நாளை நாம் தீப ஒளித்திருநாளைக் கொண்டாடுகிறோம்.
தீமையின் மேல் நன்மை கொள்ளும் வெற்றியாக, இருளின் மேல் ஒளி கொள்ளும் வெற்றியாக, அறியாமையின் மேல் ஞானம் கொள்ளும் வெற்றியாகவே இது உருவகம் செய்யப்படுகிறது.
வீடு கூட்டி, தண்ணீர் தெளித்து, செல்வத்தின் தெய்வமாம் லட்சுமியை வணங்கி, வானவேடிக்கை, இனிப்பு, புத்தாடை என்று கொண்டாடப்படும் இந்தத் தீபஒளித் திருநாள் நம் இல்லத்திலும், உள்ளத்திலும் ஒளி ஏற்றட்டும்.
தீபஒளித் திருநாள் வாழ்த்துக்கள்.
"தீப ஒளித்திருநாள்"..இது நம் இந்து சகோதர்ருக்கான விழா என்று அட்டவணைபடுத்தப் பட்டிருப்பினும் எல்லோருமே கொண்டாட வேண்டிய ஒன்றுதான்.நம் மனத்தில் உள்ள 'நரகாசுர்ர்களை வெளியேற்றி ஒளியாம் இறைவனைக் குடியமர்த்தும் நாள்.கொண்டாடுவோம்.அனைவருக்கும் மகிழ்ச்சியான,பாதுகாப்பான தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்!
ReplyDelete