Thursday, July 2, 2015

பொன்னு கிடைச்சாலும்

பொன்னு கிடைச்சாலும் புதன் கிடைக்காதுன்னு சொல்வாங்க.

ஆனா, இன்று புதன் கிடைச்சாலும் புதுசா ஒரு ஐடியாவும் கிடைக்கவில்லை.

உரோமை வந்திருக்கும் மதுரை பேராயர் அவர்களை சந்திக்க அவர்கள் தங்கியிருக்கும் இல்லம் சென்றேன். காலிங் பெல் அடித்துக் காத்திருந்தும் ஒருவரையும் காணவில்லை. கொஞ்ச நேரம் கழித்து பாடல் சப்தம் கேட்டது. திருப்பலியில் இருக்கிறார்கள்போல என நினைத்துக்கொண்டிருக்க, கதவு திறந்தது. உள்ளே சென்றேன்.

'யாரைப் பார்க்கணும்?' என்று கேட்டார் ஒரு அருட்சகோதரி.

சொன்னேன்.

'உள்ள வாங்க!' என்றார்.

சென்றுகொண்டிருக்கும்போது ஆலயத்திலிருந்து ஒரு வயதான அருட்சகோதரி வெளியே வந்தார். வயது ஏறக்குறைய 80க்கு மேல் இருக்கும். வாக்கிங் ஸ்டிக் வைத்துதான் நடந்து வந்தார்.

'உன் பெயர் என்ன?' என்று கேட்டார். 'இயேசு' என்றேன்.

'உனக்கு ஒரு தங்கை இருக்கிறதல்லவா?' என்றார்.

கொஞ்ச நேரம் என் ஆச்சர்யத்தை அடக்க முடியவில்லை.

நான் சுதாரிப்பதற்குள், 'நீ வீட்டிற்கு ஒரே பையன்தானே!' என்றார்.

'ஆம்!' என்று சொல்லிவிட்டு, சிரித்தேன்.

'நீ செல்லும் வழி இன்னும் நீளமானது!' என்றார். அதன்பின் அவரை நான் பார்க்கவேயில்லை.

இது எப்படி சாத்தியம்?

நாளைய நற்செய்தியில் இயேசு அடுத்தவரின் மனதில் ஓடும் எண்ணங்களையும் அறியும் சக்தி பெற்றிருந்தார் என வாசிக்கின்றோம். இயேசுவுக்கு சாத்தியமாக இருந்திருக்கலாம். ஆனால் இந்த அருட்சகோதரிக்கு எப்படி?

இந்த இனிய இன்ப அதிர்ச்சியோடு விடிந்தது ஜூலை 1.

1 comment:

  1. ஜூலை1 தந்தைக்குப் புதனை மட்டுமல்ல....பொன்னையும்( பொன்னான வாக்கையும்) வழங்கியுள்ளது.தங்களைப் போன்ற ஜீனியஸ் நூறாண்டு காலம் வாழ்வது இப்பூமிக்கு வரமல்லவா??!! ஆம் தந்தையே... இப்படி போகிற போக்கில் நம்மிடம் வந்து ஆண்டவனின் அருளுரைக்கும் ' அசரீரிகள்' பலரை நானும் கண்டுள்ளேன்.பலரின் வாழ்க்கையில் நம்பிக்கை எனும் திரி அணையும் நேரத்தில் அதனை எரிய வைக்க எண்ணெயாய் அனுப்படும் ஆண்டவரின் தூதுவர்கள் இவர்கள்.இவர்களை இனம் கண்டு கொள்வது நமக்கு பயனளிக்கும்...

    ReplyDelete