Thursday, August 14, 2014

யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?

ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக்கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்' என்றார்கள். (மத்தேயு 2:1-2)

யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?

இந்தக் கேள்வியை கீழ்த்திசை ஞானியர் கேட்கிறார்கள். இந்தக் கேள்வியை ஏரோதைப் பார்த்து அவர்கள் கேட்பதாக விவிலியத்தில் இல்லை. இவ்வளவு நாள் இதை ஏரோதைப் பார்த்து அவர்கள் கேட்டார்கள் என எண்ணிக் கொண்டிருந்தேன். நெருக்கமாக வாசித்தால் இந்தக் கேள்வியை அவர்கள் எல்லாரையும் பார்த்துக் கேட்பதாக நற்செய்தியாளர் எழுதுகிறார். இந்தக் கேள்வி ஏரோது அரசனோடு முடிவடையக் கூடியது அல்ல. ஒவ்வொருவரும் இதற்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதையே நற்செய்தியாளரின் எழுத்து நுட்பம் நமக்குக் காட்டுகிறது.

முதன் முதலாக இயேசுவை அரசராக்கியவர்கள் இவர்கள் தாம். யூதர்களின் அரசன் ஏரோது இருக்கும் இடத்திற்கே போய் 'யூதர்களின் அரசன் எங்கே?' என்று கேட்டால் அவர்களுக்கு எவ்வளவு துணிச்சல். இதில் ஒரு 'ஐரனி' இருப்பதை நாம் பார்க்கின்றோம். ஏற்கனவே அரசாண்டு கொண்டிருக்கும் ஏரோதுவையும் அவனது ஆட்சியையும் ஏற்றுக்கொள்ளாத துணிவையும் இது காட்டுகிறது. நம்ம திருவாளர் மோடிகிட்டேயே போய், அல்லது நம்ம செல்வி லேடி கிட்டேயே போய், 'இந்தியாவின் பிரதமர் எங்கே?' என்றோ, 'தமிழகத்தின் முதல்வர் எங்கே?' என்று சொன்னால் எப்படி இருக்கும்?

இயேசுவின் பிறப்பு அன்னை மரியாளுக்கும், வளனாருக்குமன்றி, இடையர்களுக்கும், ஞானியர்களுக்கும் முன்னறிவிக்கப்படுகிறது.

நம்ம சொந்தக்காரங்களுக்கும் குழந்தை பிறந்திருக்கும் போது, அந்தக் குழந்தையைப் பார்க்க வருபவர்கள் அந்தக் குழந்தையைப் பற்றி ஆருடம் கணிப்பதைக் கேள்விப்பட்டிருப்போம். ஒரு சில குழந்தைகள் பிறப்பதற்கு முன்னதாகவே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை ஒரு சிலர் கணித்தும் சொல்வார்கள்.

எங்க அம்மா என் தங்கையைக் கருத்தாங்கியிருந்த போது ஒரு மதிய வேளை நான் தொட்டிலில் படுத்திருந்தேனாம். திடீர்னு, 'நமக்கு பாப்பா தான் பிறக்கும்! அதுக்கு அனுஞ்சகாயமேரி (அருள் சகாய மேரி)னு பேரு வைக்கணும்!' அப்படின்னா நான் புலம்பினதாகவும், அதன்படியே தங்கை பிறந்ததாகவும் எங்க அம்மா சொல்வாங்க. நான் சொன்னதா எனக்கு ஞாபகமில்லை!

ஆனால் இந்தப் பிரபஞ்சத்தின் சப்கான்சியஸ் மைன்ட் எப்படியோ நம்மிடம் நம் அன்பிற்குரியவர்கள் குறித்துச் சொல்லிவிடுகிறது. இதை டெலிபதி, இஎஸ்பி என்று எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்.
ஞானிகள் இயேசு பிறந்தவுடன் அவரைக் குறித்து தெரிந்து கொள்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் இந்த யுனிவர்சல் சப்கான்சியஸ் மைன்ட் தான். இதனுடன் தொடர்பில் இருப்பவர்கள் எல்லாவற்றையும் முன்னாலே அறிந்து கொள்வார்கள்.

இதற்கு செய்ய வேண்டியதெல்லாம் நம்மோடு ஒரு தொடர்பு ஏற்படுத்திக்கொள்வது தான். இதையே நம்ம சத்குரு 'இன்னர் என்ஜினியரிங்' என அழைக்கிறார். அதாவது, இப்ப நம்ம உட்கார்ந்திருக்கிற ரூமில் எவ்வளவு டிகிரி குளிரோ, வெப்பமோ இருக்க வேண்டும் என நாம் அவுட்டர் என்ஜினியரிங் செய்து ஏசியாகப் பொருத்தியுள்ளோம். இந்த ஏசி நம்ம ரூமின் தட்பவெட்ப நிலையை கட்டுக்குள் வைத்திருக்கிறது. நம்ம மூளை என்னும் ரூமின் இயக்கமும் நம் கட்டுக்குள் இருந்தால்  நாம் பிரபஞ்சத்தோடு தொடர்பு கொள்ள முடியும். நாம் ஒரு வாழ்க்கைத் துண்டு. எல்லாமே நம்ம மைன்ட்ல தான் இருக்கு.

உதாரணத்திற்கு, காலையில நம்ம கேட்டைத் திறந்து வெளியே வருகிறோம் என வைத்துக் கொள்வோம். தெருவில் நமக்கு பிடிக்காத ஒருவர் சைக்கிளில் போகிறார். போகும் போது அவர் சைக்கிள் பெல் அடித்ததை நாம் கேட்டுவிட்டோம். அல்லது பார்த்துவிட்டோம். உடனடியாக நம் மூளை என்ன சொல்லும்: 'அவனுக்கு எவ்வளவு திமிரு பார்த்தியா? யாரும் இல்லாத ரோட்டுல நம்மள பார்த்தவுடனே பெல் அடிக்கிறான்!' இந்த சிந்தனை அப்படியே நம் செயல்பாட்டையும் பாதிக்கிறது. இந்த செயல்பாட்டிற்கு அந்த நபரோ, சைக்கிள் பெல்லோ காரணமல்ல. நம் மூளை நம் கட்டுப்பாட்டில் இல்லாததால் அது தன்பாட்டுக்குச் சிந்திக்கிறது. கான்சியஸாக இருப்பவர்கள் மட்டும் தான் சப்கான்சியஸோடு தொடர்பு கொள்ள முடியும். அன்கான்சியஸாக மூளை செல்லும் பாதையில் எல்லாம் சென்றால் நமக்குத் துன்பமே மிஞ்சும்.

இன்னைக்கு ஒவ்வொரு பொழுதும் நம் மூளையின் இயக்கத்தை என்ஜினியரிங் செய்து பார்க்கலாமே.

சத்குருவின் இன்னர் என்ஜினியரிங் பற்றிய காணொளிக்கு இங்கே சொடுக்கவும்:

What is Inner Engineering?


1 comment:

  1. கான்சியஸாக இருப்பவர்கள் மட்டும் தான் சப்கான்சியஸோடு தொடர்பு கொள்ள முடியும்.உண்மைதான்.இந்தக்கூற்றுக்கு வலு சேர்க்க சத்குருவின் காணொளி கண்டேன்.அவர் கூறுகிறார்: " வெளி உலகத்தின் சகல விஷயங்களையும் நம் உள் மனம்(inner being) ஏற்கும் வண்ணம் நமது கைப்பிடிக்குள் கொண்டுவருகிறோம்.ஆனால் நம் உள்மனத்தையும் நம் உடம்பின் அவயவங்களையும், அவை இயங்கும் முறையையும் நம் எண்ணச்சிறைக்குள் கொண்டுவருகிறோமா? அவற்றிற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்கிறோமா? நம் எண்ண விதைகளின் வீரியத்தைப் பொறுத்துத்தானே நம் செயல்பாடுகளும் அமையும்? நம் அகத்தூய்மையை கவனித்துக்கொண்டால் புறத்தூய்மை தன்னைத்தானே கவனித்துக்கொள்ளும் கொள்ளும்.யோசிப்போம்.யோசிக்க வைத்த தந்தைக்கும் சத்குரு அவர்களுக்கும் என் நன்றிகள்....

    ReplyDelete