Thursday, May 1, 2014

நான் ஒரு அன்ஈக்வல்!

இந்த உலகத்துல எல்லாமே ஈக்வல் என்று சொல்ல முடியுமா? ஏன் ஒன்று பெரியதாக மற்றொன்று சிறியதாக இருக்க வேண்டும்? ஏன் இந்த வேறுபாடு? இதைச் சரிசெய்யவே முடியாதா?

நம் கண்ணுக்குத் தெரிகின்ற அன்ஈக்வல் சிட்டுவேஷனே நிறைய இருக்க, நாமும் பல நேரங்களில் மற்றவரோடு ஒப்பீடு செய்து 'நான் ஒரு அன்ஈக்வல்' என்றும் 'நான் ரொம்ப லோ' என்றும் முடிவு செய்துவிடுகிறோம்.

நேற்றைய தினம் 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' திரைப்படம் பார்த்தேன். ஆங்கிலம் தெரியாத ஒரு சராசரி குடும்பப் பெண் தன் கணவனோடும், பிள்ளைகளோடும், தான் ஏதும் அறியாத அந்நிய நாட்டோடும் செய்யும் மனப்போராட்டத்தை மிக எதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கும் திரைப்படம்.

இங்கிலிஷ் தெரியாதது ஒரு குற்றமா? என்ற கேள்வியை முதலில் நம்மில் எழுப்பினாலும், இயக்குநர் கதையைக் கையாண்டிருக்கும் விதம் இங்கிலிஷையும் தாண்டி குடும்பம், கலாச்சாரம், மொழிக்கற்றல், தடைகளைத் தாண்டுதல், திருமணம், காதல், நட்பு, நகைச்சுவை என விரிகின்றது. நேரம் கிடைத்தால் கண்டிப்பாகப் பாருங்கள்.

மத்தவங்க நம்மள அன்ஈக்வல்னு சொல்ற வலியை விட நமக்கு நாமே 'நான் ஒரு அன்ஈக்வல்' என்று சொல்லும் வலிதான் மிகவும் கொடுமையானது.

நம்மகிட்ட இருக்கிற நம்மை அடையாளம் கண்டுவிட்டோம் என்றால் வெகு எளிதாக இந்த வலியை வென்று விடலாம்.

அந்த வெற்றிக்கு நம் அருகில் இருப்பவர்களும் உதவி செய்கின்றனர்.

'உன்னை உனக்குத் தெரிவதைவிட என்னை உனக்குத் தெரியும்' என்ற பாடல் வரி அந்த அப்பாவி மனைவி தன் கணவன் மேல் கொண்டுள்ள கரிசனையைக் காட்டும்.

இந்த அப்பாவி மனைவிக்கு அவளையே அடையாளம் காட்டும் நபராக அவளது வாழ்வில் நுழைவார் ஆங்கிலம் பயிலும் சக மாணவன் லாவ்ரண்.

நமக்கு அருகில் இருப்பவர்கள் நம்மை அடையாளம் காட்டுவது ஒரு பக்கம். நாமே நம்மை அறிந்து கொள்வது மறுபக்கம். இந்த இரண்டு பக்கங்களும் இணைந்தால் 'மற்றவர்கள் நம்மைச் செல்லாக் காசு' என நினைத்தாலும் நாம் செல்லும் காசுகளே!

4 comments:

  1. கோடுகள் அனைத்துமே சம்மாக இருப்பின் நமக்கு சதுரத்தைத்தவிர "செவ்வகங்களும்,வட்டங்களும்" கூட இருப்பது தெரிந்திருக்க முடியாதே..ஐந்து விரல்களையும் கூட ஆண்டவன் unequal ஆகத்தானே படைத்துள்ளார்.நமக்கு பலவீனங்கள் இருப்பது தவறில்லை...அவற்றை புரிந்து கொண்டு,ஏற்றுக்கொண்டு அந்த பலவீனங்களையும் நமது பலமாக்கி வாழ்வதே வாழ்க்கை.நம்மை "செல்லும் காசுகளா"க்குவதும் இப்படிப்பட்ட வாழ்க்கைதான்.இதை வாழ்க்கையோடு இணைத்துச் சொல்லியிருப்பது அழகு.தந்தையின் இரண்டாம் innings..க்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Anonymous5/02/2014

    தந்தையே மீண்டும் உங்களை Blogல் சந்திப்பதையிட்டு மகிழ்ச்சி. ஒவ்வொரு நாளும் உங்கள் Blogக்கு வருவேன், 10 நாட்களுக்கு மேல் உங்கள் பதிவுகளை காணாதது உங்களையே காணாததுபோல் இருந்தது. சில வேளை புனிதப்பட்ட நிகழ்வுக்கு உரோமைக்கு உதவிக்காக சென்று இருப்பீர்கள் என்று தனக்கு தானே சமாதானம் கூறி உங்கள் பழைய பதிவுகளுடன் சிறிது நேரம் இருந்துவிட்டு செல்வேன். 10 வாரங்கள் அதிகம் தந்தையே உங்கள் வரவையும் எதிர் பார்த்து பல உயிர்கள் உண்டு எனவே எங்களை அதிகம் காக்க வைக்க கூடாது என! ம்ம்ம்..... நேரம் கிடைக்கும்போது ஏதாவது எழுதுங்கள் நாங்களும் படித்து மகிழ்வோம். சரி நான் ஒரு அன்ஈக்வல் தொடர்க என் கருத்தையும் பதிவு செய்து மகிழ்வுடன் விடைபெறுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் இனிய வார்த்தைகளுக்கு நன்றி. என் எழுத்து மேல இவ்வளவு ஆசையா இருக்கீங்களே...மேகத்தை விட்டு இந்த நிலா வெளி வந்து பெயர் சொல்வது எந்நாளோ?

      Delete
  3. Anonymous5/02/2014

    நான்கு வேர்க்கடலை செடிகளைப் பறித்துப் பாருங்கள். நான்கிலும் விளைந்துள்ள அனைத்து மணிலாக்களும் ஒரே அளவில், ஒரே தரத்தில் உள்ளதா என்று? வளமான மண்ணில் ஊன்றியிருந்தாலும், சரியான அளவில் நீர்பாய்ச்சினாலும், போதுமான சூரிய வெளிச்சம் இருந்தாலும் அவற்றை எல்லாம் பெற்று பயனுள்ள செடியாய், மரமாய் வளர்வ தென்பது விதையின் வீரியத்திலும் அல்லவா அடங்கியுள்ளது.

    அசைகின்ற காட்சிகளை காண்பிக்க நமக்கு அசையாத திரை ஒன்று தேவைப்படுகிறது. நம்மை சஞ்சலப்படுத்தும் அளவு அசைக்கின்ற சூழல்கள் கண்ணெதிரே தென்பட்டாலும் அவை நம்முள் ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விடாத படி நம் மனத்தை உறுதியான நிலையில் அசையா நிலையில் வைத்திருப்பது அவசியமாகும். நமக்கென்று தனிப்பாதையும், நம் முன்னேற்றத்திற்கான வழிமுறைகளும் தனிப்பட்ட முறையில் அமைக்கும்போதுதான் நாம் வெற்றி வாசலை அடையமுடியும். வாழும் கலையை வெறுமனே அறிந்து வைத்திருப்பதில் பயனில்லை. அறிந்ததை நடை முறைப்படுத்தி முழுமையாய் வாழ்வதுதானே சிறந்தது.

    ReplyDelete