நீங்கள் வலப்புறமோ, இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும், 'இதுதான் வழி, இதில் நடந்து செல்லுங்கள்' என்னும் வார்த்தை பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும்.
(காண். எசாயா 20:19-21, 23-26)
எப்பவெல்லாம் நம்ம பேட்டரி ட்ரையா இருக்கோ, அப்போதெல்லாம் திருவருகைக்கால வாசகங்களை எடுத்து வாசிக்கலாம்.
வீட்டுல ஒன்னுமே இல்லை. யாரும் கண்டுக்கவே மாட்றாங்க. நல்ல வேலை இல்லை. படிப்பு இல்லை. இன்னும் திருமணம் ஆகல. இருந்தா என்ன இறந்த என்ன. இப்படி புலம்பிக் கொண்டு கையில் கிடைத்த மஞ்சள்பையில் ஒரு சட்டையும், பேண்டும் எடுத்து வைச்சிகிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றி வரும் இளைஞன், அங்கிருக்கும் கிளி ஜோசியக்காரனின் கிளி மேல் இரக்கப்பட்டு, அவன் முன் அமர, அந்த கிளி எடுத்து தந்த சீட்டை வைத்து, 'நீ அப்படி இருப்ப, இப்படி இருப்ப!' என்று பக்கம் பக்கமாக சொல்லுவானே அந்த பாசக்கார பயபுள்ள, அப்படி ஒரு புத்துணர்ச்சியைத் தருகின்றன இன்றைய நாட்களில் நாம் வாசிக்கும் வாசகங்கள்.
'வழி'
இதைக் கண்டுபிடிக்க முடியாமல் சில நேரங்களில் நம் வாழ்வே முடிந்துவிடுகிறது.
நாம் வந்த வழி சரிதானா, போகும் வழி சரிதானா, வழியில் நாம் சந்திப்பவர்கள் சரிதானா என்று நாம் வழியைப் பற்றியே கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
அவனை மாதிரி நாம அந்த வழியில போயிருக்கலாமே என்றும், ஐயோ இந்த வழியில வந்துட்டோமே என்றும் கூட புலம்புகிறோம்.
நேர்வழி. குறுக்கு வழி. தனி வழி. பொது வழி. மாற்று வழி. சுற்று வழி.
என வழிகள் ஏராளம்.
எந்த வழி செல்ல? என்ற குழப்பத்தில் இருப்பவர்களுக்கு, எல்லா வழியும் அறிந்த இறைவன்தாமே வழிகாட்டுவார் என்கிறது நாளைய முதல் வாசகம்.
இன்று கூகுள் மேப்ஸ், நோக்கியா மேப்ஸ் என கையடக்கக் கருவிகள் நமக்கு வழி காட்டக் காத்திருக்கின்றன. இவை நம் வெளிப்பயணத்திற்கு வழி காட்டுகின்றன.
ஆனால், மனிதன் தன் வாழ்வில் செல்லும் மிக நீண்ட வழியான உள்பயணத்திற்கு யார் வழிகாட்டுவார்?
'நானே!' என்கிறார் இறைவன்.

' மேஸ்' ( maze) என்று ஒரு விளையாட்டு உண்டு.ஒரு அட்டையில் ஒரு இடத்தில் ஒரு புதையல் ஒளித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அதை நாம் கண்டுபிடிக்க அதில் கொடுக்கப்பட்ட எந்த வழியையும் பின்பற்றலாம் என்றும் வாசகம் இருக்கும்.கண்களையும்,மூளையையும் எத்தனை கூர்மையாக வைத்து விளையாடினும் நாம் குழம்பித்தான் போவோம்.அதே மாதிரிதான் வாழ்க்கை எனும் விளையாட்டிலும் பல நேரங்களில் எப்பக்கம் திரும்பினால் நமக்கு விமோச்சனம் என்று தெரிவதில்லை. ஒருவேளை விவிலியத்தின் வழியாக இறைவன் நம்மிடம் ஏதேனும் பேசுவாரா என நினைத்து அதைத் திறந்தால் அதில் வரும் வசனங்கள் ' ஏண்டா இதைத் திறந்தோம்' என ஆதங்கப்பட வைக்கின்றன.ஒரு வேளை அதையே இன்னும் கொஞ்சம் பொறுமையோடு யோசித்திருந்தால் நமக்கு ஒரு தெளிவு கிடைத்திருக்கலாம்.ஆனால் நமக்கெங்கே அவ்வளவு பொறுமை? எல்லாமே 'இன்ஸ்டன்டா' வாங்கிப்பழக்கப்பட்ட நமக்கு அறிவுரை கூட அப்படியே தேவைப்படுகிறது. இன்று இறைவன் நமக்குப் பலவிதமான வாக்குறுதிகளை நம் முன்னே வைக்கிறார்.அதில் ஒன்றுதான் " நீங்கள் வலப்புறமோ,,இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும் 'இதுதான் வழி; இப்பக்கம் செல்லுங்கள்' எனும் வார்த்தை பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும்" என்பது. உண்மைதான்.நமக்குப் புறவழிகாட்ட மனிதன் கண்டுபிடித்த கருவிகள் எத்தனையோ இருப்பினும் நீண்ட வழியான 'உள் பயணத்திற்கு' " இறைவன்" மட்டுமே வழிகாட்ட இயலும் எனும் தந்தையின் வார்த்தைகள் பாலைவனத்தின் சோலையாக நம் செவிகளில் வந்து விழுகின்றன..தந்தைக்கு நன்றிகள்!!!
ReplyDeleteDear Father,I really appreciate your efforts today.Because you seem to be kolambus today.Making lot of rout maps.
ReplyDeletewhatever may be let us understand God's way and listen God's voice in our life.
whether I may be in kongu naadu or You may be in Rome let us know the God's way in our life.And let us walk in that way only by following his commandments.
Thanks and Congrats for your wonderful and beautiful writings of today.
நத்தம்பட்டி கொலம்பஸ் தலைமுறை வாழ்த்தும்படி வாழ்க பல்லாண்டு!!!