Sunday, August 4, 2019

விந்தை மனிதர்கள்

இன்றைய (05 ஆகஸ்ட் 2019) நற்செய்தி (மத் 14:22-36)

விந்தை மனிதர்கள்

இன்றைய முதல் வாசகம் (காண். எண் 11:4-15) யாவே இறைவனுக்கும் மோசேக்கும் நடக்கும் உரையாடலின் ஒரு பகுதியாக இருக்கிறது. மக்களின் முணுமுணுப்பைக் கேட்டுக் கடவுளிடம் புலம்புகிறார் மோசே. 'எனக்கு ஏன் இந்தக் கேடு? என்மேல் எல்லாப் பளுவையும் சுமத்தியது ஏன்?' என்று புலம்புகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் அப்பம் பலுகச் செய்யும் நிகழ்வில் சீடர்கள் இயேசுவிடம், 'எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை!' என்று புலம்புகின்றனர்.

மோசே தன்னுடன் இருக்கும் கடவுளை மறந்துவிட்டார்.

சீடர்கள் தங்களுடன் இருக்கும் இயேசுவை மறந்துவிட்டார்கள்.

புpரச்சினை என்று வரும்போது இவர்கள் தங்களுக்கு வெளியே பார்க்காமல், அல்லது தங்களைவிட மேலான கடவுளைப் பார்க்காமல் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்கின்றனர். ஆகையால் தான் இவர்கள் புலம்புகின்றனர்.

இவர்களின் புலம்பலுக்கு மற்றொரு காரணம், இந்த உலகமே இவர்கள் தலைமேல் இருப்பதாக நினைத்துக்கொண்டதும்தான். 'எல்லாவற்றையும் என்றால் செய்ய முடியும்!' அல்லது 'என்னால் மட்டுமே செய்ய முடியும்!' ஏன்ற எண்ணம்தான் இவர்களிடம் மேலோங்கி இருந்தது.

ஏந்த ஒரு பளுவும் நாம் ஒரு கை, இறைவன் ஒரு கை என்று இருந்தால் எளிதாகத் தூக்கிச் சுமக்க முடியும். இல்லையா?

யாவே இறைவனும் மோசேயுடன் வழிநடக்கின்றார்.

இயேசுவும் அப்பங்களைப் பலுகச் செய்கின்றார்.

இன்று நம் வாழ்வில் நம் புலம்பல்கள் எவை?

'என்னால் மட்டும் அல்ல. அவராலேயே எல்லாம்!' என்று ஒரு நொடி நினைத்தால் நலம்.


1 comment:

  1. இது பிரச்சனைகளின் உலகம் என்றான பிறகு புலம்பல்களுக்கு எப்படிப் பஞ்சம் இருக்கும்? அத்தனைக்கும் காரணம் ஒரு ‘ ஈகோ’ தான். நானா? அவரா?... யார் பெரியவர்? எந்த ஒரு பளுவையும் நாம் தூக்கி சுமக்க இன்னொரு கை தேவை என உணரும் வரை மட்டுமே இந்தப் புலம்பல்.மோசேயுடன் வழி நடக்கும் யாவே இறைவனையும்,அப்பங்களைப் பலுகச் செய்யும் இயேசுவையும் நம் வாழ்விலும் நுழைய விடுவோம்; அப்பொழுது “ என்னால் மட்டும் அல்ல; அவராலேயே எல்லாம்” .என்று நம்மாலும் நினைக்க இயலும்.துவண்ட மனத்தை துள்ளச்செய்யும் ஒரு பதிவு.தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete