Friday, December 25, 2015

கடவுள்-நம்மோடு

'அவர் தமக்குரியவர்களிடம் வந்தார்.
அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால்...
அவரை ஏற்றுக்கொண்ட அனைவருக்கும்
அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் வல்லமையை அளித்தார்...'
(யோவான் 1:11-12)

கிறிஸ்து பிறப்பின் நோக்கம் யோவானின் இந்த இறுதி வரைதான்...

'நான் கடவுளின் பிள்ளை' என்ற அடையாளத்தை நமக்கு தந்தது இயேசுவின் பிறப்பு...

இந்த அடையாளத்தை நம் அன்றாட வாழ்வாக்கினால்...

இந்த ஒரு கிறிஸ்து பிறப்பே போதும்...

அவர் நம் உதடுகளில் சிரித்தார்...
அவர் நம் கண்களில் அழுதார்...
அவர்தான் கடவுள்-நம்மோடு...இம்மானுவேல்

கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்கள்!

3 comments:

  1. " நான் கடவுளின் பிள்ளை"..... நினைப்பே நெஞ்சை இனிக்கச்செய்கிறதே....நாம் இந்த வார்த்தையை வாழ்வாக்கினால்தான் என்ன? ஆம்...அப்பொழுதுதான் நாமும் உதடுகளால் சிரிக்கவும்,கண்களால் அழவும் முடியும்.இந்த இறைவனை,இந்த இம்மானுவேலை நமதாக்குவோம்.வாழ்வடைவோம்.
    தன் வளமான வார்த்தைகளால் எம்மை நாளும் இறைவனை நோக்கி வழிநடத்தும் தந்தைக்கும், மற்றும் இந்தப் பதிவுகளின் மூலம் தங்கள் வாழ்வை அர்த்தமுள்ளதாய் மாற்ற முயன்றுகொண்டிருக்கும் அனைவருக்கும் " இனிய கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்களை" உரித்தாக்குகிறேன்.அண்மையில் சென்னை மக்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கிய இடர்பாடுகளால் நாம் இந்த இறைபிறப்பின் மகிழ்ச்சியைக் கொஞ்சம் அடக்கி வாசிக்க முயன்றுகொண்டிருப்பினும் நம் நெஞ்சத்தில் இறைப் பிரசன்னத்தை முழுமையாக உணரவும்,அதை நம் சகோதர,சகோதரிகளோடு மனித நேயமாக பகிர்ந்து கொள்ளவும் எந்த அளவுகோலும் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.பிறரை வாழ வைப்போம்; நாமும் வாழ்வோம். அன்று பெத்லே கேமில் பிறந்த இறைவன் இன்று நம் இல்லங்களிலும்,உள்ளங்களிலும் கூடப் பிறக்கட்டும்!!! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. தந்தைக்கு வணக்கம்.அவர் நம் உதடுகளில் சிரித்தார்...
    அவர் நம் கண்களில் அழுதார்...
    அவர்தான் கடவுள்-நம்மோடு...இம்மானுவேல் இந்த வார்த்தைகளுக்கு தந்தைக்கு நன்றி மற்றும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!!!

    A very Happy Feast to you Dear Father.

    ReplyDelete
  3. Wish you a very happy Emmanuel Christmas Father..

    ReplyDelete