Tuesday, December 15, 2015

நீர்தாமா

'வரவிருப்பவர் நீர்தாமா?
அல்லது
வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?'
(காண்க. லூக்கா 7:19-23)

இயேசு தன்னை மெசியா என்று நேரிடையாகச் சொல்லாமல், மேற்காணும் கேள்விகளுக்குச் சுற்றி வளைத்து பதில் தருவது போல இருக்கிறது:

'பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்.
கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்.
தொழுநோயாளர் நலமடைகின்றனர்.
இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுகின்றனர்.'

அதாவது, பழையவை மறைந்து எங்கே புதியவை தோன்றுகின்றனவோ,
அல்லது குறையானதொன்று நிறைவாக மாறுகிறதோ,
அங்கே இறைவன் இருக்கின்றார்.

அல்லது

இறைவன் இருக்கும் இடத்தில்
பழையவை மறைந்து புதியவை தோன்றும்,
குறையானது மறைந்து நிறைவானதாக மாறும்.



2 comments:

  1. பழையவை மறைந்து புதியவை தோன்றுவதும், குறையானதொன்று நிறைவாக மாறுவதும் காலத்தின் கட்டாயம்.இலையெனில் வளர்ச்சி.சுழற்சி இவை எவற்றுக்குமே இடமின்றி,அர்த்தமின்றிப் போய்விடும். இந்தப் பழையவை மறைந்து புதியவையாவதும்,குறையானது மறைந்து நிறைவானவையாவதும் ' மனித நேயத்தையும்' இறைவனின் பிரசன்னத்தையும் கட்டியம் கூறும் விஷயங்கள் என மெய்ப்பிக்கிறது இன்றையப் பதிவு.இறைவன் பிறப்பிற்காக்க் காத்திருக்கும் இந்நாட்களில் அவரின் பிரசன்னத்தை நம்மிலும்,நம்மைச் சுற்றி இருப்போரிடத்திலும் காண முயற்சிப்போம். பார்க்குமிடமெல்லாம் ஓலமும்,ஒப்பாரியும் ஒலிக்கும் இந்நாட்களில் ' இறைவனின் பிரசன்னத்தை'உணர்த்திய தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. தந்தைக்கு வணக்கம்."நீர்தாமா" என்ற பதிவில் இறையனுபவத்தை பற்றி தெள்ளத்தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா? என்னும் யோவானின் சீடர்களின் கேள்விக்கு இயேசு அளிக்கும் மறுமொழி பளிச் என்று ஒளிர்கிறது. நீங்கள் கண்டவற்றையும், கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள் என்று சொல்லும் இயேசு தனது இறையாட்சிப் பணிகளை பட்டியல் இடுகிறார். அதில் நோயாளர் நலம் பெறுவதும் நற்செய்தி அறிவிக்கப்படுவதும் சேர்கின்றன. இயேசு வாய்ச்சொல் வீரர் அல்லர். செயல்வீரர். தம் செயல்களாலே நற்செய்தி அறிவித்தவர். அவருடைய செயல்கள் மெசியாவின் காலம் வந்துவிட்டது என்பதைப் பறைசாற்றின.ஆக, தந்தையும் நல்ல ஒரு வித்தியாசமான கருத்தை மிக அழகாகவும் ஆழமாகவும் நம்மில் பதிய வைக்க இறைவன் இருக்கும் இடத்தில் அதாவது இறைவனை அனுபவிப்பவர்கள் வாழ்வில் தீயவை (பழையவை) மறைந்து நல்லவை ( புதியவை) தோன்றும் என்றும் மேலும் பள்ளங்கள் (குறையானது) மறைந்து மேடு ( நிறைவானதாக) மாறும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.தந்தைக்கு நன்றியும் பாராட்டுக்களும்!!!

    ReplyDelete