Saturday, January 9, 2016

திருமுழுக்கு

நாளை ஆண்டவரின் பெருவிழாவை கொண்டாடுகிறோம்.

பங்கில் அருட்பணியாளராக பணியாற்றுவதில் கிடைக்கும் பல மகிழ்ச்சிகளில் ஒன்று குழந்தைகளுக்கு திருமுழுக்கு கொடுப்பது.

நான் 2008 அக்டோபர் திருத்தொண்டராக பணியாற்றியபோதுதான் முதல் திருமுழுக்கு கொடுத்தேன்.

அது ஒரு ஞாயிற்றுக் கிழமை.

நடைபெற்ற இடம் சலேத்து அன்னை திருத்தலம்.

குழந்தையின் பெயர் ஆரோக்கிய மேரி என நினைக்கிறேன்.

அதற்குப் பின் குழந்தைகள், பெரியவர்கள், தங்கை மகன், அத்தை மகளின் மகன் என எண்ணற்ற திருமுழுக்குகள்.

இத்தாலியில் திருமுழுக்கு கொடுக்கும்போது கொஞ்சம் நடுக்கமாக இருந்தது.

நம்ம ஊரில் குழந்தையின் தலையில் கொஞ்சம் நீர் ஊற்றுகிறோம். அவ்வளவுதான்.

ஆனால் இங்கே குழந்தையை அப்படியே தொட்டியில் இறக்கி எடுக்க வேண்டும். நான் தூக்கிய குழந்தை ரொம்ப கனமாக வேறு இருந்தது. இருந்தாலும் நல்ல முறையில் முடிந்தது.

குழந்தைகளைத் தொட்டு திருமுழுக்கு அருளடையாளம் கொடுப்பது மிக இனிமையான அனுபவம்.

ஏதோ, எனக்கே பிறந்த ஒரு குழந்தையை தொடுவது போல இருக்கும்.

சில குழந்தைகள் தூங்கும்.

சில குழந்தைகள் அழும்.

சில குழந்தைகள் சிரிக்கும்.

சில குழந்தைகள் வேடிக்கை பார்க்கும்.

சில குழந்தைகள் கையை நீட்டிக் கொண்டே இருக்கும்.

தண்ணீர் பட்டவுடன் சில குழந்தைகள் அழ ஆரம்பிக்கும்.

நாளைய திருநாள் என் பங்கு அனுபவங்களை அதிகம் நினைவுபடுத்துகிறது.


1 comment:

  1. Dear Father,Happy Birthday to you.Whenever we celebrate the baptism of our Lord we have to celebrate our birthday too.

    Very good sharing on "Baptism" also you remembered your own experience when you embrace child.Congrats.

    Your post made me to remember my Baptism.Thanks.

    Sometimes we must become childlike through that we can enter in the Gods kingdom.Good day Father!!!

    ReplyDelete