Monday, August 18, 2014

உங்கள் கண்ணிலிருந்து துரும்பை எடுக்கட்டுமா?

உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்? அல்லது அவரிடம். 'உங்கள் கண்ணிலிருந்து துரும்பை எடுக்கட்டுமா?' என்று எப்படிக் கேட்கலாம்? (மத்தேயு 7:3-4)

உங்கள் கண்ணிலிருந்து துரும்பை எடுக்கட்டுமா?

அடுத்தவரிடம் இருக்கும் சிறிய குறைகளைச் சரி செய்ய நாம் முயற்சி செய்யுமுன் நம்மிடம் இருக்கும் (பெரிய) குறைகளைக் கவனிக்க வேண்டும் என்பதும் களைய வேண்டும் என்பதே இன்றைய கேள்வி சொல்லும் பாடம்.

நம்மை நல்லவர்கள் என்று காட்டுவதற்கு இலகுவான வழி அடுத்தவர்களைக் கெட்டவர்கள் என்று சொல்லி விடுவது. இந்த இலகுவான வழியை விடுக்கவும் இன்றைய கேள்வி அழைப்பு விடுக்கின்றது.

வேற ஒன்னும் சொல்றதுக்கில்லை!


1 comment:

  1. நான் பள்ளியிலிருந்த போது 'sins of commission'& 'sins of omission' என்று சொல்லிக்கொடுத்துள்ளார்கள்...நாம் செய்யக்கூடாத காரியத்தைச் செய்வதும்,செய்யக்கூடிய நற்செயல்களைத் தவறவிடுவதும் பாவமென்று.தினம் சில நிமிடங்கள் நம்மைநாமே இது குறித்த சோதனைக்குட்படுத்தினால் நாம் அடுத்தவரின் கண்களில் உள்ள துரும்பைப் பார்ப்பதைத் தவிர்க்கலாமே! எல்லோருக்கும் இந்த வாரம் இனிய வாரமாக அமைய வாழ்த்துக்கள்...

    ReplyDelete