Monday, February 1, 2016

மெட்ரோ கதவு

'அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது
இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது'

(லூக்கா 2:24)

இன்று காலை கல்லூரிக்குச் செல்ல மெட்ரோ ஏறினேன்.

மெட்ரோ கதவு மூடியும் மெட்ரோ நகராமல் சில மணித்துளிகள் நின்றுகொண்டிருந்தது.

மெட்ரோவுக்கு வெளியே ப்ளாட்ஃபார்மில் டியூட்டியில் இருந்த ஒரு பெண் ஆர்மி இளவல் இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தாள். உயரம் எப்படியும் ஆறடி இரண்டு அங்குலம் இருக்கும். நல்ல முகத் தோற்றம். செந்நிற முடி. அதன் மேல் ஒரு தொப்பி. கையில் நீண்ட துப்பாக்கி. வலது தொடையில் தொங்கிக் கொண்டிருந்த மற்றொரு கைத்துப்பாக்கி. காதில் வயர்லெஸ் குச்சி. நடந்து கொண்டே இருந்தவள் சட்டென மெட்ரோ நோக்கி திரும்பினாள். மெட்ரோவின் கண்ணாடி ஜன்னலில் தன் முகம் பார்த்துக் கொண்டே கலைந்திருந்த இரண்டு முடிகளை  அப்படியே மேல்நோக்கி கோதிவிட்டு சரி செய்தாள்.

நிற்க.

மற்றவர் பார்க்குமாறு நாம் இருப்பதற்கு ரொம்பவே ஆசைப்படுகிறோம். இல்லையா?

நாளை ஆண்டவர் இயேசு எருசலேம் ஆலயத்தில் அர்ப்பணிக்கப்பட்ட திருநாளைக் கொண்டாடுகிறோம்.

உலகத்தையே மீட்க வந்த தங்கள் மகனைக் கைகளில் ஏந்திய இளம் தம்பதியினர் யோசேப்பு-மரியா, இரு மாடப்புறாக்களை மறு கையில் ஏந்தி நிற்கின்றனர்.

அலட்டிக்கொள்ளாத அர்ப்பணம் இதுதான்.

இன்று காலையிலிருந்து என் மனம் என் தேவ அழைத்தல் முகாம் நாட்களை யோசித்துக்கொண்டிருந்தது.

ஒரு மே மாதம். நானும் என் அம்மாவும் ராஜபாளையத்திலிருந்து புறப்பட்டு மதுரை ஞானஒளிவுபுரம் வருகிறோம். மதுரைக்கு வருவது அதுதான் முதல்முறை. முகவரி கண்டுபிடித்து பிரிட்டோ பள்ளிக்கு வந்து சேர்ந்தோம். ஏறக்குறைய 40 பேர் முகாமிற்கு வந்திருந்தார்கள். எட்டாம் வகுப்பு முடித்திருந்தேன். கலர் ஆடைகளைக் களை எடுத்து, 'அணியலாம்' என்று சொன்ன நான்கு ஆடைகளை மடித்து வைத்து, ஒரு தட்டு, டம்ளர் என வந்திருந்தேன். எல்லாமே புதியதாக இருந்தது. அன்றிரவு நாங்கள் தங்கியிருந்த ஹாஸ்டல் மாடியில் ஏறி விளையாடிக்கொண்டிருந்தோம். சுற்றிலும் லைட் வெளிச்சம். 'மதுரை இவ்ளோ பெரிசா!' என்று வாய்பிளந்து நின்றேன். அருட்திரு. ஏஞ்சல்தான் இறையழைத்தல் ஊக்குநர். அவருக்கு உதவியாக அன்று அருட்சகோதரராக இருந்த மரிய லூயிஸ் இருந்தார். அந்த முதல் இரவில் நான் தூங்கவே இல்லை.

முதல் அமர்வில் எல்லாரும் வட்டமாக அமர்ந்து ஒருவர் மற்றவரை அறிமுகப்படுத்தினோம். நிறைய ஊர்களின் பெயரை அன்றுதான் கேள்விப்பட்டேன். எனக்குத் தெரிந்த ஒரே ஊர் சுந்தரநாட்சியாபுரம். அங்கிருந்து பிரின்ஸ், மலையப்பன், இஞ்ஞாசி ஆகியோர் வந்திருந்தனர். என் முதல் தோழன் திருத்துவராஜ். 

யாரை எப்படிக் கூப்பிட வேண்டும், எப்படி பாட வேண்டும், எப்படி பேச வேண்டும் - எதுவுமே தெரியாது.

நிறைய போட்டிகள் வைத்தார்கள்.

'மறைமாவட்டம்,' 'திருத்தந்தை' என பெரிய பெரிய கேள்விகள் எல்லாம் கேட்டார்கள்.

விருதுநகரா இருக்குமோ என்று பார்த்தால், விருதுநகர் மாவட்டமாம்.

பங்குத்தந்தையாக இருக்குமோ என்று பக்கத்தில் எட்டிப் பார்த்தால் அந்த மாணவன் 'போப்' என எழுதியிருந்தான். நானும் கொஞ்சம் இனிசியல் போட்டு, ஜி.யு. போப் என எழுதி வைத்தேன்.

கடைசி நாள்.

ஏறக்குறைய யார் செலக்ட், யார் இல்லை என்பது தெரிந்துவிட்டது.

'வீட்டுக்கு ஒரே பையனை நாங்கள் எடுக்கமாட்டோம்!' என்றார் அருட்தந்தை. 

முதல் சுற்றிலேயே நான் வெளியேற்றப்பட்டேன்.

வீட்டிற்கு வந்து 15 நாட்கள் கழித்து, நான் தேர்வு செய்யப்பட்டதாக கடிதம் வந்தது. ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. அந்த மஞ்சள் கலர் கார்டு இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு தீப்பெட்டி ஆபிசில் அட்டைப்பெட்டி ஒட்டிக்கொண்டிருந்த என் அம்மாவிடம் ஓடினேன்.

அவர்களுக்கும் மகிழ்ச்சி.

இரவு என் அப்பாவிடம் சொன்னோம்.

அவர் ஒன்றுமே சொல்லவில்லை.

'இந்த வயசுல இவனுக்கு துறவறம்னா என்ன தெரியும்?' என்று மட்டும் கோபித்துக்கொண்டார்.

சரி...போகட்டும்...ஆக வேண்டியதைப் பார்ப்போம் என்றார்.

பெட்டி, போர்வை, புதிய யூனிஃபார்ம் என விறுவிறுப்பானது நாட்கள்.

இந்த ஒருவருடமாக நாம் கொண்டாடிய அர்ப்பண ஆண்டின் இறுதிநாளாகிய இன்று நான் என் அருள்நிலை வாழ்வு அர்ப்பணத்தை ஒருநிமிடம் எண்ணிப்பார்க்கின்றேன்.

'தான் போவது எங்கே என்று தெரியாமலேயே புறப்பட்டுப்போனார்' - இப்படித்தான் ஆபிராகமைப் பற்றிச் சொல்கிறார் எபிரேயர் திருமடலின் ஆசிரியர்.

எளிமை, கன்னிமை, கீழ்ப்படிதல் என்ற பெரிய பெரிய வார்த்தைகளில் இன்று வார்த்தைப்பாடுகள் எடுத்தாலும், அருள்நிலை இனியவர் தன் அழைத்தலில் நிலைக்கவும், நல்ல முறையில் வாழவும் வேண்டுமென்றால், தான் தேவ அழைத்தல் முகாமிற்கு சென்ற அந்த முதல் நாளை நினைத்துப்பார்த்தாலே போதும் என நினைக்கிறேன்.

அன்று என்னிலிருந்த யாரையும் இம்ப்ரஸ் பண்ண நினைக்காத எளிய உள்ளம், எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், எதையும் எதிர்நோக்காமல், எதிர்பார்க்காமல் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு இன்றும் என்னில் இருக்க வேண்டும் என்பதே என் செபமாக இருக்கிறது.


7 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete



  3. GITANJALIFebruary 2, 2016 at 12:20 AM


    Dear Fr Y K:

    [01] Your arranging in a single-stroke-line the Female Security Officer in Rome, the Infant Jesus, Mary and Joseph in Jerusalem, and your preparatory days in Gnanaolivupuram is masterly.

    [02] Sure, women love checking their images on the mirror of "men" constantly. The Bible carefully records Adam's love-song on his Eve: "Flesh of my flesh and bone of my bone"; but I am desperately searching for: "Hey, Darling Adam, how do I look? What do you think of me?" Is it not a pity that the "male-author" ignores or refuses to hear Eve's own feminine mirroring inquiries with her Adam...

    [03] Is Virudhunagar a city? You answer, "No, it is a district"; it happens! There are Mr Black who is white and Mr White who is black around my neighborhood. And Mrs. Brown is not brown at all..

    [04] It is a dull and thrill-less trip to know the exact destination, the precise mode of transportation, the tariff, the seat number, the point of departure and of destination, and other identities as one embark on a journey. Thus Abraham's journey has been one of surprise. And when this element of surprise is supplied to me and you by God, the journey becomes a pilgrimage. A pilgrimage without much of a schedule, map, guide or calendar...grounded only upon the guidance from above

    ReplyDelete
  4. பாராட்டுக்களுக்கெல்லாம் அப்பாற்பட்டதொரு பதிவு.சிறிய வயதில் தான் அறிந்தும் அறியாமலும், தனக்குத் தெரிந்தும் தெரியாமலும் தனக்கேற்பட்ட இறையழைத்தல் குறித்த தன் அனுபவங்களை அர்ப்பண ஆண்டின் கடைசி நாளில் அழகாகப் பதிவு செய்துள்ளார் தந்தை.இன்றையப் பதிவை வாசிக்கையில் எனக்கு நினைவில் வந்த பாடல் வரிகள் இவைதாம்....." உன்னோடு கைகோர்த்து நான் செல்லும் பாதை ஒரு போதும் தவறானதில்லை." ஆம் தன்னுடைய பிறப்புக்குக் காரணமான வேர்களையும்,தன்னை ஏற்றிவிட்ட ஏணிகளையும் மறக்காத ஒருவரை அவருக்கே தெரியாத வகையில் 'இறைவனின் திருக்கரம்' எப்படியெல்லாம் வழி நடத்துகிறது என்பதற்கு இன்றையப் பதிவுக்கு மேல் ஒரு சான்று தேவையில்லை என்று தோன்றுகிறது." தான் போவது எங்கே என்று தெரியாமலே புறப்பட்டுப் போனார்" .... தந்தை அபிரகாமுக்குச் சொல்லப்பட்ட வார்த்தைகள் இந்தத் ' தனயனுக்கும்' அழகாகப் பொருந்துகின்றன.மதுரையின் வெளிச்சம் கண்டு "மதுரை இவ்ளோ பெருசா"என இவர் வாய் பிளந்து நின்ற விதம்,காப்பியடித்த மேட்டரிலேயே திருத்தம் செய்து இனிஷயலோடு போப்பை ஜி.யு போப் ஆக்கிய விதம் ....இவைகளை விவரிக்கும் இடங்களில் இவரின் 'எளிமை' புலப்படுகிறது.இவரில் என்னைக் கவர்ந்தது இந்த 'எளிமை' தான். ஐந்தாண்டுகளுக்கு முன் ஒரு உதவிப்பங்குத் தந்தையாக தன் பங்குமக்களிடம் பேசுவதற்குக்கூட கூச்சப்பட்ட ஒருவர் இன்று உயரங்களைத் தொட்ட பின்னும் கூட இந்த எளிமைக்குச் சொந்தக்கார்ராக இருப்பது இறைவன் இவருக்கு அருளிய 'கொடை.' இவரின் இந்த எளிமை எங்கிருந்து வந்திருக்க முடியும் என யோசித்தபோது மனதில் பட்டது...இன்றைய அவரது இளம் வயதுப் புகைப்படத்திற்குப் பின்னால் இருக்கும் 'எளிமையின் இருப்பிடம்' தந்தை.மரிய செல்வம் போன்றவர்களாக்க்கூட இருக்கலாம் எனத்தோன்றியது.இன்றையப்பதிவின் இறுதி வரிகள்...." "எளிமை,கன்னிமை,கீழ்ப்படிதல்...............நினைத்துப்பார்த்தாலே போதும் என நினைக்கிறேன்." அருமையிலும் அருமை. தந்தையே! கண்டிப்பாக தாங்கள் இறைவனிடம் வேண்டி நிற்கும் வரங்கள் எனது செபமாகவும் இருக்கும் என்பதை இந்த நேரத்தில் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.தங்களையும்,தங்களின் வழி நிற்கும் அத்தனை அருள் நிலை இனியவர்களையும் இறைவன் கரம் பிடித்து வழி நடத்த வேண்டுகிறேன்.இறைவன் ஆசீர் தங்களோடு அபரிமிதமாகத் தங்குவதாக!!!!

    ReplyDelete
  5. Dear Bernard! I've been closely following the comments that you give in response to Fr.Yesu's Blogs & I've been simply amazed by the gesture with which You don't miss out even a minor detail.Congrats to you on that note. I do want to record my words of appreciation in today's comments especially in those very last lines..." And when this element of surprise is supplied to me and you by God, the journey becomes a pilgrimage. A pilgrimage without much of schedule,map,guide or calendar.... grounded only upon the guidance from above"..... Lovely.These words are not only applicable to you & Fr.Yesu but to every single individual who wants to tread thro' the path that He has paved for us. Praying for your health & all your intentions....

    ReplyDelete
  6. Dear Father,What a fantastic post and highly thought provoking message on the feast of presentation of the lord.

    May almighty God bless all of us.

    Congrats Dear Father.

    ReplyDelete
  7. Your parents deserve applaud and appreciation.... for their offering of you to the Lord... your childhood photo is apt for the day's reflection..

    ReplyDelete