Friday, December 11, 2015

எலியா

'எலியாதான் முதலில் வர வேண்டும்!'

நாளைய முதல் மற்றும் நற்செய்தி வாசகத்தின் மையமாக இருப்பவர் எலியா.

எலியா என்றவுடன் எனக்கு நினைவிற்கு வருவது இரண்டு:

ஒன்று, பவுலோ கோயலோ அவர்கள் எழுதிய 'ஐந்தாம் மலை' என்ற நாவல்.

இரண்டு, புனித நாடுகளுக்குச் சென்றபோது நான் பார்த்த கார்மேல் மலை.

கார்மேல் மலையில் இன்றும் எலியா கோபத்தோடு நிற்கின்றார்.

எலியாவிடம் நான் கற்றுக்கொள்ளும் பண்பு ஒன்று. அது என்ன?

தன் பணியில் நிறைவு காணாமல் அல்லது காண முடியாமல், தன் எதிரிகளின் அச்சுறுத்தலுக்குப் பயந்து ஓடும் எலியா, ஒரு கட்டத்தில் இறைவனிடம் தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக முறையிடுவார்.

இவர் ஒரு பெரிய இறைவாக்கினர்.

இவர் பெய் என்றால் மழை பெய்யும்.

வேண்டாம் என்றால் வானம் அடைத்துக் கொள்ளும்.

பாகாலுக்கு பலி செலுத்திய இறைவாக்கினர்களையும் கொன்றழித்துவிட்டார்.

தான் செல்லும் இடத்தில் எல்லாம் நன்மை செய்தார்.

இப்படி இருந்த ஒருவருக்கு ஏன் தற்கொலை எண்ணம் வர வேண்டும்?

இறைவன் ரொம்ப கூலாக ஒரு பதில் சொல்வார்.

'எல்லாவற்றையும் நீ செய்தாய்...நீ செய்தாய்... என சொல்லுகிறாயே...நீயா இவற்றையெல்லாம் செய்தாய்...உன்னிலிருந்து செய்தது நானல்லவா?'

இந்த வரிகளைப் போலவே மகாபாரதத்தில் கண்ணனின் சொற்களும் இருக்கும். கண்ணன் அர்ச்சுனனைப் பார்த்துச் சொல்வார்:

'நான் கொல்கிறேன்...நான் கொல்கிறேன்' எனச் சொல்கிறாயே? உண்மையில் நீயா கொல்கிறாய்? உன்னிலிருந்து கொல்வது நானல்லவா...

'புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால் அந்த புண்ணியம் கண்ணனுக்கே
போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே
கண்ணனே சாட்டினான், கண்ணனே காட்டினான்
கண்ணனே கொலை செய்கின்றான்...காண்டீபம் எழுக...உன் கைவன்மை எழுக'

எலியாவை நினைக்கும்போதெல்லாம் இதை நினைவில் கொள்வோம்: நம் செயல்களில் நாம் முதன்மையாக நின்றால் நமக்கு விரக்தி வந்துவிடலாம். இறைவனை நிற்க வைத்துவிடுவோம்...

4 comments:

  1. தந்தைக்கு வணக்கம்."எலியா" எளிமையானதொரு பதிவு.நம் செயல்களில் நாம் முதன்மையாக நின்றால் நமக்கு விரக்தி வந்துவிடலாம். இறைவனை நிற்க வைத்துவிடுவோம் மிகவும் அழகானதொரு வரிகள்.நிறைய நேரங்களில் நாம் தினமும் அமர்வதும்,எழும்புவதும், பேசுவதும் இப்படி எல்லா செயல்களுமே இறைவனால் தான் நடக்கிறது என்பதை உணர்ந்தாலே போதும்.நாம் பெரிய செயல்கள் செய்து வெற்றி அடையும் போது தானாகவே நாம் புரிந்து கொள்ளும் தன்மை வேண்டும் அதாவது இதை நான் செய்யவில்லை என்னில் இருக்கும் கடவுளே இதை செய்தார் என்று.தமிழில் "திருவிளையாடல்" என்ற திரைப்படம் ஒன்று உண்டு.அருமையான கருத்தை காணலாம் அந்த படத்தில் பாணபத்திரர் என்ற புலவர் ஒருவரை அரசர் ஹேமனாதர் என்ற பெரிய புலவருக்கு எதிராக பாடவும் நம் நாட்டின் மானத்தை காக்கவும் கூறியிருப்பார்.ஆனால் அந்த பாணபத்திரர் கடவுள் முன் சென்று இது என்னால் முடியாது என்று முறையிடுவார் .அந்த நல்ல மனிதனுக்கு கடவுள் மனம் இரங்கி புலவர் வேடம் பூண்டு பாடி தம் நாட்டை காப்பாற்றுவார்.ஆக,கடவுள் முன் நம்மை எவ்வளவு தாழ்த்துகிறோமோ அவ்வளவு கடவுள் நம்மை உயர்த்துவார்.தந்தையின் இந்த பதிவின் மூலம் தான் என்ற அகந்தையை விட்டொழிப்போம்.எல்லாம் அவன் செயல் என்ற முடிவுக்கு வருவோம்.இதை உணர வைத்த தந்தைக்கு நன்றியும் பாராட்டுக்களும்!!!

    ReplyDelete
  2. ' எலியா'.......விசுவாசத்தை வெளிப்படுத்தும் ஒரு பாடலில் " அன்று எலியா'வைப் போஷித்தவர் இன்று உன் பசி ஆற்றிடாரோ" என்ற வரிகள் வரும்.பிறகு தான் தெரிந்து கொண்டேன் இறைவன் எலியாவுக்கு ஒரு காகத்தின் மூலம் உணவளித்தார் என்று. இன்று தந்தையின் வரிகளும் அவரின் விசுவாசத்தை மெய்ப்பிக்கின்றன.இப்பேற்பட்டதொரு இறைவாக்கினர் தற்கொலைக்கு உந்தப்பட்டார் என்றால் நம்ப முடியவில்லை தான்.ஏன், எதற்காக இப்படி ஒரு எண்ணம்??!... இதற்கும் இன்றையப் பதிவே பதில் சொல்கிறது...இறைவன் எலியாவைப் பார்த்தும்,கண்ணன் அர்ச்சுன்னைப் பார்த்தும் சொல்வதாக! போதையில் எல்லாம் மோசமான போதை ' புகழினால்' வருவது என்று சொல்வார்கள்.இப்பேர்ப்பட்டவர்கள் திருப்தி என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்பவர்கள்.தங்களை மட்டுமே ஆராதிப்பவர்கள்.தன்னைப் படைத்தவரை விட்டுத் தங்கள் படைப்பையே முன்னிறுத்துபவர்கள்.இறுதியில் தன் மண்டையின் மேல் ஏற்றப்பட்ட கனத்தினால் தீக்கிரையாகும் ' தீக்குச்சி' யாக மடிந்தொழிவார்கள். ஆகவே போற்றுவார் போற்றிடினும்,தூற்றுவார் தூற்றிடினும் இறைவன் ஒருவரையே முன்னிறுத்துவோம்; நம்மையும் போஷிக்க ஒரு காகமென்ன...ஓராயிரம் காகங்களை அனுப்புவார் நம்மிறைவன்.நல்லதொரு பதிவுக்குத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  3. For the greater glory of God...
    all that i do ... for His glory....
    God's reply to Elizah is pretty cool indeed....

    ReplyDelete
  4. For the greater glory of God...
    all that i do ... for His glory....
    God's reply to Elizah is pretty cool indeed....

    ReplyDelete