Tuesday, March 15, 2016

எஸ்தர் (கிரேக்கம்)

ஏற்றம் இருந்தால் இறக்கமும், இறக்கம் இருந்தால் ஏற்றமும் நிச்சயம்!

இந்த ஒற்றை வாக்கியத்தில் அடக்கிவிடலாம் எஸ்தர் நூலை.

பாபிலோனியர்களின் ஆட்சியில் இறங்கிக் கிடந்த யூதர்கள் பாரசீகர்கள் ஆட்சியில் ஏற்றம் பெறுகின்றனர்.

சாதாரண நிலையில் இருந்த எஸ்தர் அரசி என்னும் நிலைக்கு ஏற்றம் பெறுகிறார். தான் பெற்ற ஏற்றத்தைக் கொண்டு தன் ஒட்டுமொத்த இனத்தையும் ஏற்றிவிடுகின்றார்.

உயிரியல் அடிப்படையில் ஆண் என்பவர் எக்ஸ்-ஒய் க்ரோமசோம், பெண் என்பவர் எக்ஸ்-எக்ஸ் க்ரோமசோம்.

இது மட்டும்தான் உயிரியில் வேறுபாடு. மற்ற எல்லா வேறுபாடுகளும் காலப்போக்கில் நாமே உருவாக்கிக் கொண்டவைதாம்.

சமூகத்தில் ஆண் மேலோங்கி உயர்ந்ததற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் இந்த இரண்டுமே பொய்கள்.

அ. ஆண்களின் உடலியில் பெண்களின் உடலியலை விட திடமானது. ஆனால் நோயிலிருந்து, சோர்விலுருந்து, வலியிலிருந்து தங்களையே காத்துக்கொள்ளும் திறன் பெண்ணுக்குத்தான் அதிகம். உதாரணத்திற்கு, பெண்ணின் பிரசவ வலிபோல வெர்ச்சுவாக ஆண்களுக்கு வலி ஏற்படுத்தப்பட்டதில் 16 பேரில் ஓர் ஆண் மட்டும்தான் முழு வலிiயையும் தாங்கினார் என்றும், மற்ற 15பேர் பாதியிலேயே மெஷினை ஆஃப் பண்ணிவிட்டார்கள் என்றும் சொல்கிறது இங்கிலாந்தின் ஆய்வு. மேலும், பரிணாம வளர்ச்சியில் உடல் வலிமை சார்ந்த செயல்களை ஆண்கள் செய்தனர், வலிமை தேவையற்ற செயல்களை பெண்கள் செய்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், உடல் வலிமையே தேவையில்லாத குருத்துவம், சட்டம், ஆட்சியுரிமை என்ற வேலைகளை மட்டும் ஏன் ஆண்கள் தங்களுக்கென மட்டும் வைத்துக்கொண்டார்கள்.

ஆ. குழந்தைகள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு தொடக்க காலத்தில் கடினமாக இருந்தது. இதற்கு ஆண்களின் துணையை நாடினர் பெண்கள். காலப்போக்கில் இதே சார்பு நிலையாக உருவாகிவிட்டது. ஆனால் இந்தக் கருத்தும் ஏற்புடையது அல்ல.

எஸ்தர் நூலின் முதல் பிரிவிலேயே ஆண்-பெண் சமத்துவம் பற்றிய கேள்வி வருகின்றது.

அர்த்தக்சஸ்தா என்ற ஒரு அரசன். அவன் தன் அரசியாகத் தேர்ந்து கொண்டவளின் பெயர் ஆஸ்தின்.

(நிறைய பெண்கள் அரசனின் நெஞ்சுக்கு நெருக்கமாக இருப்பர். அவர்களில் ஒருத்தியை மட்டும் அவன் 'அரசி' என்ற நிலைக்கு உயர்த்திக்கொள்ளலாம். இந்த 'அரசி' என்னும் பட்டம் நிலையானது அல்ல. எப்போது வேண்டுமானாலும் அரசன் அதை வேறொருவருக்கு கொடுக்க முடியும்.)

'வா!' என்றால் 'வரணும்!', 'போ!' என்றால் 'போகணும்!' என தன் இளவல்களை வைத்திருக்கிறான் இந்த அரசன்.

ஒரு பெரிய விருந்து ஏற்பாடு செய்கிறான். விருந்துக்கு தன் அரசியும் வர வேண்டும் என அழைப்பு விடுக்கிறான். அழைப்பு மற்றவர்கள் வழியாக விடப்படுகிறது. அதாவது, அரசனும், அரசியும் வேறு வேறு இடங்களில் வசிக்கின்றனர்.

'நீ என்னடா கூப்பிடுறது!' 'நான் என்னடா வர்றது!' என நினைக்கின்ற ஆஸ்தின் வர மறுக்கிறாள்.

அரசியின் இந்த மறுப்பு, அரசனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆண் இனத்தையே அதிர்ச்சியடையச் செய்கிறது.

'இன்று அரசன் கூப்பிட்டு அரசி வரவில்லையென்றால், நாளை நான் கூப்பிட்டால் என் மனைவி வரமாட்டாளே!' என்று அடுப்பெரிப்பவன் முதல், ஆடுமேய்ப்பவன் வரை புலம்பத் தொடங்குகின்றனர்.

நிலைமை எந்த அளவிற்கு மோசமாகிறது என்றால், அரசன் அவசரமாக புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவருகிறான்:

'கணவர்கள் எல்லாரும் அவரவர் வீட்டில் மதிக்கப்பட வேண்டும்!' (எஸ்தர் 1:22)

தேடல் தொடரும்.


1 comment:

  1. ' எஸ்தர்' எனும் பெயரில் எனது பள்ளித்தோழிகள் இருவர் மிடுக்குடன் காணப்பட்ட காரணத்தாலேயே இந்தப் பெயர் என் காதில் விழும்போது 'மிடுக்கு' எனும் அதன் அர்த்தமும் சேர்ந்தே வரும்.ஆம்! இந்தக் க்ரோமசோம் ஏற்பாட்டைத்தவிர உயிரியல் ரீதியாக ஆண்கள் பெண்களை விட எந்த விதத்திலும் மேம்பட்டவர்கள் இல்லைதான்.தந்தையே ஒத்துக்கொள்வது போல் நோயிலிருந்தும்,சோர்விலிருந்தும்,வலியிலிருந்தும் தங்களை மட்டுமின்றி தங்களைச் சேர்ந்தவர்களையும் காத்துக்கொள்ளும் திறன் பெண்களுக்கு அதிகம் தான்.ஆனாலும் பெண்ணானவள் ஆணின் விலாவிலிருந்து உருவாக்கப்பட்டவள் எனும் கதையை வாசித்து வாசித்தே பெண்களுக்கு அடிமை சாசனம் எழுதி
    விட்டார்கள் இந்த ஆண்கள்.அதனுடைய பிரதிபலிப்பு தான் அர்த்தக்சஸ்தா எனும் அரசன் தன் நெஞ்சுக்கு நெருக்கமான பல பெண்களை வைத்திருந்ததும்,அதில் நினைத்தவளை நினைத்த நேரம் ' அரசி' யாக அங்கீகரித்ததும் கூட.இதில் அந்தப் பெண்கள் பெருமைப்பட ஏதேனும் அருகதை இருந்ததா என்பது வேறு விஷயம்.அடுப்பூதும் பெண்கள் தங்கள் ஆட்டத்தை அவிழ்த்து விடும்போது அரசன் முதல் ஆண்டி வரை யாருமே அதிர்ச்சியடைவதைத் தவிர வேறு வழியில்லை." "கணவர்கள் எல்லாம் அவரவர் வீட்டில் மதிக்கப்பட வேண்டும்" எனும் சட்டம் யார் மனத்தையும் மாற்றி விடாது.ஆண்களின் தாளத்திற்கு நடனமாடும் பொம்மைகளாகப் பெண்களைப்பார்ப்தை நிறுத்தி விட்டு அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.நடக்குமா? தந்தையின் தேடலில் ஏதேனும் விடியல் கிடைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.அடுத்தடுத்து பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் விஷயங்களை எம்மிடம் கொண்டு சேர்க்கும் தந்தைக்குப் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete