Monday, December 7, 2015

யூபிலி ஆண்டு

நாளை இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டை தொடங்குகிறோம்.

நாளை தொடங்கும் இந்த யூபிலி ஆண்டு 20 nov, 2016ல் நிறைவு பெறும்.

இது இறைஇரக்கத்தின் ஆண்டு அல்ல. அதாவது, மதியம் 3 மணிக்கு நாம் சொல்லும் இறை இரக்கத்தின் செபமாலை அல்லது வழிபாட்டை ஊக்குவிப்பதற்கான ஆண்டு அல்ல.

'தந்தையைப் போல இரக்கமுள்ளவர்களாய்' என்ற கருத்தை மையமாக வைத்துக் கொண்டாடப்படும் இந்த ஆண்டில், நாம் இறைவனின் இரக்கத்தைப் பெறவும், அதை மற்றவர்களுக்கு வழங்கவும் அழைப்பு பெறுகிறோம்.

உரோம் நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. சாலைகள் எல்லாம் தண்ணீர் ஊற்றிக் கழுவப்படுகின்றன.

டிவி, பத்திரிக்கை எல்லாவற்றிலும் யூபிலி பற்றிய செய்திகள்தாம் இருக்கின்றன.

இதற்கு முந்தைய யூபிலி ஆண்டு 2000ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

காணமுடியாத இறைவனின் காணக்கூடிய முகமாக வந்த இயேசுவை, அமல உற்பவி மரியாள் பெற்றெடுத்தார்.

தொடக்கப் பாவத்திற்கு எதிர்வினையாக கடவுள் தண்டனைக்குப் பதிலாக, தன் இரக்கத்தால் பதில் தந்தார்.

இறைவன் தரும் இரக்கம் நம் இதயங்களில் கனி தருவதாக!

இந்த ஆண்டு இனிய ஆண்டாக அமைவதாக!


2 comments:

  1. தந்தைக்கு வணக்கம். இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டிற்கான வாழ்த்துக்கள். இறைவன் தரும் இரக்கம் நம் இதயங்களில் கனி தருவதாக.இந்த வார்த்தைக்கு ஏற்றவாறு என் தமிழ் மக்களின் மீது இறைவனின் இரக்கம் அதிகமாய் இருக்கட்டும்.நம்பிக்கை கூடட்டும்.

    இரக்கத்தின் ஆண்டவர் என் மக்களின் மேல் கருணை காட்டி இந்த ஆண்டை சந்தோசமாக தொடங்க கடவுளின் அருள் எல்லோர் மேலும் பொழிய படட்டும்.தந்தைக்கு அமல அன்னையின் பெருவிழா வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.

    ReplyDelete
  2. " இறை இரக்க பக்தி" எங்கள் குடும்பங்களில் சிறிது காலமாகவே இருந்து வந்திடினும் இந்த ஞாயிறு திருப்பலி நிறைவேற்றிய தந்தை இந்த 'யூபிலி' ஆண்டு பற்றியும்,அதற்கான செய்முறைகள் பற்றியும் எடுத்துக் கூறிய விதம் என்னுள் புது இரத்தம் பாய்ச்சியது போல் இருந்தது. இப்போது தந்தையின் வரிகள் அதை இன்னும் மெருகேற்றுவதாய் உள்ளன."தந்தையின் இரக்கத்தைப் பெறவும்,அதை மற்றவர்களுக்குத் தரவும் அழைக்கப்படுகிறோம்" எனும் வரியானது நாம் " தெரிந்து கொள்ளப்பட்ட இனம்" என்பதை நமக்கு ஞாபகப்படுத்துகிறது." காண முடியாத இறைவனின் காணக்கூடிய முகமாக வந்த இயேசுவை,அமல உற்பவி மரியாள் பெற்றெடுத்தார்"... இன்றையப் பதிவிற்கு மகுடம் சூட்டும் வரிகள்.தந்தையைப் போல விழாக்கோலம் பூண்டுள்ள உரோம் நகரைப் பார்க்க நமக்கு கொடுத்து வைக்கவில்லை எனினும் இந்த நாட்களில் நாமும் ' இறை இரக்கத்தின் சாட்சிகளாய்,தூதுவர்களாய்' இருக்க அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பது நம் இதய ங்களைக் குளிர்விக்கிறது." இறைவனின் இரக்கம் நம் இல்லங்களையும்,உள்ளங்களையும் நிரப்புவதாக!". தந்தைக்கு யூபிலி ஆண்டின் வாழ்த்துக்களும்,செபங்களும்!!!

    ReplyDelete