Thursday, October 2, 2014

தி ஸ்டோரி ஆஃப் மை லைஃப்


கடந்த மூன்று நாட்களாக ஹெலன் கெல்லர் அவர்களின் தன்வரலாற்று நூல் 'தி ஸ்டோரி ஆஃப் மை லைஃப்' வாசித்தேன்.

பிறக்கும் போதே மற்ற குழந்தைகளைப் போல பிறந்தாலும் 19 மாத குழந்தையாக இருந்தபோது கடுமையான மூளை நோயால் பாதிக்கப்பட்டு பேசும், கேட்கும் திறனை இழந்தார். இதோடு கொஞ்சம் பார்வைக் கோளாறு வேறு. இப்படியாக வாழ்வின் பாதையே அடைக்கப்பட்டுவிட்டதே என்று பெற்றோர் புலம்பிக் கொண்டிருந்தபோது விடிவெள்ளியாக வருகிறார் அவரின் ஆசிரியை 'ஆன்னி சல்லிவன்'.

தன் வாழ்க்கையை இந்தக் குழந்தையின் வாழ்க்கைக்காக அர்ப்பணித்த சல்லிவனின் தியாகம் வியப்பாகவே இருந்தது.

நன்றி!

1 comment:

  1. இந்தப்பதிப்பின் முகவரியாக வரும் வரிகள் முத்தான வரிகள்.." உண்மையான மகிழ்ச்சி என்பது நாம் நமக்கு நாமே அளிக்கும் திருப்தியிலோ இல்லை மகிழ்ச்சியிலோ அல்ல..ஆனால் ஒரு நல்ல குறிக்கோளுக்காக நாம் காட்டும் அர்ப்பணத்தில்தான் இருக்கிறது" ..உண்மைதான்.அடுத்தவரின் மகிழ்ச்சிக்காகத்தன் மகிழ்ச்சியைத்தியாகம் செய்யும் ஆயிரம் 'சல்லிவன்கள்' இன்றும் இருக்கிறார்கள்.ஆனால் அவர்களைப் பயன்படுத்திக்கொள்ள எத்துணை ஹெலன் கெல்லர்கள் இருக்கிறார்கள்? அவர்களை நாமும் தேடலாமே!...

    ReplyDelete