Tuesday, October 21, 2014

சூசன்னா - 1

இன்று பழைய ஏற்பாட்டு கிரேக்க நூலான சூசன்னாவைப் படிக்கத் தொடங்கினோம். தானியேலின் 13ஆவது அதிகாரமாக இது பல விவிலிய மொழிபெயர்ப்புகளில் வழங்கப்பட்டாலும், தமிழ் மொழிபெயர்ப்பு இதை ஒரு தனி நூலாகவே முன்வைக்கிறது. வெறும் 64 வசனங்கள் கொண்ட இந்த நூலைக் கண்டிப்பாக வாசியுங்கள். சரியா? பக்கம் எண்கள்: 207-210.

சூசன்னா என்ற ஒரு பெண்ணை மையமாக வைத்து எழுதப்பட்ட நூல் இது.

இதன் பின்புலம் 'ரேப்' - அதாவது, பாலியல் வன்முறை.

எதற்காக ரேப் பெரிய குற்றமாகக் கருதப்படுகிறது? ஒரு பெண்ணை இருப்பது போல, கறைபடியாமல் ஏற்றுக்கொள்ள விரும்புகிறது ஆண் மனம். ரேப்பின் பின்னால் இருக்கும் கோபத்திற்குக் காரணம் ஆணாதிக்கம். ஆணாதிக்கம் உள்ள சமுதாயத்தில் மட்டுமே ரேப் ஒரு பெரிய குற்றமாகக் கருதப்படுகிறது.

சூசன்னா என்ற பெண்ணை முதியோர் இருவர் கவர்ந்து கொள்ள நினைப்பதாகத் தொடங்குகிறது நூல்.

இவர்களை முதியோர் என்று கிரேக்க விவிலியம் சொல்லவில்லை. வயது வந்தவர்கள் என்று சொல்கிறது. அதாவது, ஏறக்குறைய முப்பது முதல் நாற்பது வயது இருக்கும்.

'இதனால் அவர்கள் தங்கள் மனத்தைத் தகாத வழியில் செல்லவிட்டார்கள். விண்ணக இறைவனை நினையாதவாறும் நீதித் தீர்ப்புகளைக் கருதாதவாறும் அவர்கள் நெறிமாறிச் சென்றார்கள்' என்று அவர்களின் மனநிலை சித்தரிக்கப்படுகின்றது.

ஆக, ரேப் செய்ய முனைவதற்கு முன்பே இந்த வயது வந்தவர்கள் செய்த முதல் குற்றம் எதை நினைக்க வேண்டுமோ அதை நினைக்காமல் போனதே!


2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. சூசன்னாவின் 64 வசனங்களையும் வாசித்துப் பார்த்தேன்.அந்த முதியவர்களைப் புறம்பே தள்ளிவிட்டுப் பார்க்கையில் அபலகைகளின் குரலுக்கு செவிசாய்ப்பவர் நம் இறைவன் என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. செய்வதறியாது இக்கட்டான நிலையில் ஆண்டவனை உதவிக்கு அழைத்தபோது தானியேலின் வடிவில் வந்து அவளைக் காப்பாற்றுகிறார்.மற்றபடி ஆண்கள் இருக்கும் வரை இவ்வுலகில் ஆணாதிக்கமும் இருக்கத்தான் செய்யும்.எங்கே போய் தேடுவது 'ஆணில்லா' உலகத்தை? ஆண்களுக்குக் கோபம் வரலாம்.ஆனால் அதுதானே உண்மை!?

    ReplyDelete