிப்பு என எல்லாவற்றிற்கும் எதிராக இருக்கின்றது.

நம் அறிவியில் மற்றும் விஞ்ஞானம் மனித உயிர் என்னும் மறைபொருள் முன் மண்டியிட்டே கிடக்கின்றது.

இன்று சில வீடுகளில் குழந்தைப்பேறின்மை பெரிய சாபமாக பார்க்கப்படுகிறது. அன்னாவின் குழந்தைப்பேறின்மை பற்றி பெனின்னாவும் கேலி செய்கிறாள்.

இப்படி நினைப்பதும் தவறுதான்.

எல்லாக் குழந்தைகளுக்காவும், குழந்தைப்பேறில்லாத பெற்றோருக்காகவும் சிறப்பாக செபிக்கலாமே!

நாம் இவ்வுலகிற்கு விட்டுச்செல்லும் ஒவ்வொரு மதிப்பீடும், ஒவ்வொரு முன்னேற்ற செயல்பாடும்கூட நாம் பெற்றெடுக்கும் குழந்தைகளே.

இது நம் கைகளில்தான் இருக்கிறது.


3 comments:

  1. நல்லதொரு பதிவு.விஞ்ஞானம் உச்சத்தைத் தொட்டுவிட்ட இக்காலத்தில் உயிர் தோன்றுவதிலும்,மறைவதிலும் இறைவனுக்கு சவால் விடுகிறான் மனிதன்.ஆனால் அவன் தோற்றுப்போகும் தருணங்களும் உண்டு.அதன் விளைவுதான் இந்த மலடி,வயிற்றில் புழு,பூச்சிகூட இல்லாதவள் எனும் சொற்றொடர்கள்." நாம் இவ்வுலகிற்கு விட்டுச்செல்லும் ஒவ்வொரு மதிப்பீடும்,ஒவ்வொரு முன்னேற்ற செயல்பாடும்கூட நாம் பெற்றெடுக்கும் குழந்தைகளே!" எனும் நல்லெண்ணம் எல்லோருக்கும் இருந்தால் இவ்வார்த்தைகள் கூட குறைப்பிரசவத்தைக் கண்டிருக்குமே! கண்டிப்பாக எல்லாக் குழந்தைகளுக்காகவும்,குழந்தைப்பேறு இல்லாதோருக்காகவும் செபிக்கும் தருணமிது...செபிப்போம்.சிந்தனைத் தூறல்களை தனக்கே உரியதொரு ஸ்டைலில் தூவும் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. இதென்ன 'கரங்களின்' வாரமா? நேற்றும் இன்றும் தந்தையின் வலைப்பதிவுகளில் காணப்படும் 'தாயும்,சேயும் இணைந்த' அந்தக் கரங்களைத்தான் குறிப்பிடுகிறேன்.அருமையோ அருமை!!!

    ReplyDelete
  3. நல்லதொரு பதிவை தந்த தந்தைக்கு வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்!!!

    ReplyDelete