Monday, August 5, 2019

உருமாற்றம்

இன்றைய (6 ஆகஸ்ட் 2019) திருநாள்

ஆண்டவரின் உருமாற்றம்

இன்று நம் ஆண்டவரின் உருமாற்றம் அல்லது தோற்றமாற்றத் திருநாளைக் கொண்டாடுகிறோம். தன்னுடைய உள்வட்ட உறவுநிலையில் இருந்த மூன்று சீடர்களின் முன் உருமாறுகின்றார் இயேசு.

'மாற்றம் ஒன்றே மாறாதது'

அன்றாடம் நம் உடலிலும் உள்ளத்திலும் நிறைய மாற்றங்கள் நடக்கின்றன. இம்மாற்றங்கள் பெரும்பாலும் தாக்கத்தை நம்மேல் ஏற்படுத்துவதில்லை. ஆனால், தாக்கத்தை ஏற்படுத்தாத எந்த மாற்றமும் நல்லதல்ல.

இயேசுவின் இயல்பு சீடர்களின் கண்களுக்கு உயர்ந்ததாய்த் தெரிகிறது.

இருப்பதை விட உயர்ந்து நிற்க நினைப்பதும் உருமாற்றமே.

2 comments:

  1. தாக்கத்தை ஏற்படுத்தாத எந்த மாற்றமும் நல்லதல்ல...உண்மையே! ஆனால் நம்மில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் எந்தத் தாக்கமும் மேலிருந்து வருவதால் அது உயர்ந்ததாய்த் தெரிகிறது....உயர்ந்ததாய்த் தெரிய வேண்டுமென்பதும் உண்மையே! ஆகவே தான் ‘ உருமாற்றம்’ என்பது இயேசு ஒருவருக்கே சொந்தமாகிப்போனது.நாமும் உருமாறலாம்....இன்னொரு இயேசுவாக மாற முயன்றால்! முடியுமா? முயல்வோம். “ “மாற்றம் ஒன்றே மாறாத்து”.... வாழ்வின் நிதர்சனத்தைப் புரியவைத்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. “ உள் வட்ட உறவுநிலை”..... இரசிக்கும்படியான சொற்றொடர். தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete