Wednesday, March 2, 2016

அச்சுறத்தலும், முற்றுகையும்

யூதித்து நூலின் முதல் உட்பிரிவு (1:1-3:10) மற்றும் இரண்டாம் உட்பிரிவு (4:1-7:32) எதிரிகளின் அச்சுறுத்தலையும், இஸ்ரயேல் மக்களின் வலுவற்ற நிலையையும் நம் முன் வைக்கின்றன.

1. மிகைப்படுத்துதல்

இந்த இரண்டு உட்பிரிவுகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒரு இலக்கியக்கூறு 'மிகைப்படுத்துதல்' (magnification or exaggeration).

அதாவது, 'அவங்க அப்படியாக்கும்! இப்படியாக்கும்!' என்று நிறைய பில்ட்-அப் கொடுப்பது.

அவற்றிற்கான சில உதாரணங்கள்:

அ. 'எழுபது முழ உயரமும், ஐம்பது முழ அகலமும் உடைய மதில்களை எழுப்பினான்' (1:2)

இவ்வளவு பெரிய மதில்கள் இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் எதுவும் இல்லை.

ஆ. 'ஓர் இலட்சத்து இருபதாயிரம் தேர்ந்தெடுத்த வீரர்களையும் வில் வீரர்களான குதிரைப் படையினர் பன்னிரண்டாயிரம் பேரையும் திரட்டினான்' (2:15)

இந்நூலில் குறிப்பிடும் நிகழ்வுகள் நடைபெறும் காலத்தில் உலகத்திலேயே இவ்வளவு மனிதர்கள் இருந்திருப்பார்களா என்பதே ஐயமாக இருக்கிறது.

2. நோன்பும், தவமும், செபமும்

தங்கள் மன்றாட்டு இறைவனால் கேட்கப்பட வேண்டும் என்பதற்காக, நோன்பும், தவமும் இருந்து செபிக்கின்றனர் இஸ்ரயேல் மக்கள். இறைவனும் அவர்கள் குரலுக்குச் செவிகொடுக்கின்றார்.

3. அக்கியோரின் உரை

அக்கியோர் இஸ்ரயேல் மக்கள் யார் என்பதையும், அவர்களின் கடவுள் எப்படிப்பட்ட வல்ல செயல்களைச் செய்யக்கூடியவர் என்பதையும் ஒலோபெரினிடம் எடுத்துரைக்கின்றார்.

அக்கியோருக்கு நடந்தது என்ன?

நாளை பார்ப்போம்.


1 comment:

  1. தந்தை ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்த 'யூதித்து' நூலில் எதிரிகளின் அச்சுறுத்தலும்,இஸ்ரேல் மக்களின் வலுவற்ற நிலையுமே முன்னிருத்தப்படுவதாகத் தெரிகிறது.இதில் தந்தை குறிப்பிட்டுள்ள 'மிகைப்படுத்துதல்'என்பது நாம் இலக்கியங்களில் பார்த்துப் பழக்கப்பட்டவையே!ஒருசில விஷயங்களின் பிரமாண்டத்தைப்பற்றிக் கூறும் போது இதுமாதிரி மிகைப்படுத்துதல் தவிர்க்க இயலாதது என நினைக்கிறேன்.அடுத்துச் சொல்லப்படும் 'நோன்பும்,தவமும் செபமும்'....இத்தவக்காலத்துக்கேற்ற விஷயங்களே! நாம் தேவை என நினைக்கும் சிலவற்றை அடைந்தே தீரவேண்டும் என்பதற்காக.....இறைவன் கொடுத்தே தீரவேண்டும் என்பதற்காக நாம் இறைவனிடம் பிடிக்கும் ஒரு வகையான 'சிறுபிள்ளைத்தனமான அடம்' தான் இது என நினைக்கிறேன்..... இந்த நோன்பு,தவம்,செபம் இவற்றை.இவை இறைவனுக்கும் பிடித்தவையாக இருக்கும் காரணத்தால் அவரும் நம் குரலுக்கு செவிமடுப்பதையும் உணரமுடிகிறது.இந்த மூன்றாவதான 'அக்கியோர்' பற்றிய விஷயம்...?! பொறுத்திருந்து பார்ப்போம்...அது என்ன வென்று.காலத்துக்கேற்ற விஷயங்களைக் கருத்தாய் சொல்லும் தந்தைக்கு 'நன்றி' எனும் வார்த்தையோடு அவர் மேற்கொண்டிருக்கும் காரியங்கள் அனைத்திலும் இறைவனின் கரம் அவரை வலுப்படுத்த, வழிநடத்த வேண்டுகிறேன்.அன்புடன்.....

    ReplyDelete