யோசேப்பு புல்வெளியில் வழி தவறி அலைவதை ஒரு மனிதன் கண்டு,
'என்ன தேடுகிறாய்?' என்று அவரைக் கேட்டான்.
யோசேப்பு, 'என் சகோதரர்களைத் தேடுகிறேன்.
அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள் என்று தெரியுமா? சொல்லும்' என்றார்.
அதற்கு அம்மனிதன், 'அவர்கள் இவ்விடத்தை விட்டுக் கிளம்பி விட்டார்கள்.
தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்லிக்கொண்டதை நான் கேட்டேன்'
என்று பதிலளித்தான்.
(தொநூ 37:15-17)
ஹெரால்ட் குஷ்னர் அவர்கள் எழுதிய, 'Living a Life that Matters' என்ற புத்தகத்தை கடந்த வாரம் வாசித்தேன்.
முதல் ஏற்பாட்டு யாக்கோபின் வாழ்வை மிக அழகாக எடுத்துச்சொல்கின்றார்.
மேற்காணும் நிகழ்வை நீங்கள் வாசித்திருப்பீர்கள்.
தன் சகோதரர்களைத் தேடி அலையும் யோசேப்பு வழிதவறி அலைவதைக் கண்டு ஒரு மனிதன் விசாரிக்கிறான்.
விவிலியம் வார்த்தைகளை வீணாக்குவதில்லை.
இந்த மனிதனைப் பற்றி எதற்காக ஆசிரியர் பதிவு செய்ய வேண்டும்.
இந்த மனிதன் யார்?
இந்த மனிதன் ஒரு வானதூதர் என்கின்றனர் யூத ரபிக்கள்.
இந்த மனிதன் மட்டும் யோசேப்பைப் பார்க்காவிட்டால் என்ன நடந்திருக்கும்?
'யோசேப்பு தன் சகோதரர்களைச் சந்தித்திருக்க மாட்டார்.
அவர்கள் அவரை மிதியானியர்களிடம் விற்றிருக்க மாட்டார்கள்.
அவர் எகிப்துக்கு சென்றிருக்க மாட்டார்.
பாரவோனின் அரண்மனையில் ஆளுநராக இருந்திருக்க மாட்டார்.
பெரிய பஞ்சத்தில் எகிப்து அழிந்திருக்கும்.
இஸ்ரயேலர்கள் யாரும் எகிப்தைத் தேடிப் போயிருக்க மாட்டார்கள்.
பாரவோன் அவர்களை அடிமைப் படுத்தியிருக்க முடியாது.
கடவுள் இறங்கி வந்து அவர்களைக் காப்பாற்றியிருக்க முடியாது.
மோசே, யோசுவா, தாவீது, சாலமோன்
என யாரும் வந்திருக்க மாட்டார்கள்.
நாம் கையில் வைத்திருக்கும் விவிலியமும் இருந்திருக்காது!'
நான் ஒற்றை மனிதனால் வாழ்வில் என்ன செய்ய முடியும்?
என் வாழ்வால் யாருக்கு என்ன பலன்?
இந்தக் கேள்விகள் எழும்போதெல்லாம்
இந்தப் பெயரற்ற மனிதனை எண்ணிக்கொள்ளலாமே.
நாம் சின்னவராக இருந்தாலும், கொஞ்ச வார்த்தைகள் பேசினாலும், அது வரலாற்றின் போக்கையே மாற்றிவிடும் வாய்ப்பு இருக்கிறது.

கண்களில் ஒற்றிக்கொள்ளக் கூடியதொரு பதிவு.முதல் ஏற்பாட்டில் வரும் 'யோசேப்பு'வைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அவரைப் பற்றி நினைத்தாலோ அல்லது வாசித்தாலோ நம் வீட்டுச் செல்லப்பிள்ளை எனும் உணர்வு வரும்.தன் சகோதர்ர்களைத் தேடி அலையும் யோசேப்புவை ஒரு மனிதன் விசாரிப்பதிலிருந்து நாம் கையில் வைத்திருக்கும் விவிலியத்தின் மூலம் வரை ஒவ்வொரு நிகழ்வும் மற்றொன்றைத் தழுவி வருவதை அழகாகப் பதிவு செய்துள்ளார் தந்தை. கண்டிப்பாக விவிலியம் வார்த்தைகளை வீணாக்குவதில்லை.மீட்பின் சரித்திரத்தில் வரும் ஒவ்வொரு நிகழ்வும்,ஒவ்வொரு வார்த்தையும் ஏதோ ஒரு கருத்தை நமக்கு எடுத்தியம்பிக் கொண்டுதான் உள்ளது.அது என்னவென்று புரிந்துகொள்ள நாம் தான் நம் ஐம்புலன்களையும் தீட்ட வேண்டும்.நாமும் கூட வழிதவறும் சமயங்களில்,வாழ்க்கைத் தடம் புரளும் நேரங்களில் நமக்கும் ஒற்றை மனிதர்கள் வருவார்கள்.அவர்கள் உருவத்தில் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போகட்டும்.நமக்கு என்ன சொல்ல வருகிறார்கள்? அதுதான் முக்கியம்.தோபியாஸை வழிநடத்த வந்த 'இரஃபேல்' ஆக கூட இருக்கலாம்.யார்கண்டது?நம்புவோம்....நம் வாழ்விலும் ஒற்றை மனிதர்கள் வருவார்கள் என்று.அழகு பதிவைத் தந்த தந்தைக்குப் பாராட்டுக்கள்!!!
ReplyDeleteதந்தைக்கு வணக்கம்."பெயரற்ற மனிதன்" மிகவும் அழகானதொரு பதிவு.
ReplyDeleteநாம் சின்னவராக இருந்தாலும், கொஞ்ச வார்த்தைகள் பேசினாலும், அது வரலாற்றின் போக்கையே மாற்றிவிடும் வாய்ப்பு இருக்கிறது.ஆக, நாம் யாரையுமே லேசாக எண்ணக்கூடாது மற்றும் ஒவ்வொருவரிலும் ஒரு நன்மை இருக்கும் என்பதையும் நம்ப வேண்டும்.உங்கள் எழுத்துகள் உங்களை மீண்டும் மீண்டும் பிறக்கச் செய்யட்டும்.இதற்காக இறைவனிடம் வேண்டுகிறேன். எங்களை சிந்திக்கத் தூண்டும் உங்களின் எளிமையான எழுத்துக்களுக்கும்,சிந்தனைகளுக்கும் மிக்க நன்றியும் பாராட்டுக்களும்!!!
Dear Father! On behalf of all the viewers I wish U " Many more Happy Returns of the day!". I invoke the Blessings of The Most High on U, to hold U as ' The Apple of His eyes' and to fulfil all the desires of your heart.May He mould you more and more to use you as His instrument to take His name and fame far and wide and to every nook and corner of this universe.Love& Godbless......
ReplyDeleteVery interesting message... a focussed message on an unnamed character... a message that would relate to many a people...
ReplyDeleteVery interesting message... a focussed message on an unnamed character... a message that would relate to many a people...
ReplyDelete