Saturday, January 2, 2016

கலக்கம்

'இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான்.
அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று!'
(மத்தேயு 2:3)

'கலக்கம்' - ஒரு வித்தியாசமான உணர்வு. ஒரு செய்தியை கேட்டவுடன் அப்படியே நம் நெஞ்சுக் குழியில் ஏதோ ஒரு உணர்வு வந்துபோகும். அந்த உணர்வே கலக்கம். இதுவும் பயமும் ஒன்றல்ல.

கலக்கத்திற்கும் (being troubled or disturbed), பயத்திற்கும் (being afraid) வித்தியாசம் என்னவென்றால், பயம் நமக்கு அச்சுறுத்தல் தரும். ஆனால், கலக்கத்தில் அச்சுறுத்தல் இல்லை. மேலும், பயத்தை உருவாக்கும் காரணி மறைந்துவிட்டால் பயம் தானாக மறைந்துவிடும். ஆனால், கலக்கத்தை நான்தான் சரி செய்ய வேண்டும்.

உதாரணத்திற்கு, நான் எபிரேயம் முதல் லெவல் படித்துக் கொண்டிருந்தபோது, இறுதித் தேர்வில் 10க்கு 5 வாங்கினேன். பாஸ் மார்க் என்பதே 6. இந்த மார்க்கை நான் என் வலைப்பக்கத்தில் பார்த்தவுடன் தோன்றிய உணர்வு கலக்கம். இந்த கலக்கத்தை நான்தான் சரி செய்ய வேண்டும். இது பயம் அல்ல. ஏனெனில் மதிப்பெண்கள் நமக்கு பயம் தருவதில்லை.

நான் தனியே அறையில் இருக்கிறேன். திடீரென கதவு தட்டும் சத்தம். கண்ணாடி வழியாக பார்க்கிறேன். ஒருவன் நீண்ட கத்தியோடு நின்று கொண்டிருக்கிறான். நான் கதவை திறக்கவில்லை. ஏனெனில் பயம். அவன் என் கதவை தட்டிக் கொண்டே இருக்கும் வரை எனக்கு பயம் இருக்கும். அவன் போய்விட்டால் பயமும் போய்விடும்.

இரண்டையும் குழப்பிக் கொண்டால்தான் பிரச்சினை வருகிறது.

ஏரோதுவும் குழப்பிக் கொள்கிறான்.

கலக்கத்தை பயம் என எண்ணிக்கொண்டு அடுத்தடுத்து தவறு செய்கிறான்:

அ. ஞானியரை தனியாக கூப்பிட்டு தானும் குழந்தையை சந்திக்க விரும்புவதாக பொய் சொல்கிறான்
ஆ. தான் ஏமாற்றப்பட்டதும் கோபம் கொள்கிறான்
இ. தன் கோபத்தை எல்லா குழந்தைகள் மேலும் காட்டுகிறான்

முதல் ஏற்பாட்டில் சவுலும் இதே நிலைக்கு ஆளாகிறார்:

தாவீதின் வளர்ச்சி கண்டு கலக்கம் கொள்கிறார். அந்த கலக்கம் அவருக்கு பயமாக மாறி அச்சுறுத்துகிறது.

ஆனால், இறுதியில் 'ஆண்டவர் தாவீதோடு இருப்பதை' உணர்ந்து கொள்கிறார்.


2 comments:

  1. தந்தைக்கு வணக்கம்.கலக்கம் களைந்து களிப்புடன் ஆண்டவரை பற்றிக்கொண்டு,கடவுள் இருத்தலையும் உணர்ந்து கொண்டு வாழக் கூறியிருக்கும் தந்தைக்கு நன்றியும், பாராட்டுக்களும்!!!

    ReplyDelete
  2. தந்தையின் தற்போதையப் பதிவுகள் புதுவருடத்திற்குள் அடி எடுத்து வைத்திருக்கும் நமக்கு இந்த ஆண்டு முழுவதையும் எதிர்கொள்ள பல நுணுக்கமான விஷயங்களைக் கூறுவதாக உள்ளது.பல சமயங்களில் நமக்கு நம்மை அடுத்திருப்பவரின் செயல்பாடுகள் கலக்கத்தையோ,பயத்தையோ ஏற்படுத்தலாம்.இந்த அச்சுறுத்தல் நமக்குத் தேவையற்ற ஒன்று " தாவீதோடு குடிகொண்ட இறைவன்" அவர்களோடும் குடிகொண்டுள்ளார் என்பதை உணர்ந்தோமானால்.ஏதோ திருமணமாகிப் புகுந்த வீடு செல்லும் பெண்ணுக்கு புத்திமதிகள் கூறும் தாயைப் போல அஅறிவுரைகளை ஒவ்வொன்றாகத் தரும் தந்தைக்கு நன்றியும்! பாராட்டும்!!!

    ReplyDelete