Sunday, October 12, 2014

ஒரு இறையியில் நிகழ்வு போல

ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது.
ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது.
இராகேல் தம் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கிறார்.
ஆறுதல் பெற அவர் மறுக்கிறார்.
ஏனெனில் அவர் குழந்தைகள் அவரோடு இல்லை.
(மத்தேயு 2:17-18)

மத்தேயு மாசில்லாக் குழந்தைகள் படுகொலையின் போது குறிப்பிடும் இந்த இறைவாக்கு எரேமியா 31:15லிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த இறைவாக்கின் பின்புலத்தைப் பார்க்க தொநூ 35:16-19க்குச் செல்ல வேண்டும். இராகேல் பென்யமினின் பிறப்பின் போது இறந்து போகின்றார். பென்யமின் என்பவர் தான் யாக்கோபின் கடைசி, அதாவது, பன்னிரண்டாவது குழந்தை.

தாய் இறந்த ஒரு நிகழ்வை குழந்தைகள் இறந்த நிகழ்வுக்கு ஏன் மத்தேயு ஒப்பிடுகிறார் என்பது வியப்பாக இருக்கிறது.

இயேசுவின் வியத்தகு பிறப்பை எழுதுவதற்கே மத்தேயு இந்த நிகழ்வை எழுதுகிறார். மாசில்லாக் குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு வரலாற்றுச் சான்றுகள் இல்லை.

இப்படியாக மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் இயேசுவின் பிறப்பை வரலாற்று நிகழ்வைப் போல அல்லாமல், ஒரு இறையியில் நிகழ்வு போலப் பதிவு செய்கிறார்கள்.


1 comment:

  1. எந்த ஒரு வரலாற்று நிகழ்வுமே இறையியல் நிகழ்வு போன்று பதிவு செய்யப்படும் போது அந்த நிகழ்வின் நம்பகத்தன்மை(authenticity) கூடுகிறது.ஆனால் இங்கு மகன் பெஞ்சமினின் பிறப்பின் போது இறக்கும் இராக்கேல் எனும் தாய் எப்படித்தன் மக்களுக்காக அழ முடியும்? விளங்கவில்லை...இந்த வார்ம இனியதொரு வாரமாகட்டும்!

    ReplyDelete