மத்தேயு இயேசு பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகளை வேறுமாதிரி எழுதுகின்றார். 'கனவில் வானதூதர் வருவது' தான் மத்தேயுவின் எழுத்து நடை. 'கனவில் வழி கிடைப்பது' என்ற இலக்கிய நடை தொடக்கநூலின் சில பகுதிகளிலும், தானியேல் நூலிலும் அதிகமாக இருக்கிறது.
லூக்கா நற்செய்தியாளர் மரியாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல, மத்தேயு நற்செய்தியாளர் யோசேப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். யூத சமுதாயம் ஒரு தந்தைவழி சமூகம். ஆகவே, யூத மக்களுக்கு என தன் நற்செய்தியை எழுதும் மத்தேயு இயேசுவின் பிறப்பை தந்தை வழியாகவே அறிமுகம் செய்கிறார்.
நாம் கிறிஸ்து பிறப்பின் போது கொண்டாடும் நட்சத்திரங்கள், வானதூதர்கள், குடில்கள், குகை, மாடு, கழுதை, சத்திரம், மூன்று ஞானியர் அனைத்தும் கொண்டாட்டதிற்குள் வர தூய பிரான்சிஸ் அசிசியே காரணம். சாந்தா கிளாஸ் உருவாகக் காரணமாக இருந்தவர் நிக்கோலாஸ் என்ற மிலன் நகர ஆயர்.
மேலும் கிறிஸ்து பிறப்பை டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடுவதிலும் சிக்கல் இருக்கிறது. பண்டைக்கால ரோமையர் சூரியக் கடவுளுக்கு டிசம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் விழா எடுத்தனர். மேற்கத்திய நாடுகளில் சூரியன் மிக கொஞ்ச நேரம் மட்டும் காட்சி தரும் டிசம்பர் மாதத்தில் சூரியக் கடவுளுக்கு விழா எடுப்பதும் நாம் ஆராய வேண்டிய ஒன்று.
இன்று நாம் கொண்டாடும் அனைத்துக் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும், வரலாற்றில் வௌ;வேறு நாடுகளில், வௌ;வேறு நேரங்களில் தோன்றி ஒருங்கிணைக்கப்பட்டவையே.
இதை ஆங்கிலத்தில் 'லிமினாலிட்டி' என்பார்கள். அதாவது எது எங்கிருந்து வந்தது தெரியாமலேயே, எல்லாம் எல்லாருக்கும் சொந்தமாகி விடுவது. பிட்சா, பிட்சா என்கிறோம். இத்தாலி நாட்டின் நாப்போலி நகரில் பிட்சா பிறந்தாலும் இன்று உலகமெங்கும் அந்தந்த இடத்திற்கு சொந்தமாகிப் போனது 'லிமினாலிட்டி'யின் ஒரு உதாரணம்.

"லிமினாலிட்டி"... எனக்கு முற்றிலும் புதிய வார்த்தை.இவ்வார்த்தை ' பிட்சா'வுக்கு மட்டுமல்ல, எங்கோ விதைக்கப்பட்டு,எங்கோ பிறந்து ,வளர்ந்து பலப்பல காரணங்களுக்காக இடம் பெயர்ந்து,புலம் பெயர்ந்து வந்து விழுந்த இடத்தில் தன்னைச்சுற்றியுள்ள அனைத்து மனிதரையும் எந்த எதிர்பார்ப்புமின்றி நேசிக்கிறார்களே...அத்துணைத் தாயுள்ளங்களுக்கும் கூடப் பொருந்தும்...நன்றிகள்.
ReplyDelete