Thursday, December 10, 2015

நீங்கள் ஆடவில்லை

இன்று காலை மின்னஞ்சலைத் திறந்தவுடன், பேராயர் இல்லத்திலிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. எனக்கு மட்டும் வந்த கடிதம் அல்ல. எல்லா அருட்பணியாளர்களுக்கும் பேராயர் அவர்கள் எழுதியிருக்கிறார்.எல்லாருக்கும் வந்த கடிதம் என்பதால் இதன் உள்ளடக்கத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்.

கடிதம் ஒரு நினைவூட்டல்.

நேரம் தவறாமை வேண்டும்.
செபம் செய்ய வேண்டும்.
அக்கவுண்ட் கீப் அப் பண்ண வேண்டும்.
டெய்லி பங்கு டைரி எழுத வேண்டும்.
ஆண்டு தியானம் செய்ய வேண்டும்.
மாதாந்திர தியானம் செய்ய வேண்டும்.
மறைமாவட்ட நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டும்.
ப்ராஜக்ட் எழுதி கட்டடம் கட்டினால் உடனடியாக ரிப்போர்ட் அனுப்ப வேண்டும்.

இதை வாசித்தவுடன்,
'நான் இவற்றையெல்லாம் இளமைப்பருவமுதல் செய்து வருகிறேனே!'
என்று சொல்லணும்போல இருந்தது.

இன்று மதியம் நான் பணியாற்றும் உரோமை மறைமாவட்டத்தின் பொறுப்பு ஆயர் அவர்களிடமிருந்து ஒரு கடிதம். எல்லா ஆயர்களும் இன்றுதான் கடிதம் எழுதுவார்களோ என்னவோ! இதுவும் நினைவூட்டல் கடிதமே. இதுவும் எல்லாருக்கும் எழுதப்பட்டதே.

அப்படி இதில் என்ன எழுதியிருந்தது?

பங்கு அருட்பணியாளர்களின் மொழி - அன்றாட உரையாடலிலும், மறையுரையிலும் - புதிய கருத்தை முன்வைப்பதாக, உற்சாகப்படுத்துவதாக, ஆறுதல் படுத்தவதாக, எலக்ட்ரானிஃபைட் ஆக இருக்க வேண்டும்.

அருட்பணியாளர்கள் புதியவற்றை கற்றுக்கொள்ள திறந்த மனம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். தங்கள் பங்குத்தளங்களில் உள்ள பொதுநிலையினரின் திறன்களைக் கண்டறிந்து அவற்றை உற்சாகப்படுத்த வேண்டும்.

குடும்பம்தான் ஒரு பங்கின் அடிப்படை அலகு. குடும்பம் சீராக இருந்தால் பங்கு சீராக இருக்கும். பங்குப்பணியாளரே ஒவ்வொரு குடும்பத்தின் ஆன்மீகத்தந்தை என்பதை நினைவில் நிறுத்தி, தன் மந்தையை பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு நெருக்கம் கொண்டிருக்க வேண்டும்.

பிறரன்புச் செயல்கள். நம் கதவுகளைத் தட்டும் அனைவருக்கும் ஏதாவது ஒன்று கொடுத்து அனுப்ப வேண்டும். பொருட்கள் மட்டுமல்ல, அன்பான வார்த்தைகளைக் கூறுவதும், அறிவுரை வழங்குவதும்கூட பிறரன்புப் பணியே.

ஒருங்கமைவு. அருட்பணியாளர்கள் ஒருவர் மற்றவரை உடன்பிறந்த சகோதரர்கள் போல கண்டுபாவித்து, இந்த சகோதரக் குழுமத்தின் தந்தை ஆயர் என்பதை உணர்ந்து, ஒட்டு மொத்த மறைமாவட்டத்தின் வளர்ச்சியை மட்டுமே முன்னிறுத்தி செயல்பட வேண்டும். மறைமாவட்டம் வளராமல் ஒரு சில அருட்பணியாளர்கள் மட்டும் வளர்வது வளர்ச்சி அல்ல. அது வீக்கம். வீக்கம் என்றும் ஆபத்தானது.

இந்த இரண்டு மடல்களையும் அருகருகே வைத்துப் பார்க்கும்போது,

'இன்னும் என்னில் ஏதோ குறைவுபடுகிறதோ?'

என்றே எண்ணத் தோன்றுகிறது.

'நாங்கள் குழல் ஊதினோம். நீங்கள் ஆடவில்லை' என்று ஒருவர் மற்றவரைப் பார்த்துச் சொல்லிக்கொண்டிருப்பதைவிடுத்து ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பாடுபட்டால் அதுவே சால்பு.


5 comments:

  1. உரோமையிலிருக்கும் தந்தை தன் தாய் மண்ணிலிருக்கும் சக அருட்பணியாளர்களோடு சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.'கொல்லன்' பட்டறையில் என் போன்ற சிறு 'விட்டில்களுக்கு' வேலை இல்லைதான்.இருப்பினும் தந்தையின் ஒரு கருத்துக்கு ஒரு பொது நிலையினரின் நிலையிலிருந்து வலு சேர்க்க விரும்புகிறேன். "ஒரு பங்கின் அலகான குடும்பங்களை சீராக்கப் பங்குப் பணியாளர் தான் ஒவ்வொரு குடும்பத்தின் ஆன்மீகத் தந்தை என்பதை நினைவில் கொண்டு தன் மந்தையைப் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு நெருக்கம் கொண்டிருக்க வேண்டும்" என்பதே அது.ஆம் இது சாத்தியமாக வேண்டுமெனில் பங்கு மக்களும் தங்களின் அருட்பணியாளரைத் தங்கள் குடும்பத்தில் ஒருவராக்க் கருதி அவரது சுக,துக்கங்களில் துணை நிற்க வேண்டுமென்பதே என் கருத்து." இன்னும் என்னில் ஏதோ குறைவு படுகிதோ?" எனத்தந்தை தன்னை சுய சோதனைக்கு உட்படுத்துவதும், " நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் ஆடவில்லை" என அடுத்தவரைப் பார்த்துச் சொல்லிக்கொண்டிருப்பதை விடுத்து ஒட்டு மொத்த வளர்ச்சிக்குப் பாடுபட அழைப்பு விடுப்பதும் திருச்சபை நல்ல மார்க்கத்தை நோக்கியே பயணம் செய்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு.தந்தைக்கும்,அனைத்துப் பணியாளர்களுக்கும் எங்கள் செபத்தின் மூலம் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம் என சொல்லிக்கொள்ள விழைகிறேன்.அனைவருக்கும் வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்!!!

    ReplyDelete
  2. A great pastoral post.
    I knew a parish priest in one of the Southern Indian dioceses, who knew almost personally all of the 5000+
    people of the parish area. This means he knew by families, individual names, their educational needs, employment status, even including non Catholic Christians [he had all varieties of Protestants there], Hindus and Moslems. He would meet the families in their joys and sorrows, during birth, death and other major events...And from history: When Fr Henri Henriques SJ died in Punnaikayal @Madurai Mission, it is said that the local Moslems closed their business out of respect for him...

    ReplyDelete
  3. Boss, do not worry, we can not dance fro every body's music just because we are unique and different. God bless you.

    ReplyDelete
  4. Dear Father,thanks for your good sharing of yours.Yes,each parish Priest is a mini Bishop in their kingdom(Parish).So when you take in that way then you have to dance accordingly.

    Let your dance bring joy and growth to the Parish and Diocese.Congrats!!!

    ReplyDelete