Tuesday, March 29, 2016

மாஸ்டர் - விக்டிம்

ஐந்து நாட்களுக்கு முன் நாம் விட்ட எஸ்தர் (கி) நூலுக்குத் திரும்புவோம்.

எஸ்தர் மற்றும் மொர்தெக்காய் சந்தித்த இரண்டு பிரச்சினைகள்:

ஒன்று, ஆமான்.

இரண்டு, எல்லா யூதர்களும் கொல்லப்படுவதற்கான ஆணை.

ஆமானின் உண்மையான குணம் தெரிந்து அரசன் அவனைத் தூக்கிலிட்டுவிட்டான்.

இப்போது, இரண்டாம் பிரச்சனை தீர வேண்டும்.

'உனக்கு வேறென்ன வேண்டும்?' என்று அரசன் எஸ்தரிடம் மீண்டும் கேட்க, எஸ்தர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தன் இனத்து மக்களை ஆபத்திலிருந்து விடுவிக்கின்றாள்.

இதற்கு நன்றியாக 'பூரிம்' திருநாளை யூதர்கள் கொண்டாடுகிறார்கள். 'பூரிம்' என்றால் 'திருவுளச் சீட்டுகள்,' அல்லது 'தங்களுடைய நலனுக்காக' என்பது பொருள். தங்களின் நலனுக்காக இறைவனின் திருமுன் விழுந்த சீட்டுதான் எஸ்தர்.

எஸ்தர் நூல் நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

வாழ்வில் நமக்கு நடக்கும் நிகழ்வுகளில் நாம் இரண்டு மனப்பக்குவங்களை உருவாக்க முடியும். ஒன்று, அந்த நிகழ்வின் மாஸ்டர் ஆக இருப்பது. இரண்டு, அந்த நிகழ்வின் விக்டிம் ஆக இருப்பது.

கல்யாண வீடுகளில் இந்த இரண்டு வகை மக்களையும் பார்க்கலாம். ஒரு சிலர் யார் வீட்டுக் கல்யாணம் என்றாலும், தாங்களாகவே முன்வந்து வேலை செய்து கொண்டிருப்பார்கள். பந்தி பரிமாறுவார்கள். எல்லாரிடமும் வந்து பேசுவார்கள். மற்றும் சிலர் தங்கள் வீட்டுக் கல்யாணமே என்றாலும் சற்று தள்ளியே இருப்பர். வந்திருக்கும் ஒவ்வொருவரையும் தங்கள் மனதளவில் திறனாய்வு செய்து கொண்டிருப்பார்கள். சின்ன விஷயத்துக்கெல்லாம் குறைபட்டுக்கொள்வார்கள்.

'மாஸ்டர்' ஆக இருப்பதற்கும், 'விக்டிம்' ஆக இருப்பதற்கும் ஒரே வித்தியாசம்தான்.

'பொறுப்புணர்வு'

நம் வாழ்வில் நடக்கும் நிகழ்விற்கு, நாம் பொறுப்பு ஏற்றால் நாம் மாஸ்டர். பொறுப்பை உதறித் தள்ளினால் விக்டிம்.

விக்டிம் ஆக இருக்கும்போது நமக்கு வரும் முதல் உணர்வு 'சுய-இரக்கம்(!)' - 'எனக்கு என்ன தெரியும்?' 'என்னால் எப்படி முடியும்?' என்று தன்னையே குற்றப்படுத்திக்கொள்வது. 'என்னால் எப்படி அரசன் முன் போக முடியும்?' 'நான் என்ன செய்ய முடியும்?' என எஸ்தர் முதலில் ஒதுங்க நினைக்கிறாள். ஆனால், அந்த நேரத்தில் மொர்தெக்காய் உற்சாகம் கொடுக்கிறார்.

மொர்தெக்காய் கொடுத்த உற்சாகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தன்னைச் சுற்றிய நிகழ்வுகளுக்குப் பொறுப்பேற்கிறார் எஸ்தர்.

அவரின் பொறுப்புணர்வே அவரை மாஸ்டர் ஆக்குகிறது.

எஸ்தர் (கி) நூல் நிறைவுபெற்றது.



2 comments:

  1. Praise the Lord ... The lesson from the book of Esther is crisp and interesting.... being a victim or master... Thanks for underlining the importance of taking responsibility...to move from victim to master...

    ReplyDelete
  2. அழகான 'எஸ்தர்' என்ற பெண்ணைப்பற்றிய நூலுக்கு அழகானதொரு கிரீடம் போன்ற முடிவுரை.நாம் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் நாம் 'மாஸ்டரா'?' இல்லை ' விக்டிமா?'. எத்தனை பெரிய கேள்விகளை எழுப்பி அவற்றிற்கு ஒரே வித்தியாசம் ' பொறுப்புணர்வு' என்ற பதிலைப் பொட்டென்று போட்டு உடைக்கிறார் தந்தை.யூத குல மக்களின் நலனுக்காக இறைவனின் திருமுன் விழுந்த திருவுளச் சீட்டு தான் எஸ்தர் எனில் நாம் யாருக்காகவாவது ஒரு திருவுளச்சீட்டாய் இருந்துள்ளோமா? இந்த நல்லெண்ணத்தால் யாரையும் இடுக்கண்ணிலிருந்து மீட்டுள்ளோமா? யோசிக்க வேண்டிய நேரம். நாமும் கூட நம்மிடம் வரும் ' 'எஸ்தர்களுக்கு' உற்சாகம் தரும் 'மொர்தெக்காய்களாக' மாற வரம் கேட்போம்.பல எஸ்தர்களை உருவாக்க முயற்சிப்போம்.நல்லதொரு நூலை நலமே முடித்திட்டத் தந்தைக்குப் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete