Tuesday, July 28, 2015

டாக்டர். கலாம்

இந்தியக் கடைக்கோடியில் பிறந்து

இந்தியாவின் முதற்குடிமகனாக உயர்ந்த

ராக்கெட் மனிதர்

ஏவுகணை விஞ்ஞானி

அகில உலகில் இந்தியாவின் ஞானத்தின், விஞ்ஞானத்தின்

அடையாளமாய் விளங்கிய

டாக்டர். அப்துல் கலாம் அவர்கள் நேற்று மாலை இறைவனடி சேர்ந்தார்கள்.

நேர்மை, எளிமை, கடின உழைப்பு

இந்த மூன்றையும் மட்டுமே தன் வாழ்வின் தாரக மந்திரமாகக் கொண்ட இவர்

இறந்த போதும் கூட இளைஞர்களுக்கு உந்து சக்தியாகவே நின்றிருக்கிறார்.

தன் இறுதி நிமிடம் வரை 'கனவு காணுங்கள்!' என்று சொன்ன இவர்

இன்று நம்மோடு இல்லை.

இனி இந்தியா உங்கள் கைகளில் என்று சொல்லிவிட்டுச்

சென்றுவிட்டார்.

வெறும் அஞ்சலி செலுத்தி இவரை அந்நியப்படுத்திவிடாமல்

இவரைப் போல ஏதாவது ஒன்றில் வாழ்ந்து காட்டலாம் என

என் மனம் துடிக்கிறது!

தாய்மொழிக்கல்வி மட்டுமே பயின்று தாய்நாட்டையே வழிநடத்திய இவர்
ஐரோப்பிய பாராளுமன்றத்திலும் புறநானூறு பேசியவர்

திருக்குறள் நெறியில் தன் வாழ்வை அமைத்துக்கொண்டவர்

தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஒரு நன்மாதிரி!

'ஆண்டவரோடு இணைந்த நிலையில் இறப்போர் பேறுபெற்றோர்!

அவர்கள் தங்கள் உழைப்பிலிருந்து ஓய்வு பெறுவார்கள்.

ஏனெனில் அவர்களின் செயல்கள் அவர்களைப் பின்தொடரும்.'

(திவெ 14:13)

1 comment:

  1. சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்கள் சாதனை மட்டுமல்ல, சரித்திரமும் படைக்கலாம் என்று நிருபித்த மாமனிதர்; விண்ணுக்கும் மண்ணுக்கும் ஏவுகணை மூலம் பாலம் கட்டியவர்; தான் சார்ந்திருந்த ஆசிரியத்தொழிலுக்கு நியாயம் செய்யும் வகையில் இறுதி மூச்சு வரை அந்தப் பணிக்கு அர்த்தம் சேர்த்தவர்; ஒருவருக்கு வாழ்வு எப்படியோ சாவும் அப்படியே என்ற மேலோர் சொல்லை மெய்ப்பித்துக்காட்டியவர்.மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்; தந்தையின் திருவெளிப்பாட்டு வசனங்கள்படி நிச்சயம் அவரின் நற்செயல்கள் அவரைப்பின்பற்றுவது மட்டுமின்றி அவரின் உழைப்பிலிருந்து ஓய்வும் பெறுவார்.அவரின் ஆன்மா ஆண்டவனில் நித்திரை கொள்ளட்டும்!!!

    ReplyDelete