Thursday, March 27, 2014

முறைமாமனுக்கும் காதலனுக்கும்

ரோமிற்கு ஒபாமா வந்திருப்பதுதான் இன்று பரபரப்பாக இருக்கின்றது.

ரோடெல்லாம் ப்ளாக்.

நாளை மாலை வரை எங்கும் செல்ல முடியாது.

இங்கே மக்கள் மத்தியில் ஏதோ ஒரு மகிழ்ச்சி.

எங்கு பார்த்தாலும் ஒபாமா, ஒபாமா என்ற பேச்சு.

உக்ரைன் போர் நடந்து கொண்டிருக்கும் நேரம் அவர் வந்திருப்பது இன்னும் எதிர்பார்ப்பைத் தருகின்றது.

எங்களுடன் சேர் என்று உக்ரைனை இழுக்கிறது யூரோப்பியன் யூனியன்.

எங்களுடன் இல்லாவிட்டால் உனக்கு சமையல் கேஸ் கிடையாது என மிரட்டுகிறது ரஸ்யா.

பாவம் உக்ரைன்...

முறைமாமனுக்கும் காதலனுக்கும் இடையே சிக்கிய பெண் போல அவஸ்தைப் படுகிறது!

உலகிற்கே கட்டப்பஞ்சாயத்து நடத்தும் அமெரிக்கா வழக்கம்போல

இதிலேயும் தலையிட்டு விட்டது...

நமக்கு நடக்காத வரை நடப்பதெல்லாம் வேடிக்கை தானே!

1 comment:

  1. Anonymous3/27/2014

    சண்டைக்காரனுக்கு அடி ஒருபக்கம் என்றால் கட்டப்பஞ்சாயத்து செய்பவருக்கு அடி இரண்டு பக்கமும்.இதே கட்டப்பஞ்சாயத்து செய்வது அமெரிக்கா என்றால் சொல்லவே வேண்டாம் சிலருக்கு வரும் எரிச்சல் பற்றி.'வாழ்க வளமுடன்'.

    ReplyDelete