Tuesday, March 11, 2014

கடவுளை யாரும் தேடுவதில்லையே ஏன்?

இன்று முதல் எங்கள் பங்கில் பாஸ்கா கால வீடு மந்திரிப்பைத் துவங்கினோம். எனக்காக ஒதுக்கப்பட்ட வீடுகள் 60. கடந்த வருடத்திற்கும் இந்த வருடத்திற்கும் நிறைய வித்தியாசம் இருந்ததை நான் பார்த்தேன். வழக்கமாக அருட்பணியாளர்களை அழைத்துச் செல்லும் தன்னார்வ உள்ளம் கொண்டவர்கள் ஒருவரையும் காணோம். எல்லாரும் தனித்தனியாகச் செல்ல வேண்டும் என முடிவு எடுத்து உடனடியாகப் புறப்பட்டுச் சென்றோம். நான் சென்ற அபார்ட்மண்டில் 60 இல்லங்களில் 13 இல்லங்களில் கதவைத் திறக்கவே இல்லை. 24 வீடுகளில் 'வேண்டாம்' எனச் சொல்லி விட்டார்கள். 2 வீடுகளில் அடையாள அட்டை காட்டச் சொன்னார்கள். 21 வீடுகளில் மட்டும் செபம் செய்து விட்டு வந்தேன்.

'கடவுள் வேண்டாப் பொருள் ஆகிவிட்டாரா?'

'கடவுளை யாரும் தேடுவதில்லையே ஏன்?'

'ஏன் இந்த மாற்றம்?'

பயணம் திரைப்படத்தில் ஒரு கட்டத்தில் ஒருவர் மற்றவரைப் பார்த்துக் கேட்பார்:

'கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் மக்கள் எப்படி இருப்பார்கள்?'

மற்றவர் சொல்லுவார்:

'ஒவ்வொருவரும் அவரது சொந்தக் காலில் நிற்கத் தொடங்கியிருப்பர்!'

கடவுள் நம் வளர்ச்சிக்குத் தடையா? வளர்ந்து விட்டதால் கடவுள் தேவை இல்லையா?

செக்யுலர் (secular) ஆகிவிட்டோம் என்று சொல்வது கடவுளை ஒரேயடியாக வெளியேற்றுவது என்று அர்த்தமா?

இவ்வளவு கேள்விகள் என் உள்ளத்தில் இருந்தாலும் என் அறைக்குள் நுழைந்தவுடன் என் டேபிளில் இருந்த குழந்தை இயேசுவின் சுரூபம் முன் முழந்தாளிட வேண்டும் எனத் தோன்றியது.

2 comments:

  1. Anonymous3/11/2014

    எத்துணை 'Humiliation' இந்த அருட்பணியாளர்களுக்கு.இவர்களைத் தேடாதவர்களைத் தேடி இவர்கள் செல்கிறார்கள்." அவர்கள் உங்களையல்ல,உங்களை அனுப்பியவரையே ஏற்க மறுக்கிறார்கள்.பெருமை கொள்ளுங்கள்.ஏனெனில் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

    ReplyDelete
  2. Anonymous3/11/2014

    "இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் அதைப் பார்த்து அழுதார். இந்த நாளிலாவது அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக்கூடாதா? ஆனால் இப்போது அது உன் கண்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது." அன்று இயேசுவிக்கு இருந்த அதே மனநிலையே உங்களுக்கும். கவலை வேண்டாம் தந்தையே.
    நாம் கடவுளை அறிந்துகொள்ள முயற்சி செய்யவில்லை என்றால், ஒருபோதும் நம்மைப் பற்றி அறிய கற்றுக்கொள்ள முடியாது. அவரது மேன்மையைப் பார்க்கும்போதுதான், நமது சிறுமையை நாம் உணர்கிறோம். அவரது தூய்மை நமது தூய்மையின்மையை நமக்கு காட்டுகிறது. மேலும் அவரது தாழ்ச்சியை தியானிக்கும்போது, நாம் தாழ்ச்சியில் இருந்து எவ்வளவு வெகு தொலைவில் இருக்கிறோம் என்பதை நம்மால் கண்டுகொள்ள முடியும்.

    ReplyDelete