Wednesday, December 30, 2015

புத்தாண்டு ஆசி செபம்


உன் திருமுன் நான் சிரம் தாழ்ந்து நிற்கிறேன்
உன் காலடியில் என் கண்களைப் பணிக்கிறேன்
இந்தப் பணிவில்
உன் காலடிகளில் நான் என்னையே அர்ப்பணிக்கிறேன்...

இந்த ஆண்டு நான் கண்ட முகங்கள்
நான் கேட்ட குரல்கள்
நான் பேசிய வார்த்தைகள்
நான் குலுக்கிய கரங்கள்
நான் நடந்த பயணங்கள்
நான் செய்த சேவைகள்
நான் பகிர்ந்த மகிழ்ச்சிகள்
நான் அதிர்ந்த துன்பங்கள்

அனைத்தையும் உன் காலடிகளில் படைக்கிறேன்
என் தலையை உன் திருமுன் பணிகிறேன்
என் தலையை நீயே தாங்குவாய்...

இருள்சூழ்ந்த இந்த இரவின் நீண்ட பொழுதில்
எங்களைக் காப்பாற்றும்
எங்களை சூழ்ந்து கொள்ளும்
தந்தை, மகன், தூய ஆவி
மூன்றாகி ஒன்றானவா

நாங்கள் செய்த தவறுகளை மன்னியும்
நாங்கள் காட்டிய ஆணவத்தை மன்னியும்
பிறரைக் காயப்படுத்திய எம் வார்த்தைகளை மன்னியும்
இந்த இரவில் நாங்கள் உள்ளம்நிறை அமைதியுடன் உறங்கி,
உம் திருவுளம் நிறைவேற்ற புதிய நாளில் புதிய ஆண்டில் 
புத்துணர்ச்சியுடன் எழுவோமாக...

இருள்சூழ்ந்த இந்த இரவின் நீண்ட பொழுதில்
எங்களைக் காப்பாற்றும்
எங்களை சூழ்ந்து கொள்ளும்
தந்தை, மகன், தூய ஆவி
மூன்றாகி ஒன்றானவா

அமைதியின் இறைவன் இந்த இல்லத்திற்கு அமைதி அருள்வாராக!
அமைதியின் மகன் இந்த இல்லத்திற்கு அமைதி அருள்வாராக!
அமைதியின் ஆவி இந்த இல்லத்திற்கு அமைதி அருள்வாராக!
இந்த இரவும்...
எல்லா இரவுகளும்...

(அயர்லாந்து நாட்டு புத்தாண்டு ஆசி செபம்)

ஆங்கிலத்தில்: பவுலோ கோயலோ


4 comments:

  1. உள்ளத்தை சில்லிட வைக்கும் வார்த்தைகள். உணர்ச்சிகளை உறைய வைக்கும், மனத்தின் ஓரத்தில் எழும்பும் உண்மைகளை வெளியே கொணரும், மனசாட்சி அடிக்கும் மணிக்குப் பதில் சொல்லும் மனத்தின் ஓலம்.போன வருடம் இதே நாளில் எத்தனையோ கனவுகளோடு வலம் வந்தவர்கள் இன்று காணாமல் போய்விட்டனர்.இரக்கத்தின் இறைவன் உங்களையும்,என்னையும் இன்னும் தன் நேரடிப்பார்வையில் வைத்துள்ளார்.தந்தையுடன் சேர்ந்து கடந்து வந்த பாதைக்கு நன்றி சொல்லி,கடக்க இருக்கும் காலங்களுக்கு ஆசீர் கேட்டு, தெரிந்தோ,தெரியாமலோ செய்த தவறுகளுக்கு மனம் வருந்தி மன்னிப்புக் கேட்போமாக! இன்றைய பதிவின் அத்தனைவரிகளும் முத்தாக ஜொலிக்கின்றன எனினும் அந்த இரு வரிகள்..." அனைத்தையும் உன் காலடியில் படைக்கின்றேன்; என் தலையை உன் திருமுன் பணிகிறேன்; என் தலையை நீயே தாங்குவாய்" ...என் கண்களைப் பனிக்கச் செய்த வார்த்தைகள்.வருடத்தின் இறுதி வேளை இறைவனைப் பார்த்துக் கதற வேறென்ன வேண்டும்? தந்தைக்கு என் மனம் கசிந்த நன்றிகள்!!!

    ReplyDelete
  2. Dear Father,Thanks and Congrats for the wonderful prayer also for your blessings. Happy New Year!!!May God Bless all of us.

    ReplyDelete
  3. Anonymous12/31/2015

    Hi Dear Yesu Greetings of Joy. May God bless all of us and take care of us under his protecting wings of love and forgiveness.
    Happy New Year and Prosperous 2016.
    With Love Arputham

    ReplyDelete