Friday, July 3, 2015

ஒரு விநோதமான ஆசை


இன்று காலையிலிருந்து ஒரு விநோதமான ஆசை.

பிறந்த குழந்தை ஒன்றை மடியில் ஏந்த வேண்டும்! - இதுதான் அந்த ஆசை.

அந்தக் குழந்தையை மடியில் வைத்திருக்க வேண்டும்.

அது தன் குட்டிக்கைகளை மூடிக்கொண்டு மேலும், கீழும் ஆட்டுவதை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.

கண்களை மூடி தூங்கும் அதன் அழகைப் பார்க்க வேண்டும்.

அதன் பிங்க் உதட்டில் என் ஆட்காட்டி விரலையும், பெருவிரலையும் இணைத்துக் பொய்க்கிள்ளு கிள்ள வேண்டும்.

அதன் நெற்றியில் சின்னதாய் வியர்க்கும்போது ஊதி, அந்தக் காற்றில் அதன் சின்ன முடிகள் சிலிர்த்து நிற்பதைக் காண வேண்டும்.

பூமியில் இன்னும் படாத அதன் சின்னப் பாதங்களை முத்தமிட வேண்டும்.

கொஞ்சமாய் மேலே தூக்க, வேகமாய் கீழே சரியும் அதன் தலையை கழுத்தின் பின்புறம் பிடித்து தாங்க வேண்டும்.

அதன் கையில் கட்டிய வசம்பின் மணம் நுகர வேண்டும்.

மெட்ரோ, பஸ் என அதை என் உடலோடு கட்டி சுமந்து செல்ல வேண்டும்.

அந்தக் குழந்தை அழுது கதற, பால்பாட்டிலை அதன் உதடுகளில் புதைத்து அதன் அழுகை போக்க வேண்டும்.

என் முகத்தை கோணலாக்கி அதன் முகத்தில் சிரிப்பு உண்டாக்க வேண்டும்.

என் கைகளுக்குப் பின் என் முகம் மறைத்து, அது என் முகம் தேடுவதை என் விரல்களின் இடுக்கில் நான் காண வேண்டும்.

தம்பி...ஆசையெல்லாம் நல்லாதான் இருக்கு!

போதும்...புத்தகத்தை எடுத்து படிங்க! என்று மைன்ட் வாய்ஸ் சொல்லது.

நாமே குழந்தை ... ... ... நமக்கு ஏன் குழந்தை?



2 comments:

  1. அருவியாக கொட்டும் அழகான வரிகள்! மனத்தின் உணர்வுகளை எந்த சாயப்பூச்சுமின்றி ஒரு தெளிந்த நீரோடையின் இயல்புடன் வார்த்தைகளில் வெளிக்கொணர்வது தந்தையே! இறைவன் தங்களுக்கு அளித்த கொடை.தங்களின் வெளிப்பாடு ஒன்றும் வினோதமானதல்ல." தாய்மை" என்பது ஒரு பெண்ணுக்குள் மட்டுமல்ல ஒவ்வொரு ஆணுக்குள்ளும் கூட ஒளிந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது.இந்தத் தாய்மை உணர்வு தான் எந்த முரடனையும் அன்பிற்கு முன்னால் மண்டியிட வைக்கிறது.தங்களின் ஆசை நிறைவேறுவது அப்படியொன்றும் கடினமான விஷயமில்லை....நாட்டில் 'மழலை இல்லங்களுக்கா பஞ்சம்?!" ஒரு வளர்ந்த குழந்தையின் எண்ண ஓட்டத்தைத் தான் பார்க்க முடிகிறது இவ்வரிகளில்! சூப்பர்!!!

    ReplyDelete
  2. ஆசையெல்லாம் நல்லாதான் இருக்கு . இதை தினமும் பண்ணி நாக்குல நுரை தள்ளிட்டு இருக்கேன்

    ReplyDelete